Search
  • Follow NativePlanet
Share
» »இப்படியும் சில ஏரிகள் நம்ம இந்தியாவில் இருக்காம்! தெரியுமா?

இப்படியும் சில ஏரிகள் நம்ம இந்தியாவில் இருக்காம்! தெரியுமா?

ஏரிகள் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் இந்த ஏரிகள்.. இவைகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?

இந்தியாவின் நீர்நிலைகளில் கடலுக்கு அடுத்தபடியாக ஆறுகளும் ஏரிகளும் இருக்கின்றன. ஏரிகள் குடிநீருக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் இருக்கின்றன. அவற்றின் தன்மையைப் பொறுத்து நல்லநீர் ஏரி உப்பு நீர் ஏரி என இரண்டு வகையாக பிரிக்கிறோம். ஏரிகளில் நன்னீர் ஏரிகள் குடிநீருக்காகவும், உப்பு நீர் ஏரிகள் படகு போக்குவரத்து உள்ளிட்ட சுற்றுலா சிறப்புகளையும் கொண்டு விளங்குகின்றன. வாருங்கள் இந்தியாவின் உப்பு நீர் ஏரிகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

சாம்பார் ஏரி

சாம்பார் ஏரி

இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி என்றால் அது சாம்பார் ஏரிதான். காண்பதற்கு அழகாகவும், உவர்ப்பு நீரையும் கொண்டு சுற்றுலாப் பயணிகளைத் தன்னை நோக்கி ஈர்ப்பதில் சாம்பார் ஏரிக்கு நிகர் அதுதான். இந்த ஏரிக்கு பல சிறப்புகளும் இருக்கின்றன.

NASA

எங்கே உள்ளது

எங்கே உள்ளது

ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை எண் 8 வழியாக அஜ்மீர் நகரத்திலிருந்து 64 கிமீ வடக்கு திசையிலும் ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து தென் திசையில் 96 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

Abhishek.cty

சாம்பார் ஏரியின் சிறப்புகள்

சாம்பார் ஏரியின் சிறப்புகள்

இது 5700 ச கி மீ பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட ஏரி ஆகும்

ஆயிரம் ஆண்டுகளாக இந்த ஏரியின் நீர் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

கோடையில் 40 டிகிரி செல்சியஸ் வரையிலும் குளிர்காலத்தில் 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் இந்த பகுதி கொண்டிருக்கிறது.

Kalidas Singh

 லோனார் ஏரி

லோனார் ஏரி

லோனார் எனும் ஊரில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 1.8 விட்டமுள்ள மிகப்பெரிய விண்கல் விழுந்ததினால் உருவானது தான் இந்த லோனார் ஏரியாகும். இதுவும் உப்பு நீர் ஏரிதான். இங்கும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

V4vjk

 எங்குள்ளது

எங்குள்ளது

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் லோனார். இங்குள்ள ஏரிக்கு அந்த ஊரின் பெயரே நிலைத்துவிட்டது. இது வரலாற்று பெருமை வாய்ந்த ஒரு ஏரி.

Pranabk

 லோனார் சுற்றுலா

லோனார் சுற்றுலா

அதீத விசையுடன் பூமியில் விழுந்ததன் காரணமாக கிட்டத்தட்ட 1.8கி.மீ அகலமும் 449அடி ஆழமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருக்கிறது. இந்த ஏரிக்கு புர்னா மற்றும் பென்கங்கா என்ற இரண்டு சிறிய ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது. இங்கு அநேகமாக மக்கள் மாலை வேளைகளில் வந்து பார்வையிடுகின்றனர். லோனாரில் சூரிய உதயத்தையும்,அஸ்தமன காட்சியையும் நிச்சயம் தவற விடக்கூடாது.

Trusharm512

 சிலிக்கா உப்பு ஏரி

சிலிக்கா உப்பு ஏரி

ஒடிசா மாநிலத்தின் பூரி,குர்தா மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் பரவியுள்ள நீர்நிலை இந்த சிலிக்கா ஏரி ஆகும். இது சமீபகாலங்களில் புகழ்பெற்றுவரும் சுற்றுலாத்தளமாகும். இது உப்பு நீர் அடர்த்தி கொண்ட ஏரி ஆகும். இங்கு சிறிய அளவில் மீன்பிடித்தலும், படகு சவாரியும் நடைபெறுகிறது.

Ankur P

 பறவைகளைக் காணலாம்

பறவைகளைக் காணலாம்

இடம்பெயர்ந்து வரும் பறவைகளை ரசிப்பதற்காக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாளடைவில் இந்த ஏரியின் சுற்றுலா அம்சங்கள் தொடர்ந்து அதிகரிப்பதையடுத்து தொடர்ச்சியாக வருகை தருகின்றனர்.

இந்த ஏரியின் சுற்றுப்புறத்தில் 132 கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு 160 வகையான பறவை இனங்கள் வருகைதருவதாக அறியப்படுகிறது

Rajanikant Mishra

சிலிக்கா சுற்றுலா

சிலிக்கா சுற்றுலா

டால்பின் பாயிண்ட், மங்களஜோதி,தாரதாரணி கோயில், நாலபனா பறவைகள் சரணாலயம், சட்டபடா, நாராயணி கோயில், நிர்மல்ஜரா தீவு, சங்குடாதீவு,பறவைகள் தீவு, பனாப்பூர், தேனிலவுத் தீவு ஆகியன நீங்கள் மறக்காமல் காணவேண்டிய இடங்களாகும்.

Ankur P

புலிகேட் எனப்படும் பழவேற்காடு ஏரி

புலிகேட் எனப்படும் பழவேற்காடு ஏரி

தமிழகத்தின் எல்லையில் அமைந்த இந்த ஏரிக்கு நிறைய சிறப்புகள் உண்டு. இந்த ஏரிக்கரை மக்களின் வாழ்வாதாரமே இந்த ஏரிதான். ஏரியிலிருந்து அருகே ஒட்டியே கடல் இருக்கிறது. காலாங்கி மற்றும் ஆரணி ஓடைகளிலிருந்து இங்கு நீர் வந்து சேருகிறது.

McKay Savage

பழவேற்காடு ஏரி சுற்றுலா

பழவேற்காடு ஏரி சுற்றுலா

சுற்றுலா அம்சங்கள் நிறைந்த இந்த ஏரி ஆங்கிலத்தில் புலிகேட் என்று அழைக்கப்பட்டு தற்போது தமிழ் பெயரை விட ஆங்கிலப் பெயரே நிலைத்துவிட்டது. இங்கே பறவைகளைக் காணவும், அலைச்சறுக்கு பயிலவும் நிறைய மக்கள் வருகின்றனர்.

Nandha

புலிகேட்டை அடைய

புலிகேட்டை அடைய

தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவில் ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது புலிகேட் எனும் பழவேற்காடு ஏரி. வங்கக் கடலையும், இந்த ஏரியையும் இடையில் இருக்கு ஸ்ரீஹர்கோட்டா எனும் தீவு பிரிக்கிறது. இந்த பழவேற்காடு ஒரு மீனவ கிராமம் ஆகும். இங்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மீன் உள்ளிட்ட உணவுகளும் கிடைக்கின்றன.

cincoutprabu

 பாங்காங் ஏரி

பாங்காங் ஏரி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பாங்காங் ஏரி. இது பாங்காங் ட்சோ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பாங்காங் ஏரி கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது 134 கிலோமீட்டர் நீளம், 5 கிலோமீட்டர் அகலம் என்ற அளவில் பரவியுள்ளது.

Sidharthkochar

பறவைகள் வந்து செல்லும்

பறவைகள் வந்து செல்லும்

பாங்காங் ஏரி உப்புநீர் ஏரியாக இருந்தபோதும், குளிர்காலங்களில் இதிலுள்ள நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்து விடுகிறது. இனப்பெருக்கம் செய்யும் பறவைகள், புலம்பெயர் பறவைகள் உட்பட அதிக எண்ணிக்கையிலான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக பாங்காங் ஏரிக்கு வந்து செல்கின்றன

lensnmatter

 சதுப்பு நில ஏரி

சதுப்பு நில ஏரி

பாங்காங் ஏரியின் தண்ணீரில் உப்பு மிகுந்து காணப்படுவதால் நுண்ணுயிரிகளும், தாவரங்களும் மிகக் குறைவான அளவே வளர்கின்றன. எனினும், இந்த ஏரியை சுற்றிலுமுள்ள சதுப்பு நிலத்தில் சிலவகைப் பல்லாண்டு தாவரங்களும், புதர்களும் காணப்படுகின்றன. பார் போன்ற தலையுடைய வாத்து, பிராமினி வாத்துகள், சைபீரியக் கொக்கு, நீர்க்கோழி போன்ற பறவையினங்களும், மார்மோத், கியாங்க் உள்ளிட்ட வனவிலங்குகளும் பாங்காங் ஏரியில் காணப்படுகின்றன

Aayush Iyer

Read more about: travel lake
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more