» »ஆளை விழுங்கும் அமானுஷ்ய பாறை...! போனா திரும்பி வர முடியாது..!

ஆளை விழுங்கும் அமானுஷ்ய பாறை...! போனா திரும்பி வர முடியாது..!

Written By: Sabarish

இந்தியாவில் மனிதர்களால் அதிகம் மாசுபடாத வகையில் ஒளிந்திருக்கும் இயற்கை எழிற்பிரதேசங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது மேகாலயா மாநிலத்தில் உள்ள சௌத் கரோ மலைக் காடுகள். இந்தியாவின் மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றான இந்த மாவட்டத்திற்கு வடக்கே ஈஸ்ட் கரோ, கிழக்கே வெஸ்ட் காசி, மேற்கே வெஸ்ட் கரோ போன்ற மலை மாவட்டங்கள் சூழ அமைந்துள்ளது.

முக்கிய சுற்றுலாத் தலங்கள்

முக்கிய சுற்றுலாத் தலங்கள்


சௌத் கரோ மலைக் காடுகளைச் சுற்றிலும் நெங்கோங், பல்பக்ராம், இமில்சாங் டரே, டோம்வாரே, ஏமான்கிரே, சிம்சங் ஆறு போன்ற முக்கியமான சுற்றுலாத் தலங்கள் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி இன்னும் ஏராளமான பசுமைக் காடுகள் நிறைந்த சுற்றுலர்த தலங்களும் சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டம் முழுக்க பரவிக்கிடக்கின்றன.

R4robin

நெங்கோங்

நெங்கோங்


நெங்கோங் என்றழைக்கப்படும் இந்த இடம் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலமாகும். இங்கே மூன்று மலைக்குகைகள் அமைந்திருக்கின்றன. இவற்றில் முக்கியமான டெடங்கோல் பல்வாகோல் குகை 5.33 கி.மீ நீளமுடையதாகும். இது இந்திய துணைக் கண்டத்திலேயே இரண்டாவது நீளமான குகையாக கூறப்படுகிறது.

F Simpson

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


பக்மாரா நகரத்திலிருந்து வாடகை கார்கள் மூலம் பயணிகள் நெங்கோங் தலத்திற்கு வந்து சேரலாம். டுரா நகரத்திலிருந்து 132 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் நெங்கோங் சுற்றுலாத்தலத்திற்கு டுராவில் இருந்தே சுற்றுலா வாகனங்கள் மூலம் வரலாம்.

TheSomdeep

பல்பக்ராம்

பல்பக்ராம்


பல்பக்ராம் தேசிய பூங்கா இப்பகுதியில் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக அமைந்திருக்கிறது. நீர் எருமை எனப்படும் ஒரு அருகி வரும் இனம் இந்த தேசிய பூங்காவில் வசிப்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர சிவப்பு பாண்டா கரடிகள், ஆசிய யானைகள் மற்றும் பைசன் எருமைகள் போன்றவையும் இந்த பூங்காவில் வசிக்கின்றன.

Hgm2016

சிடிமக் குளம்

சிடிமக் குளம்


பல்பக்ராம் பகுதியில் கரி போன்ற கருப்பு நிறத்துடன் காட்சியளிக்கும் சிடிமக் எனும் குளத்தையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். மற்றொரு விசேஷ அம்சமாக மட்சுரு எனும் பரந்த பாறைப்பகுதி அமைந்திருக்கிறது. இதில் விலங்குகளின் கால் தடங்கள் பதிந்திருக்கும் அதிசயத்தை காணலாம்.

Uttaragarg

உறிஞ்சும் பாறை

உறிஞ்சும் பாறை


சிடிமக் குளத்தை அடுத்து அப்பகதியில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலம் அரேங் பாதாள் எனும் பாறை அமைந்துள்ள பகுதி. பிரம்மாண்ட தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்தப் பாறையின் அருகில் செல்லும் எந்த உயிரினத்தையும் தனது குழிக்குள் உறிஞ்சி இழுத்து விடுவதாக அப்பகுதியினர் மூலம் கூறப்பட்டு வருகிறது. ஒரு முறை அந்தக் குழிக்குள் சென்றுவிட்டார் அதன் பின்னர் அந்த உயிரினம் மீண்டு வர முடியாது என்றும் கூறப்படுகிறது.

James Gabil Momin

இமில்சாங் டரே

இமில்சாங் டரே


இமில்சாங் டரே எனும் இந்த அழகிய நீர்வீழ்ச்சி டுரா-சொக்பொட் சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது. சாய்வான மலைப்பிளவின் ஊடாக இரு பாதைகளில் ஓடிவரும் ஒரு ஓடையில் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. நீர்வீழ்ச்சியை அடுத்து இந்த ஓடை ஒரு அழகிய குளத்தில் வந்து சேர்கிறது.

Prasanta Kr Dutta

சிம்சங்

சிம்சங்


ஆற்றில் படகுகளில் பயணித்தபடி இப்பகுதியின் பள்ளத்தாக்குகளை ரசிப்பது ஹாலிவுட் படக்காட்சி அனுபவத்திற்கு இணையானதாக இருக்கும். ஆற்றின் ஒவ்வொரு வளைவும் ரகசியமான மற்றொரு இடத்திற்கு இழுத்துச்செல்வது போல் அமைந்திருக்கிறது. இந்த ஆற்றில் எலக்ட்ரிக் ஈல் என்றழைக்கப்படும் மீன்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

Diablo0769

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டத்திலுள்ள இயற்கை எழில் தலங்களை சுற்றிப்பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் பக்மாரா எனும் நகரத்தில் தங்கிக்கொண்டு தங்கள் சுற்றுலாவை விருப்பம்போல் திட்டமிட்டுக்கொள்ளலாம். இங்கிருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் மேகாலயா மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான டுரா எனும் நகரமும் அமைந்திருக்கிறது. மேலும், பக்மாராவிலிருந்து 157 கிலோ மீட்டர் தூரத்தில் கவுஹாட்டி நகரம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sujan Bandyopadhyay

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்