Search
  • Follow NativePlanet
Share
» »ரூ.10,000 பட்ஜெட்டில் சம்மர் டூர் போக சூப்பர் ஐடியா...எந்தெந்த இடங்களுக்கு செல்ல முடியும்?

ரூ.10,000 பட்ஜெட்டில் சம்மர் டூர் போக சூப்பர் ஐடியா...எந்தெந்த இடங்களுக்கு செல்ல முடியும்?

சம்மர் லீவ் வரப் போகிறது. அதனால் பலரும் இப்போது இருந்தே டூர் பிளான் போட துவங்கி விடுவார்கள். விடுமுறை என்றாலே உறவினர்கள், தாத்தா-பாட்டி வீட்டிற்கு சென்று 4 நாட்கள் தங்கி விட்டு வரலாம் என்ற காலம் எல்லாம் இப்போது போய் விட்டது. லீவ் விட்டாச்சு என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்குமே முதலில் தோன்றுவது ஜாலியாக எங்காவது சென்று ஊர் சுற்றி விட்டு வரலாம் என்பது தான்.

Rameshwaram

ஊரும் சுற்ற வேண்டும், செலவும் குறைவாக பட்ஜெட்டிற்குள் அடங்குவதாக இருக்க வேண்டும் என நினைப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த தகவல் உங்களுக்கு தான். வெறும் ரூ.10,000 இருந்தாலே போதும் சூப்பராக லீவை என்ஜாய் செய்து விட்டு வரலாம். அப்படி எந்தெந்த ஊர்களுக்கு செல்லலாம் என்பதை பார்க்கலாம்.

ஏற்காடு

ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படும் ஏற்காடு, குறைவான டூர் பேக்கேஜ் ஊர்களில் முதலிடத்தில் உள்ளது. ஏற்காடு சென்றாலே அருகில் உள்ள சேலம், நீலகிரி ஆகிய ஊர்களுக்கு சென்று சுற்றி பார்த்து விட்டு வரலாம். சேர்வராயன் மலை தொடர், புகழ்பெற்ற கோவில்கள், அருவிகள், தேயிலை தோட்டங்கள், மலர் கண்காட்சி, பூங்கா என பல இடங்களை சுற்றி பார்த்த விட்டு வந்து விடலாம். குடும்பத்துடன் சென்று ஜாலியாக 2 நாட்கள் சுற்றி பார்த்து விட்டு வந்து விடலாம்.

கன்னியாகுமரி

தென் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு டூர் போவதற்கு மிகவும் சிறந்த ஊர் கன்னியாகுமரி. பசுமையான சுற்றச் சூழல், கன்னியாகுமரி கடற்கரை, மாத்தூர் தொட்டிப் பாலம், திற்பரப்பு அருவி, சங்குத்துறை, முட்டம் போன்ற பீச், பத்மநாபபுரம் அரண்மனை என சுற்றி பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன. 3 நாட்கள் ஆசை தீர சுற்றி பார்த்து விட்டு திருப்பலாம். ரயிலில் சென்றால் செலவு மிகவும் குறைவு தான்.

கோயமுத்தூர்

நெரிசலாக நகரங்களில் வாழ்ந்து சளித்து போன பலரும் சமீப காலமாக டூர் செல்ல தேர்வு செய்யும் இடம் கோயமுத்தூர் தான். பசுமையான மலைகள், நீர்வீழ்ச்சி, கோவில்கள், குளுமையான இடங்கள் என சுற்றி பார்க்க பல இடங்கள் உள்ளன. பல பகுதிகளில் டெண்ட் போடும் வசதியும் உள்ளதால் வித்தியாசமான அனுபவத்தை ரசிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

ராமேஸ்வரம்

தமிழகத்தின் தீவு நகரமான ராமேஸ்வரத்தில் பலருக்கும் தெரிந்தது கோவில்கள் மட்டும் தான். ஆனால் கோவில்களை தாண்டி இங்கு ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. தனுஷ்கோடி, அரியமான் கடற்கரை எனப்படும் குஷி பீச், ராமர் பாலம், அப்துல் கலாம் நினைவிடம் என அனைவரையும் ஈர்க்கும் பல இடங்கள் ராமேஸ்வரத்தை சுற்றி உள்ளன. படகு சவாரி செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்கு மண்டபம் மீன்பிடி பகுதியில் வசதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை

சுவையான உணவுகளை ருசிக்க, ஜாலியாக சுற்றி பார்க்க என அனைத்திற்கும் ஏற்ற இடம் மதுரை தான். மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், மதுரை திருமலை நாயக்கர் மஹால், வைகை அணை, கும்பக்கரை அருவி, கீழடி, குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி, மதுரை யானை மலை, சமணர் மலைகள் போன்றவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள். மதுரையில் இருந்து மிக குறுகிய தூரத்திலேயே இந்த இடங்கள் அனைத்தும் அமைந்துள்ளால் போக்குவரத்தும் மிக எளிதானதாக இருக்கும்.

சம்மரில் ஜில்லென்ற பருவநிலையை அனுபவித்தபடி, இதுவரை பார்க்காத இடங்களுக்கு சென்று, குறைந்த செலவில் ஜாலியாக சுற்றி பார்த்து விட்டு வர வேண்டும் என நினைப்பவர்களுக்கு நிச்சயம் இது பயனுள்ளதாக இருக்கும். இவற்றில் உங்களுக்கு வசதியான இடத்தை தேர்வு செய்து, சென்று வரலாம். உங்கள் நண்பர்கள், உறவினர்களும் குடும்பத்துடன் சென்று ஜாலியாக இருந்து விட்டு வருவதற்கு இது போன்ற தகவல்களை பகிர்வதால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

More News

    Read more about: tamil nadu summer
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+