Search
  • Follow NativePlanet
Share
» »ஏலியன் பூமிக்கு வந்ததற்கான ஆதாரமாக நம்பப்படும் சிரிங்கேரி!

ஏலியன் பூமிக்கு வந்ததற்கான ஆதாரமாக நம்பப்படும் சிரிங்கேரி!

12 ராசிகளைக் குறிக்கும் 12 தூண்கள் கொண்டு கட்டப்பட்ட கோவில் சிரிங்கேரியில் அமைந்துள்ளது. அங்குதான் ஏலியன் பூமிக்கு வந்தததற்கான ஆதாரங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. வாருங்கள் சென்று வரலாம்.

துங்க நதிக்கரை

துங்க நதிக்கரை

துங்க நதிக்கரையின் கரையில் அமைந்துள்ள அமைதியான இந்த நகரில்தான் ஹிந்துக்களால் போற்றப்படும் ஆன்மீக குரு ஆதி சங்கராச்சாரியார் தன் முதல் மடத்தை நிறுவினார். அதிலிருந்து எழில் கொஞ்சும் இந்த சிருங்கேரி நகரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடம் முழுதும் விஜயம் செய்யும் ஒரு புனிதத்தலமாகவும் இருந்து வருகிறது.

Calvinkrishy

 ஏலியன்கள் வந்து சென்ற இடம்

ஏலியன்கள் வந்து சென்ற இடம்

ஏலியன் வந்து சென்றதாக நம்பப்படும் பூமியின் பல இடங்களில் ஒன்றாக இது நம்பப்படுகிறது. இதற்கு காரணங்கள் இல்லாமலும் இல்லை. சிக்மகளூர் அருகே அமைந்துள்ள இந்த சிருங்கேரி ஏலியன் வந்து சென்றதற்கான இடமாக இன்றளவும் அங்குள்ள மக்கள் சிலரால் நம்பப்படுகிறது.

wikimedia

 நம்பிக்கை கதைகள்

நம்பிக்கை கதைகள்

சிருங்கேரியின் பின்னணியில் சில ஐதீக கதைகளும் கூறப்படுகின்றன. அதாவது, கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் சிருங்கேரி ஒரு பசுமை நிறைந்த வளமான பூமியாக இருந்ததாகவும், இங்கு வந்த குரு ஆதி சங்கராச்சாரியார் இந்த மண்ணின் மகிமையை ஒரு அதிசயத்தின் மூலம் அறிந்து தன் மடத்தினை இங்கு நிர்மாணிக்க முடிவு செய்ததாக அந்தக் கதை கூறுகிறது.

Laks316

 மர்மங்கள் நிறைந்த கோவில் கட்டமைப்பு

மர்மங்கள் நிறைந்த கோவில் கட்டமைப்பு

இங்குள்ள கோவிலில் 12 ராசிகளைக் குறிக்கும் 12 தூண்கள் இருக்கின்றன. அவை 12 ராசிகளுக்கும் உரிய பலன்களை அந்தந்த நேரங்களில் குறிப்பவையாக உள்ளனவாம். இது குறித்து நிறைய பேர் ஆராய்ந்து பார்த்துவிட்டனர். அவர்களுக்கு ஏதும் பிடிபவில்லை. ஆனால் இதை நிசம் என்று நம்புபவர்கள் கூறும் காரணங்கள் அதிர வைக்கின்றன.

Vijayakumarblathur

தவளைக்கு குடையான பாம்பு

தவளைக்கு குடையான பாம்பு

துங்கா நதிக்கரையில் உலவிக்கொன்டிருந்தபோது சங்கராச்சாரியார் ஓரிடத்தில் நாகப்பாம்பு ஒன்று கர்ப்பமுற்றிருந்த ஒரு தவளையின் மீது வெயில் தாக்காதவாறு தன் படத்தினை விரித்து பாதுகாத்துக்கொன்டிருந்த அதிசயத்தை கண்டு, தன் இரையும்,எதிரியுமான தவளையின் மீது ஒரு நாகப்பாம்பினை கருணை காட்ட வைக்கும் அளவுக்கு அந்த மண் சக்தி வாய்ந்ததாக சங்கராச்சாரியார் அறிந்து கொண்டதாக அந்த ஐதீகம் கூறுகிறது.

Vijayakumarblathur

ஆயிரமாயிரம் பக்தர்களால் பூசிக்கப்படும் இடம்

ஆயிரமாயிரம் பக்தர்களால் பூசிக்கப்படும் இடம்

இன்று சிருங்கேரியில் குரு சங்கராச்சாரியாரின் சாரதா பீடமானது தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் தரிசிக்கப்படுகிறது. மேலும், புகழ் பெற்ற வித்யாஷங்கர் ஆலயம் மற்றும் சாரதாம்பா கோயில் இரண்டும் சிருங்கேரியில் அவசியம் பார்க்க வேண்டியவை.

wikimedia

 வானியல் அறிவு

வானியல் அறிவு

வித்யாஷங்கர் ஆலயத்தில் 12 தூண்கள் 12 கிரக ராசிகளை ஒத்திருக்கும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது பிரசித்தம். மேலும் இந்த ஆலயம் வானியல் தத்துவங்களை ஒட்டி கட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Laks316

 ஏலியன் சந்தேகம்

ஏலியன் சந்தேகம்

இங்குதான், மக்களுக்கு சந்தேகம் வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்ட அதே காலத்தில் கட்டியிருக்கும் பல கோவில்கள் இந்த பகுதியைச் சுற்றி இருக்கின்றன. அவை மற்ற கோவில்களைப் போலவே சாதாரணமான நிலையில் இருக்கும்போது, இந்த கோவில் மட்டும் இப்படி விசித்திரமாக இருப்பதற்கு காரணம் இருக்காமலா இருந்திருக்கும் என்று சந்தேகப்படுகின்றனர். இங்குதான் ஏலியன் கோட்பாடு வருகிறது.

Vaikoovery

அங்கோர்வாட் மற்றும் அஜந்தா குகைகள்

அங்கோர்வாட் மற்றும் அஜந்தா குகைகள்

இந்த சிருங்கேரி கோவிலில் அமைந்திருக்கும் சில கட்டுமானங்களைப் பார்க்கையில், அவை அங்கோர்வாட் மற்றும் அஜந்தா குகைகளில் காணப்பட்ட குறியீடுகளை ஒத்துள்ளன. ஏற்கனவே இவை இரண்டும் ஏலியன்கள் கட்டிய கோவிலாக இருக்கும் என்று நம்பப்படும்போது, இதுவும் அதனுடன் சேர்ந்துவிட்டது.

Mythravarun01

 நம்ப வேண்டாம்

நம்ப வேண்டாம்

என்னதான்.. பொய் புரளி என்று வந்தாலும், அதை மெய் அறிவால் பகுத்து அறிந்து நம்பும் நாம், இதுபோன்ற அறிவியல் சம்பந்தமான கதைகளை மட்டும் எளிதில் நம்பி விடுகிறோம். இது பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது என்றாலும், ஏலியன் எனும் ஒன்று நம் அறிவியலுக்கு நம்பகத் தன்மை இல்லாதது. எனினும் இது குறித்த ஆய்வுகள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. ஏலியனுக்காக இல்லாவிட்டாலும், சிருங்கேரியின் இயற்கை எழிலுக்காக இங்கு செல்வோம்.

சிருங்கேரியில் வருடம் முழுவதுமே மிதமான இதமான வெப்பநிலை நிலவுகிறது. அருகில் மங்களூரில் விமான நிலையம் இருக்கிறது. மேலும் பெங்களூரிலிருந்து 330 கி.மீ தொலைவில் உள்ள இந்த நகரத்துக்கு பல வழிகளிலும் பஸ் வசதிகள் உண்டு. ஷிமோகா மற்றும் காடூர் இரண்டும் அருகில் உள்ள ரயில் நிலையங்கள்.

Mashalti

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more