» »பஞ்சாங்கத்தை நம்புபவரா நீங்கள்? பிப்ரவரி 1 2019 ல் உலகம் அழியப்போகிறதாம்!

பஞ்சாங்கத்தை நம்புபவரா நீங்கள்? பிப்ரவரி 1 2019 ல் உலகம் அழியப்போகிறதாம்!

Written By: Udhaya

உலகம் அழியப்போகிறது என்று நிறைய பேர் நிறைய கட்டுரைகளை எழுதிவிட்டனர். அதையும் நம்மில் பலர் நம்பியும் நம்பாமலும் நிறைய செய்தாகிவிட்டது. டிசம்பர் 21, 2012 இப்படித்தான் நிறைய கதைகள் பரவின. மாயன் காலண்டர் முடிந்துவிட்டது. உலகம் அழியும் என நிறைய தகவல்கள் அங்கங்கு பரவிக் கிடந்தன. அதே நேரத்தில் இந்தியாவிலும் சில கூற்றுகள் இருந்தன. உலகம் அழியப்போகிறது என்று இந்திய இடங்கள், கோயில்கள், சித்தர்கள் கூறியுள்ளதாக பரவி வரும் தகவல்கள் குறித்தும் அந்தந்த இடங்கள் குறித்தும் இந்த பதிவில் காணலாம்.

பிரம்மரிஷி மலை

பிரம்மரிஷி மலை

முக்காலமும் உணர்ந்த தலையாட்டி சித்தர் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கவாய்ப்புண்டு. அவர் இன்றளவும் வாழும் பிரம்மரிஷி மலையில் நடக்கும் விநோத செயல்பாடுகள் குறித்து இந்த பதிவில் காண்போம். அதுமட்டுமில்லாது, மலையேற்றம் என்பது தற்போதைய இளைஞர்களிடையே பரவி வரும் புதுப்பிக்கப்பட்ட கலாச்சாரமாகும். உண்மையில் நீங்களும் டிரெக்கிங் சென்று பாருங்கள் மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள் பிரம்மரிஷி மலை என்பது தலையாட்டி சித்தரின் இருப்பிடம் மட்டுமல்லாது, மொத்தம் 210 சித்தர்கள் இப்போதும் வாழ்ந்துவருவதாகவும், அவர்கள் பல அதிசயங்களை நிகழ்த்துவதாகவும் பரவலாக பேச்சு இருக்கிறது. அதுபற்றி தெரிந்து கொள்வதற்காகவும், பிரம்மரிஷி மலையின் அழகை கண்டு பிரம்மிப்பதற்காகவும் இந்த பயணத்தைத் தொடர்வோம்.

உலகம் அழிவைப் பற்றி

உலகம் அழிவைப் பற்றி


பிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மகத்தான சக்தி படைத்தது.இங்குள்ள மலையின் மீது அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுவது போல மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. அவர் எழுதிய காலஞானம் நூலில் வருங்காலத்தில் நடக்கும் பல அதிசயமான தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அதுபற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல் 2020க்குள் உலகில் நடக்கப் போகும் பல விஷயங்கள் பற்று அந்நூலில் கூறப்பட்டுள்ளதாம். அதில் உலகம் 2019ம் ஆண்டு தொடக்கத்திலேயே அழியும். இங்கு வாழும் உயிர்களில் சில மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்று எழுதப்பட்டிருப்பதாக செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது முக்கியமானது.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

பெரம்பலூர் மாவட்டத் தலைநகரிலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது எலம்பலூர். தேசிய நெடுஞ்சாலை 38 வழியாகச் செல்கையில் 2கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில்தான் பிரம்மரிஷி மலை உள்ளது

 சிவன் மலை

சிவன் மலை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ளது சிவன் மலை. இந்த சிவன் மலை மீது அமைந்துள்ளது அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில். இந்த கோயில் ஒரு கண்ணாடி பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் உத்தரவு பெட்டி. இதில் என்ன வைக்கப்பட்டுள்ளதோ அது தொடர்பான நல்லதோ, கெட்டதோ விரைவில் நடைபெறும். இந்த கோயிலின் மூலவர் பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட பொருளை கூறி வழிபடு என்று சொல்வாராம். அதன்படியே பக்தரும் கோயில் நிர்வாகிகளிடம் பேசி அந்த பொருளை பூசைக்கு வைத்து அந்த பெட்டியில் இடுவார்கள்.

உலக அழிவைக் குறிக்கும்

உலக அழிவைக் குறிக்கும்


இதற்கு முன் ஒருமுறை இந்த பெட்டியில் உவர் நீர் வைத்து வழிபட்டனர். உள்ளூர் நபர் ஒருவருக்கு ஆண்டவர் கனவில் வந்து சொன்னதாக கூறப்பட்டது. அதன்பின்னர் சில நாட்களிலேயே சுனாமி ஏற்பட்டது. பின்னர் இரும்பு சங்கிலி வைத்து வழிபட்டனர் இந்த கோயிலின் பக்தர்கள். அந்த முறைதான் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகினர் சசிகலா சகாக்கள். இந்த முறை உலக உருண்டையை வைத்து பூசை செய்யச்சொல்லி ஆண்டவர் கட்டளையிட்டிருப்பதாக கூறப்படுகிறது. உலக உருண்டை ஒன்றை ஆண்டவர் உத்தரவு பெட்டிக்குள் வைத்தாகிவிட்டது. இதன் பிறகு நிறைய பொருள்கள் வைக்கப்பட்டது. எனினும், இந்த உலக உருண்டை வைக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சிகரமானது என்று சிலர் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இது உலக அழிவைக் குறிக்கவுள்ளதாக கூறுகின்றனர் அவர்கள்.

உலகம் அழியும்

உலகம் அழியும்

சிரியாவில் நடைபெறும் போர், வடகொரியா - அமெரிக்கா பிரச்சனை என உலகம் நாளுக்கு நாள் கலவரமாகிக்கொண்டே போகிறது. இந்நிலையில் இந்த கோடை வருவதற்கு முன்னரே பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஒருவேளை இந்த ஆண்டு முடிவதற்குள்ளாகவே உலகம் அழியும் என்று அக்கோயிலின் பக்தர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுவும் அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஏனென்றால், இது பக்தர்களின் நம்பிக்கை மட்டுமே. துல்லியமாக எதையும் கூறுவதில்லை இந்த முறை. குத்துமதிப்பாகத்தான் இது நிகழ்கிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

கொல்லிமலை

கொல்லிமலை


கொல்லிமலை, இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீட்டர் உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.
Lavenderguy

கொல்லிமலை சொல்லும் சேதி

கொல்லிமலை சொல்லும் சேதி

இந்த கொல்லிமலையில் வாழ்ந்துவரும் சித்தர்களும் உலகம் அழிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறுகின்றனராம். இது காலம்காலமாக சொல்வதுதான் என்றாலும், இதைக் கேட்கும்போது கொஞ்சம் பீதி வருவதை தவிர்க்கமுடியவில்லை. இப்படித்தான் 2012ம் ஆண்டு முடியும்தருவாயில் உலகம் அழியும் என்று புரளி கிளம்பியது. ஆனால் அப்படி எதும் நடக்கவில்லை.

Docku

ஹரிஷ்சந்திரகட் கோயில்

ஹரிஷ்சந்திரகட் கோயில்


மகாராஷ்டிர மாநிலத்தில் காணப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த கோயில்தான் "ஹரிஷ்சந்திரகட் கோயில்". தானே மாவட்டத்தில் அமைந்துள்ள கிரேஷ்வர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளதுதான் இந்த கோயில். இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இது 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இதற்கு தகுந்த ஆதாரங்களும் உள்ளதாக தெரிகிறது. ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு அருகில் "கேதாரேஷ்வர்" என்ற ஆச்சரிய குகையினை காணலாம். இந்த குகைக்குள் சென்றால் பல மர்ம முடிச்சுகள் அவிழும் என்று கூறப்படுகிறது.

தூண் விழுந்தால் உலகம் அழியும்

தூண் விழுந்தால் உலகம் அழியும்

குகைக்கு உள்ளே சென்றால் அங்கு நீரினால் சூழப்பட்ட சிவலிங்கம் ஒன்றை பார்க்கலாம். இந்த சிவலிங்கமானது 5 அடி உயரம் கொண்டது. இதன் அருகில் சென்று வழிபடுவது என்பது மிகவும் ஆபத்தானது. இந்த சிவலிங்கத்தை சுற்றி காணப்படும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். சாதாரண சூழ்நிலையில் இதை கடந்து லிங்கத்தை அடைவதே சற்று கடினம் தான். அப்படி இருக்க குளிர் காலங்களில் செவ்லதென்பது மிகவும் சிரமமானது. மேலும் மழைக்காலங்களில் இக் குகையை சென்றடைவது கணிப்புக்கு மீறிய விசயமாகும். இந்த நான்கு தூண்களும், "சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம்" ஆகிய நான்கு யுகங்களை தெளிவு படுத்துவதாக நம்பப்படுகின்றது. நான்கு யுகங்கள்தான் உள்ளது என புராணம் கூறுவதாக நம்பப்படுகிறது.

பத்மநாபசுவாமி கோயில்

பத்மநாபசுவாமி கோயில்


கலியுகம் தொடங்கி சரியாக 964 நாள்கள் கழித்து இந்த கோயில் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. அப்படி பார்க்கையில் இந்த கோயில் நமக்கு சொல்லவருவது என்ன என்பது கேட்பவருக்கு மர்மமாகவும், அச்சமாகவும் உள்ளது. இந்த கோயில் பற்றி கேள்விப்படுபவர்கள் உலகம் அழியப் போகிறது என்று பீதி கொள்கின்றனர். இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ள விஷ்ணு சிலை தூங்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளதாக கருத்து உண்டு. அதாவது அந்த சிலை விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பதை போன்று இருக்கிறது. இந்த மர்ம அறை திறக்கப்பட்டால் உலகம் அழியும் என பத்மநாபசுவாமியின் பக்தர்கள் திடகாத்திரமாக நம்புகின்றனர். இதனால்தான் திறக்க மறுக்கின்றனர் அவர்கள்.

செப்டம்பர் 23 - டெட்லைன்

செப்டம்பர் 23 - டெட்லைன்

கவலைப் படாதீர்கள். கடந்த செப்டம்பர் மாதம்தான். இதனை டேவிட் மிடே என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்திருக்கிறார். அவரது கணக்குப்படி வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதி உலகம் அழியும் என்கிறார். டேவிட்டின் கோட்பாட்டின் படி நிபிரு எனப்படுகின்ற ‘ப்ளானெட் எக்ஸ்' பூமியை நோக்கி வந்த அந்த கிரகம் பூமியை ஆகஸ்ட் 21 ஆம் தேதி மோதிடும். ஒரு மாதத்தில் அதாவது செப்டம்பர் 23,2017 அன்று உலகம் முழுவதும் அழிந்திடும் என்று கூறினார். சரி நம்பிக்கைகளை புறந்தள்ளிவிட்டாலும்கூட, இது அறிவியல் கூற்று ஆயிற்றே எப்படி புறந்தள்ளுவது என்று பலர் நினைத்திருந்தவேளையில் இந்த கூற்றும் பொய்யானது.

 பிப்ரவரி 1 2019

பிப்ரவரி 1 2019


இப்படித்தான் மீண்டும் புரளிகள் கிளம்புகின்றன. இந்த முறையும் அறிவியல் ரீதியாக கிளப்பிவிடுகின்றனர் என்றே தோன்றுகிறது. இது மொத்த கண்டங்களையும் தூசுதட்டி பார்த்துவிடுமாம். அன்றையதினம் காலை 11.47 மணிக்கு உலகம் துடைக்கப்பட்டுவிடும் என்று செய்திகள் பரவி வருகின்றன. மேலும் தெரிந்துகொள்ள கூகுளின் உதவியை நாடுங்கள். நாம் வேறு சுற்றுலாத் தளங்களைப் பற்றி பார்க்கலாம்.

Read more about: travel, temple