Search
  • Follow NativePlanet
Share
» »வித்தியாசமான இரவு சுற்றுலாவை அறிமுகப்படுத்த இருக்கும் ராஜஸ்தான்!

வித்தியாசமான இரவு சுற்றுலாவை அறிமுகப்படுத்த இருக்கும் ராஜஸ்தான்!

ராஜஸ்தானின் பாரம்பரியமும், கலாச்சாரமும், காலம் கடந்த கோட்டைகளும், அரண்மனைகளும் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. பொழுதுபோக்கை விரும்புபவர்கள், சாகச விரும்பிகள், வரலாற்று ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் என அனைத்து விதமான சுற்றுலாப்பயணிகளுக்கும் ஏதோ ஒன்று ராஜஸ்தானில் உள்ளது. இப்போது புதிதாக இதில் ஒரு அம்சம் சேர இருக்கிறது. அதுதான் முழு நிலவு சுற்றுலா (ஃபுல் மூன் டூரிஸம்), வித்தியாசமாக இருக்கிறது அல்லவா!

ஆஸ்ட்ரோ-ஸ்கை சுற்றுலாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம்

ஆஸ்ட்ரோ-ஸ்கை சுற்றுலாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம்

இந்தியாவில் ஆஸ்ட்ரோ-ஸ்கை சுற்றுலாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் ராஜஸ்தான் தான். இப்போது இதனுடன் ஃபுல் மூன் டூரிஸமும் இணைக்கப்பட உள்ளது. ஆஸ்ட்ரோ ஸ்கை டூரிஸத்தின் கீழ் 38 தொலைநோக்கிகளை வாங்குவதற்கு ஏற்கனவே மாநில அரசு அனுமதி உள்ளது. இதற்காக மாநில அரசு 33 மாவட்டங்களில் முகாம்களை அமைத்துள்ளது.

இப்போது ஃபுல் மூன் டூரிஸம்

இப்போது ஃபுல் மூன் டூரிஸம்

மாநில அரசால் தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் கீழ், வசீகரிக்கும் அரண்மனைகள் மற்றும் கோட்டைகளுக்கு கூடுதலாக, பயணிகள் மாநிலத்தின் விண்மீன் அழகைக் காணலாம். ராஜஸ்தான் முன்பு ஸ்டார்கேசர்கள் மற்றும் ஆஸ்ட்ரோ பிரியர்களிடையே மிகவும் பிரபலமான இடமாக இருந்தபோதிலும், இந்த முயற்சி அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

வித்தியாசமான இரவு அனுபவம்

வித்தியாசமான இரவு அனுபவம்

அமர் கோட்டை, ஜந்தர் மந்தர், மகாராஜா பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர் கலா கேந்திரா ஆகிய இடங்களில் நீங்கள் முழு நிலவு சுற்றுலாவை கண்டு களிக்கலாம். அதனுடன் அஸ்ட்ரோபோட்டோகிராபி வொர்க்ஷாப் மற்றும் ஸ்டார்கேசிங் போன்ற அற்புதமான நிகழ்வுகளை அனுபவிக்கலாம். எனவே நீங்கள் ராஜஸ்தானுக்கு செல்லும் போது ஜெய்சால்மர், மவுண்ட் அபு, பார்மர் அல்லது சரிஸ்கா போன்ற இடங்களுக்குச் சென்று முழு நிலவு சுற்றுலாவில் ஈடுபடுங்கள்!

Read more about: mount abu barmer sariska rajasthan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X