Search
  • Follow NativePlanet
Share
» »திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2022 – தேதி, நேரம், எப்படி விளக்கேற்றுவது – தகவல்கள் உள்ளே!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2022 – தேதி, நேரம், எப்படி விளக்கேற்றுவது – தகவல்கள் உள்ளே!

திருக்கார்த்திகை தீபத்திருநாள் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் காலம் காலமாக கொண்டாடப்படும் ஒரு பழமையான பண்டிகையாகும். சங்க இலக்கியங்களிலும், புராணக்கதைகளிலும் கூட திருக்கார்த்திகை திருநாள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பஞ்சப்பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்ட பின்னரே நாம் அனைவரும் நம் வீட்டில் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்நாளில் சிவபெருமானின் நாம் ஏற்றும் ஜோதி வடிவத்தில் காட்சி தருகிறார். தீபத்திருநாளின் நேரம், தேதி, சிறப்புகள், வழிபடும் முறை ஆகியா தகவல்கள் இதோ கீழே!

பழமையான திருக்கார்த்திகை திருவிழா

பழமையான திருக்கார்த்திகை திருவிழா

நம் மனித வாழ்வில் தீபம் என்ற ஒன்று இன்றியமையாததாக இருந்து வருகிறது. விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், அதன் தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் கூட புராணங்களில் சொல்லப் பட்டிருக்கிறது. தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் அனுசரிக்கப்படும் தீபத் திருவிழாவான இது தமிழ் நாட்காட்டியின்படி கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த விழா எப்போது ஆரம்பித்தது என்பதற்கான சரியான தகவல்கள் இல்லை. அந்த அளவிற்கு இந்த திருவிழா பழமையானதாம்!

திருவண்ணாமலை மகாதீபம்

திருவண்ணாமலை மகாதீபம்

சிவபெருமானுக்கான முக்கிய பஞ்சப்பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்குகிறது. இந்த ஸ்தலத்தில் மலையே அந்த சிவபெருமானாக காட்சி தருகிறார். அந்த புனித மலை மீது 2700 மீட்டர் உயரத்தில் ஒரு டன் திரி கொண்டு, 3500 லிட்டர் நோய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்படும். அந்த நேரத்தில் 'அண்ணாமலையானுக்கு அரோகரா' என்ற பக்தர்கள் எழுப்பும் முழக்கம் விண்ணைப் பிளக்கும். அந்த நேரத்தில் ஒளி பிழம்பில் சிவபெருமான் ஆசீர்வாதம் நம்மை தொடுவதை நாம் உணரலாம். நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் ஒழிந்து நன்மை வெளிப்பட சிவபெருமானை நாம் உள்ளுருகி வேண்டிக் கொள்ள வேண்டாம். எண்ணிய காரியம் நிறைவேறும்.

கார்த்திகை தீபம் 2022

கார்த்திகை தீபம் 2022

தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்த திருக்கார்த்திகை தீபத்திருநாள் இந்த ஆண்டு கார்த்திகை 20 ஆம் தேதி, அதாவது டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. முன்னதாக, அன்று காலை 4 மணியளவில், மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் 24 அன்று கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா துவங்குகிறது. டிசம்பர் மாதம் 6 அன்று மலையுச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் தொடர்ந்து ஏழு நாட்கள் எரியவிடப்படும்

விளக்கு ஏற்றும் முறை

விளக்கு ஏற்றும் முறை

அடிவாசலில் வைக்கப்படும் இரு விளக்குகள் மட்டும் புதியதாக இருந்தால் போதும். நீங்கள் ஏற்கனவே முந்தைய கார்த்திகை தீபத்திற்கு உபயோகப்படுத்திய பழைய விளக்குகளையே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஏற்றவேண்டிய விளக்குகள் அனைத்தையும் முந்தைய நாளே சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். துடைத்து, மஞ்சள், குங்குமமிட்டு பூ வைத்து திரி போட்டு, எண்ணெய் ஊற்றி தயார் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். விளக்கு ஏற்றும் போது, அதற்கு விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். மீதி எண்ணெய்களில் விளக்கு ஏற்றக்கூடாது. அதனால் எந்த நன்மையும் பயக்காது.

விளக்கு ஏற்றுவதால் வரும் நன்மைகள்

விளக்கு ஏற்றுவதால் வரும் நன்மைகள்

திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். இந்த 27 விளக்குகள், 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது. 27 விளக்குகள் ஏற்ற முடியாதவர்கள், குறைந்தது 9 தீபங்களை ஏற்றலாம். முக்கியமாக ஒற்றைப்படை எண்ணிக்கையில் விளக்கை ஏற்றுவது சிறப்பு. வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நினைத்த காரியங்கள் கைக்கூட தீபம் ஏற்றுங்கள்

நினைத்த காரியங்கள் கைக்கூட தீபம் ஏற்றுங்கள்

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த காரியங்கள் கைகூடும்.

இரு முகம் ஏற்றினால் - குடும்பங்களில் நன்மை நாடாகும்.

மூன்று முகம் ஏற்றினால் - புத்திர இன்பம் கிடைக்கும்.

நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்.

ஐந்து முகம் ஏற்றினால் - சகல நன்மைகளும் உண்டாகும்.

உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ அனைத்தையும் மனமுருகி வேண்டிக்கொண்டு தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுங்கள். எம்பெருமான் நல்லதையே நடத்தி வைப்பார்.

திருவண்ணாமலை மகாதீபத்தை காண ஒரு வாய்ப்பு

திருவண்ணாமலை மகாதீபத்தை காண ஒரு வாய்ப்பு

மகாதீபம் திருவண்ணாமலை மலை உச்சியில் மாலை 6 மணிக்கு ஆரவாரமாக ஏற்றப்படும். இந்த தீபத்திருவிழாவில் கலந்துக் கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை நோக்கி படையெடுப்பார்கள். இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். தீபத்தன்று இங்கு வந்து வழிபட்டு, அரோகரா சொல்லி முழக்கமிட்டு பக்தி பரவசத்தில் திளைத்திடலாம். ஆனால் எல்லோராலும் தீபத்தன்று இங்கு வர முடிவது இல்லை. ஆனால் மகா தீபம் தொடர்ந்து ஏழு நாட்கள் எறியவிடப்படும். ஆகவே உங்களால் இந்த ஏழு நாட்களில் எப்போது முடிகிறதோ அப்போது வந்து சிவபெருமானின் ஆசி பெற்று சென்றிடுங்கள். மறக்காமல் தீபத்திருநாளன்று வீட்டில், அலுவலங்களில், கடைகளில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். எண்ணிய காரியம் கைகூடும்! ஓம் நமசிவாய!

More News

    Read more about: tiruvannamalai tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+