• Follow NativePlanet
Share
» »இனி தமிழ்நாடு முழுக்க மின்சார பேருந்துகள் தான் – முதற்கட்டமாக சென்னையில் 100 மின்சார பேருந்துகள்!

இனி தமிழ்நாடு முழுக்க மின்சார பேருந்துகள் தான் – முதற்கட்டமாக சென்னையில் 100 மின்சார பேருந்துகள்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 57,613 கோடி ரூபாய் மதிப்பில் PM மின்சார சேவா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மின்சார பேருந்துகள் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 500 மின்சார பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக இப்போது 100 மின்சார பேருந்துகள் சென்னையில் இயக்கப்படவுள்ளன. கூடிய விரைவில் சென்னை மக்கள் மின்சார பேருந்துகளில் பயணிக்கலாம்!

ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் மின்சார பேருந்துகள் தயாரிப்பு

பெரம்பலுார் அரசு போக்குவரத்து பணிமனையில், 'ஏசி' வசதியுடன் கூடிய பணியாளர்கள் ஓய்வு அறையை, திறந்து வைத்து உரையாற்றிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தமிழகத்தில் கூடிய விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார். ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன், 500 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தமாகியுள்ளது எனவும், விரைவில், 100 மின்சார பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

1

பெட்ரோல், டீசல் வாகனங்களினால் ஏற்படும் மாசுபாடு

பெட்ரோல் மற்றும் டீசலினால் இயங்கும் பேருந்துகளால் அதிக சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. உலகம் வெப்பமயமாதல் தொடங்கி, காற்று மற்றும் வளிமண்டலம் மாசடைதல் வரை வாகனங்களுக்கு பங்கு உண்டு. சுற்றுச்சூழலை காத்து, பாதிப்புகளை குறைக்க இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதில் மின்சார வாகனங்களை இயக்குவது பெரும்பான்மையான மாசுபாடு காரணிகளை குறைக்க உதவுவதால், மின்சார வாகனங்களின் புழக்கம் இப்போது அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் மின்சார பேருந்துகள் இயக்க மத்திய அரசு முடிவு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 57,613 கோடி ரூபாய் மதிப்பில் PM மின்சார சேவா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மின்சார பேருந்துகள் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அரசு மட்டும் தனியாக செய்யாமல் அரசும் தனியாரும் கூட்டு சேர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி இந்தியா முழுவதும் உள்ள மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2

மேம்பட்டு வரும் தமிழக போக்குவரத்து துறை

தமிழகத்தில் தற்போது, 100 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இன்னும் 1,400 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட உள்ளன. முதல்வர், 2,000 புதிய பேருந்துகளை வாங்க நிதி ஒதுக்கியுள்ளார். அடுத்த மூன்று மாதங்களில் அந்த பேருந்துகளும் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்னையில் 100 மின்சார பேருந்துகள்

ஜெர்மன் வங்கி நிதி உதவியோடு, 500 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தமாகியுள்ளது. முதற்கட்டமாக, 100 மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. 100 மின்சார பேருந்துகளும் முதற்கட்டமாக சென்னையில் சோதனை முறையில் இயக்கப்பட்டு பின் படிப்படியாக மற்ற பெருநகரங்களை சென்றடையும்.

3

உயர்தர வடிவமைப்பில் வரப்போகும் மின்சார பேருந்துகள்

சென்னையில் தற்போது 3000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 30 லட்சம் பயணிகள் தினமும் பயணித்து வருகிறார்கள். இந்த பேருந்துகள் எல்லாம் படிப்படியாக மின்சார பேருந்துகள் ஆக மாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த மின்சார பேருந்துகள் எல்லாம் அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். குறிப்பிட்ட மின்சார பேருந்துகளில் ஏசி, சார்ஜிங், சொகுசு இருக்கை கொண்ட சொகுசு பேருந்துகளாக இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

    Read more about: chennai tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+