Search
  • Follow NativePlanet
Share
» »யானைகளால் வளர்க்கப்பட்ட மல்லம்மா! ஆச்சர்யங்கள் நிறைந்த இடம்

யானைகளால் வளர்க்கப்பட்ட மல்லம்மா! ஆச்சர்யங்கள் நிறைந்த இடம்

மதனப்பள்ளி நகருக்கு வெகு அருகாமையில் அமைந்திருக்கும் ஹார்ஸ்லி குன்று மிகவும் பிரசித்தி பெற்ற கோடை கால மலைவாசஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. அதோடு மதனப்பள்ளி நகரம் பெங்களூர், ஹைதராபாத், திருப்பதி போன்ற நகர

By Udhaya

மதனப்பள்ளி நகருக்கு வெகு அருகாமையில் அமைந்திருக்கும் ஹார்ஸ்லி குன்று மிகவும் பிரசித்தி பெற்ற கோடை கால மலைவாசஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. அதோடு மதனப்பள்ளி நகரம் பெங்களூர், ஹைதராபாத், திருப்பதி போன்ற நகரங்களிலிருந்து சுலபமாக அடையும் தொலைவில் இருப்பதால் அந்த பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஹார்ஸ்லி குன்றில் தங்கள் கோடை காலங்களை கழிக்க கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். நாமும் இந்த இடத்துக்கு சென்று பார்க்கலாமா?

எனுகு மல்லம்மா

எனுகு மல்லம்மா

ஹார்ஸ்லி குன்று முன்பு எனுகு மல்லம்மா கொண்ட என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. இங்கு முன்னொரு காலத்தில் மல்லம்மா என்றொரு பெண் யானைகளால் வளர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த சிறிய பெண்ணின் நினைவாகவே இந்தக் குன்று அந்நாளில் எனுகு மல்லம்மா கொண்ட என்ற பெயரால் அறியப்பட்டது. இந்தப் பெண் அந்நாட்களில் நோய்வாய்ப்பட்ட பழங்குடி மக்களை பராமரித்து வந்ததாகவும், இதன் காரணமாக மல்லம்மா ஒரு நாள் திடீரென மாயமானதும் குறிப்பிடத் தக்கது.

rajaraman sundaram

ஹார்ஸ்லி குன்றுகள்

ஹார்ஸ்லி குன்றுகள்

இதே குன்றில் அம்மக்கள் அவளுக்கு கோயில் கட்ட எண்ணியதாகவும் பற்பல நம்பிக்கைகள் இங்கு நிலவி வருகின்றன. இதன் பிறகு W.D.ஹார்ஸ்லி என்ற ஆங்கிலேய அதிகாரி இந்தக் குன்றில் கராச்சி அறை மற்றும் பால் மாளிகை ஆகிய கோடை கால ரிசார்ட்டுகளை உருவாக்கியதால் அவர் பெயராலேயே ஹார்ஸ்லி குன்று என்ற பெயரை இந்தக் குன்று பெற்றது.

NAYASHA WIKI

ராமண்ணா பட்டணம்

ராமண்ணா பட்டணம்


சீமாந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான மதனப்பள்ளி, ஆரம்ப காலத்தில் மரியாதை ராமண்ணா பட்டணம் என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டு வந்தது. அதன் பிறகு 19-ஆம் நூற்றாண்டின் முடிவில்தான் இந்த நகரம் மதனப்பள்ளி என்று அழைக்கப்பட தொடங்கியது. மதனப்பள்ளி நகரின் பெயர் குறித்து கூறப்படும் சுவையான கதையை தவிர இந்த நகரம் இந்தியாவில் அதிகமாக வருவாய் ஈட்டித்தரும் பகுதியாக கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது

rajaraman sundaram

கோடைக்கால மலை வாழிடம்

கோடைக்கால மலை வாழிடம்

மதனப்பள்ளி நகரம் விவசாயத் துறையில் வேகமாக வளர்ந்து வருவது பலரும் அறிந்திடாத செய்தி. இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் நல்ல தரத்துடன் இருப்பதால் இந்தியா முழுதும் இதற்கு கடும் கிராக்கி நிலவுகிறது. மதனப்பள்ளி நகரம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருவதற்கு மூல முதல் காரணமாக விளங்குவது ஹார்ஸ்லி குன்றே ஆகும். அதுவும் சீமாந்திராவின் சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்கும் அற்புதமான மலைவாசஸ்தலமாக ஹார்ஸ்லி குன்று கருதப்படுவதால் ஆந்திரா மற்றும் அருகாமை பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கோடை காலத்தை இந்த மலைப்பகுதியில் கழிக்கவே விரும்புகிறார்கள்.

suffering_socrates

 ஜன கன மன

ஜன கன மன

மதனப்பள்ளி நகரில் நடந்தேறிய ஒரு முக்கிய நிகழ்ச்சி இந்திய வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதாவது மகாகவி ரபீந்தரநாத் தாகூர் இந்திய தேசிய கீதத்தை மதனப்பள்ளி நகரில் எழுதியதோடு, இங்கேயே அதற்கு இசை அமைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

rajaraman sundaram
https://commons.wikimedia.org/wiki/Category:Horsley_Hills#/media/File:ROCKY_HORSLEY_HILLS_AP_-_panoramio.jpg

 அருகிலுள்ள இடங்கள்

அருகிலுள்ள இடங்கள்

மதனப்பள்ளி நகரின் பனிக் காலங்களை தவிர மற்ற பருவங்களில் மிகவும் சூடான வானிலையே நிலவும். எனவே பயணிகள் மதனப்பள்ளி நகரை சுற்றிப் பார்க்க பனிக் காலங்களே பொருத்தமானதாகவும், ஏற்றதாகவும் இருக்கும். மேலும் மதனப்பள்ளி நகரிலிருந்து 115, 157, 93, 125 கிலோமீட்டர் தொலைவுகளில் முறையே திருப்பதி, பெங்களூர், சித்தூர், புட்டப்பர்த்தி போன்ற நகரங்கள் அமைந்திருப்பதால் மதனப்பள்ளி நகரை அடைவது ஒன்றும் கடினமான காரியமாக இருக்காது.

rajaraman sundaram

More News

    Read more about: travel temple hills
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+