Search
  • Follow NativePlanet
Share
» »ஏழை மக்களுக்காகவே புதிய ‘புஷ் புல்’ ரயில்கள் – வசதியில் வந்தே பாரத் ரயிலுக்கு இணையானது!

ஏழை மக்களுக்காகவே புதிய ‘புஷ் புல்’ ரயில்கள் – வசதியில் வந்தே பாரத் ரயிலுக்கு இணையானது!

வந்தே பாரத் ரயிலை போலவே அனைத்து அம்சங்களும், வசதிகளும் அடங்கிய 'புஷ் புல்' ரயில்கள் (Push pull trains) தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏழைகளும் சிறுபான்மையினரும் நடுத்தர வர்க்கத்தினரும் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே, அனைத்து வசதிகளும் அடங்கிய 'புஷ் புல்' ரயில்கள் குறைந்த கட்டண சேவையில் விரைவில் வரவிருக்கிறது!

மேம்பட்ட சேவைகளை வழங்கும் இந்திய ரயில்வே

மக்களின் பயணங்களை மறக்கமுடியாததாக மாற்றுவதற்கு இந்திய ரயில்வே புதிய மாற்றங்களையும், அமசங்களையும் அவ்வப்போது கொண்டு வருகிறது. புதிய ரயில்களை அறிமுகப்படுத்துதல், ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்தல், ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு (OSOP) திட்டம், PMBJK ஸ்டால்களை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் அதன் உள்கட்டமைப்பு மற்றும் பயணிகளின் மேம்பாட்டை மேம்படுத்த இந்திய ரயில்வே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

1

தினமும் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயணம்

ஆசியாவின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய ரயில் நெட்வொர்க்காக செயல்படும் இந்திய ரயில்வே நாளொன்றுக்கு 10,000 க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்குகிறது, அதில் சுமார் 7,000 பயணிகள் ரயில்கள் அடங்கும். ஒவ்வொரு நாளும் 10 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை இந்திய ரயில்வே கையாள்கிறது.

ஏழைகளுக்கான வந்தே பாரத் - புஷ் புல் ரயில்

ரயில்களில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் நலிவடைந்த பிரிவினர் அல்லது குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர். வந்தே பாரத் ரயில்கள் போன்ற வசதியான ரயில்களில் செல்வது அவர்களுக்கு ஆசையாக இருக்கலாம், ஆனால் அவர்களின் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது. எனவே, இந்த பிரிவினரின் பயண அனுபவத்தை அதிகரிக்கும் வகையில், இந்திய ரயில்வே புதிய ரயிலை அறிமுகப்படுத்துகிறது, அது தான் - புஷ் புல் ரயில்.

சென்னையில் அட்டகாசமாக தயாராகி வரும் புஷ் புல் ரயில்

புஷ் புல் ரயில்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற அனுபவத்தை பயணிகள் பெறலாம். சென்னையைச் சேர்ந்த இன்டெக்ரல் கோச் பேக்டரி (ICF) LHB (Linke Hofmann Busch) பெட்டிகளுடன் கூடிய புஷ் ரயிலை தயாரித்து வருகிறது. இந்த ரயில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். அமர்ந்து செல்லும் இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் கோச்கள் இந்த ரயிலில் இருக்கும்.

வந்தே பாரத் ரயிலுக்கு இணையான வசதிகள்

புஷ் புல் ரயில்கள் இந்த வகை பயணிகளுக்கு அற்புதமான பயண அனுபவத்தை வழங்கும். அம்சங்களில் கழிப்பறைகள், டாக்பேக் சிஸ்டம், பாதைகளில் தொடர்ச்சியான விளக்குகள், மேம்படுத்தப்பட்ட உட்புறங்கள், மூடிய வெஸ்டிபுல்கள், ஃபயர் அலாரம் மற்றும் சார்ஜிங் பாயிண்ட்கள் ஆகியவை அடங்கும்.

மொத்தம் 22 பெட்டிகள்

இந்த ரயிலின் 22 பெட்டிகளில் 8 அமரும் பெட்டிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் லக்கேஜ்களுக்கான இரண்டு பெட்டிகள் மற்றும் 12 ஸ்லீப்பர் பெட்டிகள் இருக்கும். ஒரு இன்ஜின் பின்புறத்திலும் மற்றொன்று முன்புறத்திலும் இருக்கும். ஏசி அல்லாத பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத மற்றும் ஸ்லீப்பர் 3 அடுக்கு பெட்டிகள் இருக்கும்.

அக்டோபர் மாதத்தில் சோதனை ஓட்டம்

புஷ் புல் ரயில்கள் சென்னையின் ஐசிஎஃப்-ல் கட்டப்பட்டு வருகின்றன, மேற்கு வங்காளத்தில் உள்ள சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் அவற்றை தயாரிக்கும். ரயில்கள் இந்திய ரயில்வேயில் நுழைந்தவுடன் புதிய பெயரைப் பெற்று 2023 அக்டோபர் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+