Search
  • Follow NativePlanet
Share
» »நாம் இறந்தபின்பு நம் ஆன்மாவை சுமந்து செல்லும் எலிகள் பற்றி தெரியுமா?

நாம் இறந்தபின்பு நம் ஆன்மாவை சுமந்து செல்லும் எலிகள் பற்றி தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலத்தின் 'ஒட்டக தேசம்' என்று அழைக்கப்படும் பிக்கனேர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகிய குக்கிராமம் தேஷ்நோக். இச்சிறிய கிராமம் 'கர்ணி மாதா கோயில்' எனப்படும் துர்கை கோயிலுக்காக மிகவும் புகழ்பெற்றது.

இந்த கர்ணி மாதா கோயில் எலிக் கோயில் என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. ஏன் இது எலிக்கோயில் என்று அழைக்கப்படுகிறது, எலிகளுக்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கலாம்!

படித்துப் பாருங்கள் : இந்தியாவிலுள்ள வினோதமான ஹிந்து கோயில்கள்!

எலிகளை வணங்குவோம்!!!

எலிகளை வணங்குவோம்!!!

இந்தியாவில் வேறெங்கும் நீங்கள் கர்ணி மாதா கோயிலை போன்று எலிகளை வணங்கும் வினோத வழிபாட்டு முறையை காண முடியாது. இதன் காரணமாகவே இந்தக் கோயில் எலிக் கோயில் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

படம் : Ingrid Truemper

20,000-க்கும் மேற்பட்ட எலிகள்!

20,000-க்கும் மேற்பட்ட எலிகள்!

கர்ணி மாதா கோயில் கபாஸ் என்று அழைக்கப்படும் 20,000-க்கும் மேற்பட்ட எலிகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது.

படம் : oggiscienza

கர்ணி மாதாவின் எதிர்கால குழந்தைகள்!

கர்ணி மாதாவின் எதிர்கால குழந்தைகள்!

எலிகள் அனைத்தும் 'சரண்ஸ்' எனும் பெயர்கொண்ட கர்ணி மாதாவின் எதிர்கால குழந்தைகளின் ஆன்மாக்களை சுமந்து கொண்டு திரிவதாக தேஷ்நோக் கிராமத்தை சேர்ந்த மக்கள் நம்புகின்றனர்.

படம் : dalbera

புனித எலிகள்!

புனித எலிகள்!

கர்ணி மாதா கோயிலிலுள்ள எலிகள் புனிதமாக கருதப்படுவதால் பக்தர்கள் இந்த எலிகளிடம் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பக்தர்களின் கால் பாதங்களில் இந்த எலிகளின் ஸ்பரிசம் படுவது நற்பேற்றின் அடையாளமாக நம்பப்படுகிறது.

படம் : Arian Zwegers

மஹாராஜாக்களின் குலதெய்வம்!

மஹாராஜாக்களின் குலதெய்வம்!

கோயிலின் முதன்மை தெய்வமான கர்ணி மாதா, துர்கா தேவியின் அவதாரமாக கருதப்படுகிறது. அதோடு பிக்கனேர் மகாராஜாக்கள் தங்கள் குலதெய்வமாக கர்ணி மாதாவையே வணங்கி வந்தனர்.

20-ஆம் நூற்றாண்டு கோயில்

20-ஆம் நூற்றாண்டு கோயில்

கர்ணி மாதா கோயில் 20-ஆம் நூற்றாண்டில் கங்கா சிங் மகாராஜாவால் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கோயிலின் மார்பிள் முகப்பும், மிகப்பின் வெள்ளிக் கதவுகளும் கங்கா சிங் மகாராஜாவால் கட்டப்பட்டவை. அதன் பிறகு 1999-ஆம் ஆண்டு ஹைதராபாத்தைச் சேர்ந்த குந்தன்லால் வர்மா என்பவரால் புதுப்பிப்பு பணிகள் நடந்தேறின.

படம் : Rakesh bhat29

எலிகளாக மறுபிறப்பு எடுத்த கர்ணி மாதாவின் பிள்ளைகள்

எலிகளாக மறுபிறப்பு எடுத்த கர்ணி மாதாவின் பிள்ளைகள்

கர்ணி மாதாவின் வளர்ப்பு மகன் லக்ஷ்மணன், 'கபில் சரோவர்' என்ற குளத்தில் தண்ணீர் அருந்தும்போது நீரில் மூழ்கி இறந்துவிட்டான். இதனால் வருத்தமடைந்த கர்ணி மாதா, யமனிடம் லக்ஷ்மணனை மீண்டும் உயிர்பித்து தருமாறு மன்றாடினாள். ஆனால் முதலில் விடாப்பிடியாக மறுத்த யமன், இறுதியில் லக்ஷ்மணனும், கர்ணி மாதாவின் மற்ற குழந்தைகளும் எலிகளாக மறுபிறப்பு எடுப்பார்கள் என்று வரமளித்தார். அந்த வரத்தின் காரணமாக கர்ணி மாதா கோயிலில் எலிகளாக அவரது மகன்கள் பிறந்துள்ளனர் என்று புராணம் கூறுகிறது.

படம் : oggiscienza

இறந்த எலிகள் தங்க எலிகளாகும்!!!

இறந்த எலிகள் தங்க எலிகளாகும்!!!

கர்ணி மாதா கோயிலில் உள்ள 20,000 எலிகளில் ஏதேனும் ஒன்று இறந்துபோனால் அதற்கு பதிலாக தங்கத்தில் எலி ஒன்றை செய்து கோயிலில் வைத்து வழிபடுகிறார்கள்.

படம் : Fulvio's photos

வெள்ளை எலிகள்

வெள்ளை எலிகள்

கர்ணி மாதா கோயிலில் காணப்படும் ஆயிரமாயிரம் எலிகளில் மிகச்சிறிய அளவில் வெள்ளை எலிகளையும் பார்க்க .முடியும். அப்படி நீங்கள் வெள்ளை எலிகளை கண்ணுறும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.

படம் : Avinashmaurya

எலிகளின் எச்சம்!!!

எலிகளின் எச்சம்!!!

எலிகள் கொறித்து மிச்சம் வைத்த அவைகளின் எச்சம் பட்ட பிரசாதத்தை நாம் உண்டால் வேண்டியவை நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

படம் : Schwiki

நடைதிறப்பு

நடைதிறப்பு

கர்ணி மாதா கோயில் காலை 4 மணியிலிருந்து பக்தர்களுக்காக திறந்திருக்கும். இங்கு அதிகாலையிலேயே அர்ச்சகர்கள் மங்கள ஆரத்தி நடத்தி விடுவார்கள். அப்போதே கோயிலில் அங்குமிங்கும் எலிகள் நடமாடத் தொடங்கிவிடும்.

படம் : dalbera

கர்ணி மாதா திருவிழா

கர்ணி மாதா திருவிழா

கர்ணி மாதா திருவிழா ஆண்டின் இரு சமயங்களில் நடத்தப்படுகிறது. இவற்றில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மிகப்பெரிய விழாவாகவும், செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் சிறிய அளவிலும் கர்ணி மாதா திருவிழா கொண்டாடப்படுகிறது.

படம் : dalbera

ஓடி விளையாடும் எலிகள்

ஓடி விளையாடும் எலிகள்

கர்ணி மாதா கோயிலில் அங்குமிங்கும் ஓடி விளையாடும் எலிகள்.

படம் : Shakti

நுழைவாயில்

நுழைவாயில்

கர்ணி மாதா கோயிலின் நுழைவாயில்.

படம் : Pablo Nicolás Taibi Cicare

மார்பிள் சிலை

மார்பிள் சிலை

கர்ணி மாதா கோயிலில் காணப்படும் அழகான மார்பிள் சிலை.

படம் : dalbera

முற்றம்

முற்றம்

கர்ணி மாதா கோயிலின் முற்றம்.

படம் : Pablo Nicolás Taibi Cicare

சுதந்திர எலிகள்

சுதந்திர எலிகள்

கோயிலின் மூலை முடுக்குகளெல்லாம் சுதந்திரமாக சுற்றித்திரியும் எலிகள்.

படம் : Shakti

பாதுகாப்பு வலை

பாதுகாப்பு வலை

எலிகளின் பாதுகாப்புக்காக கர்ணி மாதா கோயிலுக்குள் பறவைகள் வரமுடியாதபடி பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டுள்ளது.

படம் : dalbera

அற்புத வேலைப்பாடுகள்

அற்புத வேலைப்பாடுகள்

கர்ணி மாதா கோயிலைச் சுற்றி மார்பிள்களில் இதுபோன்ற அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளை காணலாம்.

படம் : dalbera

தட்டில் என்ன இருக்கு?

தட்டில் என்ன இருக்கு?

தட்டில் என்ன இருக்கு என எட்டிப் பார்க்கும் எலிகள்!!!

படம் : Abdel Sinoctou

பால் அருந்தும் எலிகள்

பால் அருந்தும் எலிகள்

பல எலிகள் ஒன்றாக சேர்ந்து தட்டில் வைக்கப்பட்டிருக்கும் பாலை அருந்தும் காட்சி.

படம் : koen_photos

எப்படி அடையலாம்?

எப்படி அடையலாம்?

தேஷ்நோக் கிராமத்திற்கு அருகில் இருக்கும் உள்நாட்டு விமான நிலையமாக ஜோத்பூரும், வெளிநாட்டு விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையமும் அறியப்படுகின்றன. மேலும் ஜோத்பூர் நகரில் உள்ள ரயில் நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு ஆக்ரா, டெல்லி, அஜ்மீர், ஜோத்பூர், அஹமதாமாத், ஜெய்ப்பூர், கோட்டா உள்ளிட்ட நகரங்களிலிருந்து பிக்கனேர் நகருக்கு எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே பயணிகள் பிக்கனேர் நகருக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் வெகு சுலபமாக தேஷ்நோக் கிராமத்தை அடைந்து விடலாம்.

படம் : dalbera

எப்போது வரலாம்?

எப்போது வரலாம்?

தேஷ்நோக் கிராமத்தில் ஆண்டு முழுவதும் கடுமையான வெப்பநிலையே நிலவும். எனவேகர்ணி மாதா கோயிலுக்கு வர திட்டமிடுபவர்கள் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்க வருவதுதான் சிறந்த தேர்வாக இருக்கும்.

படம் : Ian Armstrong

வரைபடம்

வரைபடம்

கர்ணி மாதா கோயில் எங்கே இருக்கிறது என்பதை விளக்கும் வரைபடம். தேஷ்நோக் கிராமத்தில் உள்ள கர்ணி மாதா கோயில் பாகிஸ்தான் எல்லைக்கு வெகு அருகிலேயே, பிக்கனேர் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. (பிக்கனேர் நகரம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.)

இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more