» »ஒரே நாள் இரவில் கட்டப்பட்டதாக கூறப்படும் மிகவும் பிரபலமான 5 கோயில்கள்!

ஒரே நாள் இரவில் கட்டப்பட்டதாக கூறப்படும் மிகவும் பிரபலமான 5 கோயில்கள்!

By: Maha Lakshmi S

இந்திய நிலப்பரப்பில் ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்திய நகரங்களில் உள்ள ஒவ்வொரு தெரு முனைகளிலும் ஒரு சிறிய அல்லது பெரிய கோயில்கள் இருப்பதைக் காணலாம். அவற்றில் சில பழமையான கோயில்களுக்கு பின்னால் புராண கதைகள் உள்ளது. அதில் சில கோயில்கள் ஒரே நாள் இரவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கோடையில் உங்கள் வாழ்வையே மாற்றும் அந்த 75 இடங்கள்

இக்கட்டுரையில் நம் புராணங்கள் ஒரே நாள் இரவில் கட்டப்பட்டதாக கூறப்படும் மிகவும் பிரபலமான 5 கோயில்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பாருங்கள்.

கோவிந்த் தேவ் கோயில், விருந்தாவன், உ.பி

கோவிந்த் தேவ் கோயில், விருந்தாவன், உ.பி

உத்திர பிரதேசத்தில் உள்ள விருந்தாவன் நகரத்தில் கிருஷ்ணர் தனது இளமைப்பருவத்தைக் கழித்ததால், இந்நகரில் ஏராளமான கிருஷ்ணர் கோயில்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கோவிந்த் தேவ் கோயில். இந்த கோயில் ஒரே நாள் இரவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து இந்த கிருஷ்ணர் கோயிலைக் கட்டியதாகவும் பலர் கூறுகின்றனர். இந்த கோயில் பார்ப்பதற்கு இன்னும் கட்டிட வேலை முடியாதது போன்றே காட்சியளிக்கும்.

Image Courteys: wikimapia

ஹதியா தேவல், உத்தரகண்ட்

ஹதியா தேவல், உத்தரகண்ட்

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலின் அந்த மர்மம் தெரியுமா?

இந்த கோயில் உத்தரகண்ட்டில் உள்ள பித்தோராகரில் அமைந்துள்ளது. இந்த கோயில் அச்சுறுத்தும் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள சிவலிங்கம் தென் திசையை நோக்கி உள்ளது. மேலும் இந்த கோயில் ஒற்றை கை கொண்ட ஒருவரால் ஒரே இரவில் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

Image Courtesy: medhajnews.in

போஜேஸ்வர் கோயில், மத்திய பிரதேசம்

போஜேஸ்வர் கோயில், மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த போஜேஸ்வர் கோயில், பாண்டவர்களால் குந்திக்கான த்வாபர யுகத்தின் போது, ஒரே இரவில் கட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

Image Courtesy: wikimedia

ககன்மத், மத்திய பிரதேசம்

ககன்மத், மத்திய பிரதேசம்

ஆராய்ச்சியாளர்களையே வாயை பிளக்கவைத்த அந்த மர்மங்கள் எவை தெரியுமா?

மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த புகழ்பெற்ற கோயில் சிவ பக்தர்கள் மற்றும் பேய்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. புராணங்களின் படி, இந்த கோயில் ஒரே இரவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் ஒரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால், இந்த கோயிலைக் கட்ட சாந்து அல்லது சிமெண்ட் எதுவும் பயன்படுத்தப்படவில்லையாம்.

Image Courtesy: wikipedia

தேவ்கர் கோயில், ஜார்கண்ட்

தேவ்கர் கோயில், ஜார்கண்ட்

பார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா?

ஜார்கண்ட்டில் அமைந்துள்ள இந்த கோயில், விஷ்வகர்மாவால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோயிலைக் கட்டும் போது, பார்வதி தேவியின் கோயில் முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை என்றும், தனால் தான் விஷ்ணு மற்றும் பத்ரிநாத் கோயில்களை விட சிறியதாக உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அதோடு இந்த கோயிலும் ஒரே இரவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

Image Courtesy: wikipedia

Please Wait while comments are loading...