• Follow NativePlanet
Share
» »மூத்த குடிமக்கள் 30 நிமிடங்களில் திருப்பதியில சுவாமி தரிசனம் செய்யலாம் - இப்படி பண்ணுங்க!

மூத்த குடிமக்கள் 30 நிமிடங்களில் திருப்பதியில சுவாமி தரிசனம் செய்யலாம் - இப்படி பண்ணுங்க!

உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 70,000 பேர் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவற்றில் ஆர்ஜித சேவா, விஐபி பிரேக் தரிசனம், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம் என பலவகையான தரிசனங்கள் உண்டு. எந்த தரிசனத்திலும் குறைந்த பட்சம் 2 மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டும். ஆனால், நீங்கள் மூத்த குடிமக்களாக இருக்கும் பட்சத்தில், அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டியது இல்லை. சுமார் 30 நிமிடங்களில் எழுமலையானை தரிசனம் செய்திடலாம். அது எப்படி என்று இங்கே பார்ப்போம்!

Senior citizens can get darshan easily in Tirumala

மூத்த குடிமக்களுக்கு விரைவில் தரிசனம்

நீங்கள் திருப்பதியில் திவ்ய தரிசனம் அல்லது ரூ.300 சிறப்பு தரிசனம் என எதை தேர்ந்தெடுத்தாலும், குறைந்த பட்சம் 2 அல்லது 3 மணி நேரம் வரிசையில் நின்று தான் சுவாமி பார்க்க நேரிடும். நமக்கு இது பரவாயில்லை தான், ஆனால் நமது தாத்தா பாட்டியால் இவ்வளவு நேரம் நிற்க முடியுமா? அதனால் தான் மூத்த குடிமக்களுக்காகவே TTD 'சீனியர் சிட்டிசன் தரிசனம்' வழங்குகிறது. இதன்படி நீங்கள் கோயிலுக்கு அருகில் இருக்கும் சுபாதம் என்ட்ரியில் சிறிது நேரம் தங்கவைக்கப்படுவீர்கள். டைம் ஸ்லாட்டின் அடிப்படையில் மூத்த குடிமக்கள் வெறும் 30 நிமிடங்களுக்கு உள்ளாகவே ஏழுமலையானை தரிசனம் செய்து விடலாம்.

யாரெல்லாம் சுவாமி தரிசனம் செய்யலாம்

· மூத்த குடிமக்கள் வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் தனிநபர்களின் வயது 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.

· அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை (ஆதார் கார்டு, பாஸ்போர்ட்) வைத்திருக்க வேண்டும்.

· உங்கள் மனைவிக்கு என்ன வயதானாலும் நீங்கள் அவரை உங்களுடன் அழைத்து செல்லலாம்.

· மனைவி வரவில்லை என்றால், யாரேனும் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஒருவர் மூத்த குடிமகனுடன் வரலாம்.

Senior citizens can get darshan easily in Tirumala

மூத்த குடிமக்கள் தரிசன டிக்கெட்டுகளை எவ்வாறு பதிவு செய்வது

· மூத்த குடிமக்கள் தரிசனத்திற்கு திருமலையில் ஆன்-சைட் டிக்கெட் முன்பதிவு கிடைக்கவில்லை. முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

· ஒவ்வொரு மாதமும் சிறப்பு தரிசனம் டிக்கெட் வழங்கப்படுவது போலவே மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டுகளும் https://ttdevasthanams.ap.gov.in/home/dashboard இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது.

· டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்று தீர்வதால், நீங்கள் முந்திக் கொள்வது அவசியம். பெரும்பாலும் 15-30 நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்துவிடும்.

எப்போது செல்ல வேண்டும்

· முதியவர்கள் தங்களின் திட்டமிடப்பட்ட தரிசன நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன் திருமலையில் தெற்கு மாட தெருவில் சுபதம் நுழைவாயிலுக்கு அருகில் செல்ல வேண்டும்.

· மாலை 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே மூத்த குடிமக்களுக்கான தரிசனம் வழங்கப்படுகிறது. ஆதலால் நேநேகள் 1:00 மணிக்கு அந்த கவுண்டருக்கு செல்லப் பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.

· 3:00 மணிக்கு தரிசனம் திறந்த உடனே அடுத்த 20 நிமிடங்களுக்குள் ஏழுமலையானை தரிசனம் செய்து விடலாம்

என்ன வசதிகள் உள்ளன

· மூத்த குடிமக்கள் தங்கள் தரிசன ஸ்லாட்டுக்காக காத்திருக்கும் போது, இருக்கைகள் மற்றும் தண்ணீர் மற்றும் உணவு போன்ற வசதிகளுடன் கூடிய சிறப்பு காத்திருப்புப் பகுதிகள் வழங்கப்படுகின்றன.

· மூத்த குடிமக்களுக்கு, குறிப்பாக இயக்கத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்க TTD ஊழியர்கள் உள்ளனர்.

· அணுகக்கூடிய வசதிகள் மற்றும் வசதியான காத்திருப்புப் பகுதிகள் முதல் பிரசாதம் மற்றும் ஊழியர்களின் உதவி வரை, மூத்த குடிமக்களுக்கு மரியாதையான மற்றும் வசதியான யாத்திரையை உறுதி செய்வதில் TTD சிந்தனையைக் காட்டுகிறது.

இனி நீங்கள் உங்கள் தாத்தா, பாட்டி, அப்பா மற்றும் அம்மாவுக்கு டிக்கெட் புக் செய்யும் போது இது போல டிக்கெட் புக் செய்து பாருங்கள்!

More News

    Read more about: tirupati andhra pradesh tirumala
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+