Search
  • Follow NativePlanet
Share

சிருங்கேரி – ஒரு புனித ஸ்தலம்

32

துங்க நதிக்கரையின் கரையில் அமைந்துள்ள அமைதியான இந்த நகரில்தான் ஹிந்துக்களால் போற்றப்படும் ஆன்மீக குரு ஆதி சங்கராச்சாரியார் தன் முதல் மடத்தை நிறுவினார். அதிலிருந்து எழில் கொஞ்சும் இந்த  சிருங்கேரி நகரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடம் முழுதும் விஜயம் செய்யும்  ஒரு புனிதத்தலமாகவும் இருந்து வருகிறது.

சிருங்கேரியின் பின்னணியில் சில ஐதீக கதைகளும் கூறப்படுகின்றன. அதாவது, கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் சிருங்கேரி ஒரு பசுமை நிறைந்த வளமான பூமியாக இருந்ததாகவும், இங்கு வந்த குரு ஆதி சங்கராச்சாரியார் இந்த மண்ணின் மகிமையை ஒரு அதிசயத்தின் மூலம் அறிந்து தன் மடத்தினை இங்கு நிர்மாணிக்க முடிவு செய்ததாக அந்தக் கதை கூறுகிறது.

துங்கா நதிக்கரையில் உலவிக்கொன்டிருந்தபோது சங்கராச்சாரியார் ஓரிடத்தில் நாகப்பாம்பு ஒன்று கர்ப்பமுற்றிருந்த ஒரு தவளையின் மீது வெயில் தாக்காதவாறு தன் படத்தினை விரித்து பாதுகாத்துக்கொன்டிருந்த அதிசயத்தை கண்டு, தன் இரையும்,எதிரியுமான தவளையின் மீது ஒரு நாகப்பாம்பினை கருணை காட்ட வைக்கும் அளவுக்கு அந்த  மண் சக்தி வாய்ந்ததாக சங்கராச்சாரியார் அறிந்து கொண்டதாக அந்த ஐதீகம் கூறுகிறது.

இன்று சிருங்கேரியில் குரு சங்கராச்சாரியாரின் சாரதா பீடமானது தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் தரிசிக்கப்படுகிறது. மேலும், புகழ் பெற்ற வித்யாஷங்கர் ஆலயம் மற்றும் சாரதாம்பா கோயில் இரண்டும் சிருங்கேரியில் அவசியம் பார்க்க வேண்டியவை.

வித்யாஷங்கர் ஆலயத்தில் 12 தூண்கள் 12 கிரக ராசிகளை ஒத்திருக்கும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது பிரசித்தம். மேலும் இந்த ஆலயம் வானியல் தத்துவங்களை ஒட்டி கட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிருங்கேரியில் வருடம் முழுவதுமே மிதமான இதமான வெப்பநிலை நிலவுகிறது. அருகில் மங்களூரில் விமான நிலையம் இருக்கிறது. மேலும் பெங்களூரிலிருந்து 330 கி.மீ தொலைவில் உள்ள இந்த நகரத்துக்கு பல வழிகளிலும் பஸ் வசதிகள் உண்டு. ஷிமோகா மற்றும் காடூர் இரண்டும் அருகில் உள்ள ரயில் நிலையங்கள். 

சிருங்கேரி சிறப்பு

சிருங்கேரி வானிலை

சிறந்த காலநிலை சிருங்கேரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சிருங்கேரி

  • சாலை வழியாக
    சிருங்கேரியை கர்நாடகாவின் முக்கிய நகரங்களான பெங்களூர், மங்களூர், சிக்மகளூர், உடுப்பி, ஷிமோகா போன்ற நகரங்களிலிருந்து சாலை மூலமாக சுலபமாக அடையலாம். இந்த நகரங்களிலிருந்து எண்ணற்ற அரசு மற்றும் தனியார் சொகுசுப் பேருந்துகள் சிருங்கேரிக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சிருங்கேரியிலிருந்து உடுப்பி ரயில் நிலையம் 98 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ரயில் நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இங்கு வந்த பின்னர் வாடகை கார்களின் மூலம் எந்த சிரமமுமின்றி சிருங்கேரியை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிருங்கேரியிலிருந்து மங்களூர் விமான நிலையம் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் சுலபமாக சிருங்கேரியை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed