• Follow NativePlanet
Share
» »பார்ப்பதற்கு கேக் போல காட்சி தரும் ஏலகிரியின் அழகிய சுவாமிமலை

பார்ப்பதற்கு கேக் போல காட்சி தரும் ஏலகிரியின் அழகிய சுவாமிமலை

பார்ப்பதற்கு கேக் போல காட்சி தரும் ஏலகிரியின் அழகிய சுவாமிமலை

சுவாமி மலைக் குன்றுகள் ஒரு கேக் போன்ற அமைப்பு உடையன. உயரமான சிகரங்களைக் கொண்ட இந்த குன்றின் அடித்தளங்கள் ஒரு கேக் போன்று தோன்றுவதுடன் , இதன் சிகரங்கள் விண்ணை முட்டுவது போல் காட்சியளிக்கின்றன. இந்த மலையிலுள்ள உயரமான சிகரம் தரை மட்டத்திலிருந்து 4338 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலையேறுபவர்களுக்கு சுவாமிமலை மிகவும் விருப்பமான ஒரு பாதையாகும். சுவாமிமலை மலையேற்றப்பாதை போய்வர கிட்டத்தட்ட 6 கி.மீ தூரம் கொண்டது.

பார்ப்பதற்கு கேக் போல காட்சி தரும் ஏலகிரியின் அழகிய சுவாமிமலை

Ashwin Kumar

இந்தப் பாதை அழைத்தச் செல்லும் குன்றிலிருந்து பார்த்தால் மலையின் முழுத் தோற்றமும் காணக்கிடைக்கும். சுவாமி மலைக்கு அருகிலுள்ள ஜவ்வாது மலை, பள்ளமத்தி மலை ஆகியவற்றிலும் புகழ்பெற்ற மலையேற்றப் பாதைகள் உள்ளன. இந்த மலைகளில் ஏறுவது எளிதாக இருக்கிறது இவை பயணிகளுக்கு தொலைவில் இருந்து இயற்கை அழகை ரசிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

புங்கனூர் ஏரி, ஏலகிரி சுற்றுலாத் தலத்தை மேலும் அழகுபடுத்தவும் , சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் செயற்கையாக அமைக்கப்பட்ட ஏரி. ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் இடம் இது தான். 56.7 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி ஏலகிரியின் மத்தியில் அமைந்துள்ளது.ஏரியும் படகு சவாரி வசதியும் ஏலகிரி மலை முன்னேற்றம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தாரால் பராமரிக்கப் படுகிறது.

பார்ப்பதற்கு கேக் போல காட்சி தரும் ஏலகிரியின் அழகிய சுவாமிமலை

cprogrammer

இந்த ஏரியில் படகு சவாரி மற்றும் படகு ஓட்டிச்செல்லும் வசதி உள்ளதால் இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஓய்வடுத்தவாறே மலைகளின் கண்கவர் அழகை ரசிக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை தருகிறது. அருகில் ஒரு அழகான தோட்டம் உள்ளது. பயணிகள் இங்கு அமர்ந்து ஏரியின் அழகை ரசிக்கலாம். இந்த தோட்டத்தில் குழந்தைகளுக்கான பூங்கா ஒன்றும் நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு திறந்த வெளி காணப்படுகிறது. பலவகைப் பறவைகள் இங்கு உணவுக்காக வந்தமர்வதைக் காண முடிகிறது.

More News

    Read more about: travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+