Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் முதல் மனிதனை கடவுள் இங்குதான் படைத்தார் என்றால் நம்புவீர்களா?

உலகின் முதல் மனிதனை கடவுள் இங்குதான் படைத்தார் என்றால் நம்புவீர்களா?

உலகம் ஒரு பெருவெடிப்பினால் உருவானதாக சில அறிஞர்கள் கூறிவிட்டனர். அதை பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்டும் விட்டனர். ஆனால் இந்தியாவின் நம்பிக்கை வேறு. ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாக இதை எடுத்துக்கொள்ள முடியாது

By Udhaya

உலகம் ஒரு பெருவெடிப்பினால் உருவானதாக சில அறிஞர்கள் கூறிவிட்டனர். அதை பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்டும் விட்டனர். ஆனால் இந்தியாவின் நம்பிக்கை வேறு. ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாக இதை எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், கடவுள் நம்பிக்கை இருப்பவர்களின் நம்பிக்கை படி, உலகை தோற்றுவித்தவன் அந்த சிவபெருமான். அவரின் அசைவுகளுக்கு ஏற்ப இந்த உலகம் ஆடிக்கொண்டிருக்கிறது. உலகைப் படைத்து முடித்ததும் பல்வேறு ஜீவ ராசிகளை படைக்க முடிவு செய்தார் சிவபெருமான். முதலில் உலகில் ஒரு மனிதனைப் படைக்க எத்தனித்தார். தன் சக்தியால் சப்தமாரிகா எனும் ஏழு தாய்க்கடவுள்களைப் படைத்தார். அந்த இடம் தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ளது. வாருங்கள் அந்த பகுதி மக்களின் நம்பிக்கைச் சார்ந்த இந்த இடத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

ராவண பாடி

ராவண பாடி

ஏஹோல் வரும் பயணிகள் ராவண பாடியையும் பார்ப்பது அவசியம். இது ஏஹோல் பகுதியில் உள்ள பழையான குகைக்கோயிலாகும். செவ்வக வடிவத்தில் அமைந்துள்ள இந்த சிவனுக்கான கோயில் 6ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இந்தக் கோயிலில் இரண்டு மண்டபங்கள், சிவலிங்கம் மற்றும் கருவறை போன்றவை அமைந்துள்ளன.

அமைப்பு

செதுக்கப்பட்ட தூண்களைக்கொண்ட இந்தக் கோயில் கருவறை சைவமரபுப்பாணியில் ஒரு அறை மற்றும் மூன்று வாசல்களைக்கொண்டுள்ளது.தென்மேற்கை நோக்கியுள்ள இந்த கோயிலின் வாயிலின் மேல் இணையாக ஒரு உடைந்த உத்திரம் காணப்படுகிறது. கோயிலின் இருபுறமும் உள்ள பள்ள அமைப்பில் தனியாக இரு சிறு கோயில்கள் அமைந்துள்ளன. இந்த உள் மற்றும் வெளிச்சுவற்றில் சிவனின் பலவிதமான நடன நிலை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சப்தமாத்ரிகா (ஏழு தாய்க்கடவுள்கள்) சிற்பங்களுக்கு மத்தியில் சிவனின் தாண்டவ சிற்பங்கள் அமைந்திருப்பது இந்த குகைக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

IM3847

 உலக அதிசயங்களுள் ஒன்று

உலக அதிசயங்களுள் ஒன்று

ஏஹோல் பகுதியில் பல்வேறு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை பாணியில் அமைந்துள்ள கோயில்களும், பாறைக்குடைவு சிற்பங்களும் பக்தியுள்ள மனங்களை மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மனங்களையும் மெய்மறக்கச் செய்யும் வல்லமை படைத்தவை.சாளுக்கிய ராஜவம்சத்தினரால் கட்டப்பட்ட பல பாறைக்குடைவு கோயில்களையும் சிற்பங்களையும் இந்த ஏஹோல் நகரம் கொண்டுள்ளது. சாளுக்கிய சாம்ராஜ்யத்தின் மஹோன்னத கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை நுட்பங்களின் வாழும் சாட்சியமாக இந்த ஏஹோல் நகரத்தில் உள்ள கோயில்கள் காலத்தில் நீடித்து நிற்கின்றன.

G41rn8

அம்பிகேரகுடி

அம்பிகேரகுடி

10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படும் அம்பிகேரகுடி மூன்று கோயில்களின் தொகுப்பில் ஒன்றாகும். ஏஹோல் கோட்டைக்கு வெளியே துர்கா கோயில் மற்றும் சிக்கிகுடிக்கு அருகில் இந்த மூன்று கோயில்களின் தொகுப்பு காணப்படுகிறது. மேலும் இந்த மூன்று கோயில்களின் தொகுப்பில் இருக்கும் பெரிய கோயிலில் ரேக்காநகர பாணியில் அமைந்த தூண்கோபுரமும் அடங்கியுள்ளது. இது 10 நூற்றாண்டைச்சேர்ந்ததாக அறியப்படுகிறது. இன்னும் பல பிரமிக்க வைக்கும் சிறு கோயில்களும் இந்த ஸ்தலத்தில் காணப்படுகின்றன.

IM3847

மேகனகுடி

மேகனகுடி


மேகனகுடி அல்லது மெகுடி என்றழைக்கப்படும் ஜைன கோயில் திராவிட சிற்பக்கலையை கொண்டுள்ளது. ஏஹோலுக்கு வரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய கோயில் தொகுப்பு இது. இது ஒரு மலைப்பாறை மீது அமைந்திருக்கும் 5ம் நூற்றான்டில் கட்டப்பட்ட கோயில் ஒன்றையும் உள்ளடக்கியுள்ளது. இரண்டு அடுக்குகளைக்கொண்டுள்ள இந்தக்கோயிலில் இயற்கையாய் அமைந்த குகை ஒன்றும் காணப்படுகிறது. இந்த கோயிலின் மையத்தில் காணப்படும் அறை கர்ப்பகிருகமாய் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பின்புறத்தில் அந்தரல எனப்படும் எதிர்மூலஸ்தானமும் பிரதட்சணப்பாதையும் அமைந்துள்ளது. முன்புறத்தில் தூண்களுடன் காணப்படும் மண்டபம் உள்ளது.

Manjunath Doddamani Gajendragad

 கல்வெட்டுக்குறிப்பு சொல்லும் பழமை

கல்வெட்டுக்குறிப்பு சொல்லும் பழமை

ஏஹோல் கல்வெட்டு என்று பிரசித்தமாக அறியப்படும் கி.பி 634ம் ஆண்டுக்குரிய கல்வெட்டுக்குறிப்பு இந்த கோயிலின் வெளிச்சுவரில் காணப்படுகிறது. இந்த கோயில் தொகுப்பின் தென்கிழக்குப்பகுதியில் உள்ள கோயில் ஒரு சிறிய ஜைனக்குடைவறைக்கோயிலாக உள்ளது. இது ஒரு சுவர், வெளித்திண்ணை, கருவறை போன்றவற்றை கொண்டுள்ளது. கருவறையில் ஐந்தடி உயர பஹுபாலி சிலையும், தீர்த்தங்கரர்களின் புடைப்புச்சிற்பங்களும் காணப்படுகின்றன. கருவறையின் மேற்பாகத்தின் மீது அமைக்கப்பட்ட மற்றொரு சிறு கரவறையும் இங்கு காணப்படுகிறது. இது பின்னாளில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. மற்றுமொரு முக்கிய அம்சமாக இந்தக்கோயில் 16 உத்தரங்களைக்கொண்ட வெளிப்பிரகார விதானத்தை கொண்டுள்ளது.

Alende devasia

 ஹுச்சிமல்லி குடி

ஹுச்சிமல்லி குடி


சிவன் மற்றும் பிரம்மாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள கோயில்களின் தொகுப்பு இந்த ஹுச்சிமல்லி குடி கோயில்களாகும். 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த புராதனக்கோயில்கள் ஏஹோல் வழிச்செல்லும் எல்லா பயணிகளும் பார்க்க வேண்டிய ஒரு ஸ்தலமாகும். இங்குள்ள கருவறையில் ஜன்னல்கள் காணப்படுகின்றன. இதன் மீது ஒரு ரேக்காநகர(வட இந்திய பாணி கோபுரம்) கோபுரமும் உள்ளது. ஒரு பிரதட்சணப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

Ms Sarah Welch

சுகநாசி

சுகநாசி

பின்னாளில் இக்கோயிலின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு அடையாளமாக ஒரு எதிர் மூலஸ்தானமும் அர்த்தமண்டபமும் பிரதான கோயிலுடன் இணைத்து எழுப்பப்பட்டுள்ளது. இது இந்த ஸ்தலத்தின் அழகை மேலும் கூட்டுகிறது. சுகநாசி எனப்படும் கருவறைப்பாதை இந்த கோயிலில்தான் முதன்முதலாக அமைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ஹுச்சிமல்லிகுடிக்கு வடக்குத்திசையில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மற்றொரு சிறிய கோயிலும் உள்ளது.

Jean-Pierre Dalbéra

மலப்பிரபா

மலப்பிரபா

மலப்பிரபா ஆற்றின் கரையில் அமைந்துள்ள எட்டு கோயில்களின் தொகுப்பு ஏனியர் கோயில்கள் என்று அறியப்படுகிறது. 12ம் நூற்றாண்டில் இந்தக் கோயில்கள் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. முன்விதானம், மண்டபம், நிலவறை போன்ற அம்சங்கள் இந்த கோயில்களின் கூடுதல் அம்சங்களாக உள்ளன. ஏஹோல் போகும் பயணிகள் நேரம் இருந்தால் இங்கு விஜயம் செய்யலாம்.

Mukul Banerjee

 உலகின் முதல் மனிதனை சிவபெருமான் படைத்த இடம்

உலகின் முதல் மனிதனை சிவபெருமான் படைத்த இடம்

இதன் அருகே கலகநாக கோயில்கள் என்று அழைக்கப்படும் சில கோயில்கள் காணப்படுகின்றன. இங்குதான் மனிதன் முதலாக படைக்கப்பட்டதாக இப்பகுதி மக்களால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்பப்பட்டு வந்திருக்கிறது. சிவபெருமான் இந்த இடத்தில் பூமியில் தோன்றி, மனித இனத்தை படைப்பது பற்றி, கங்கை மற்றும் யமுனையுடன் பேசியதாக கூறப்படுகிறது. சிவனுக்கான கோயிலாக உருவாக்கப்பட்ட வளைவான கோபுரத்தைக்கொண்டுள்ளது. இதன் நுழைவாயிலில் கங்கா, யமுனா போன்ற நதிக்கடவுள்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன.மேலும் இந்தக்கோயில் ஒரு பிரகாரம், கருவறை, ஒரு உள்பிரகாரம் மற்றும் ரேகநகர கோபுரம் போன்றவற்றை கொண்டுள்ளது.

Sanyam Bahga

 இன்னும் எக்கச்சக்க இடங்கள்

இன்னும் எக்கச்சக்க இடங்கள்

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் இந்த பகுதியில் இன்னும் ஏராளமான இடங்கள் இருக்கின்றன. அவை வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. ஹலபசப்பண்ணகுடி, படிகேரகுடி, ஏனியர் கோயில், திரியம்பகேஷ்வரா கோயில், ரச்சி குடி கோயில், ஹூச்சப்பய்ய குடி, ராமலிங்கா தொகுப்பு கோயில்கள் என எக்கச்சக்கம். இங்கு சுற்றுலா சென்று பார்வையிட ஒரு நாள் பத்தாது. இரண்டு அல்லது மூன்று நாள் சுற்றுப் பயணமாக சென்றால் எல்லா இடங்களையும் புகைப்படமெடுத்துவிட்டு வரமுடியும்.

Dineshkannambad

More News

Read more about: travel temple tour trip
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+