• Follow NativePlanet
Share
» » தாம்பரத்தில் நின்று செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் – இனி ரயில் ஏற எழும்பூர் செல்ல தேவையில்லை!

தாம்பரத்தில் நின்று செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் – இனி ரயில் ஏற எழும்பூர் செல்ல தேவையில்லை!

சென்னையிலிருந்து மதுரைக்கு வாரத்திற்கு 6 முறை இயக்கப்படும் அதிவிரைவு ரயிலான "தேஜஸ் எக்ஸ்பிரஸ்" சென்ற வாரத்திலிருந்து தாம்பரத்தில் நின்று செல்கிறது. இதனால் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மக்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வரை சென்று ரயில் ஏற வேண்டிய அவசியம் இல்லை, தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்தே ஏறிக் கொள்ளலாம். தாம்பரத்தில் ரயில் எவ்வளவு நேரம் நிற்கும் மற்றும் தேஜஸ் சூப்பர்ஃபாஸ்ட் ரயிலைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!

tejasexpress

சென்னை to மதுரை வெறும் 6 மணி நேரம்

சென்னை எழும்பூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சூப்பர்ஃபாஸ்ட் ரயில், 6.25 மணிக்கு தாம்பரம் வந்தடையும். பின்னர் தாம்பிரத்திலிருந்து 6.27 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு நன்பகல் 12.15 மணிக்கு சென்றடையும். இதுபோல மதுரையிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8.30 மணிக்கு வந்தடையும். தொடர்ந்து தாம்பிரத்திலிருந்து இரவு 8.40 புறப்பட்டு, எழும்பூருக்கு இரவு 9.15 மணிக்கு வந்தடையும். இந்நிலையில் பிப்ரவரி 26 அன்று இந்த ரயிலை மத்திய அமைச்சர் எல். முருகன் கொடி அசைத்து தாம்பிரத்திலிருந்து தொடங்கி வைத்தார்.

Tejas express

தாம்பரத்தில் நிறுத்தப்படும் ரயில்

இந்த ரயிலானது சென்னை புறநகரில் வழியாகச் சென்று, திருச்சி சந்திப்பில் மட்டுமே நின்று செல்லும் , ஆனால் பயணிகள் நீண்ட கோரிக்கையான தாம்பரம் சந்திப்பில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய ரயில்வே துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். அதை ஏற்று மத்திய ரயில்வே துறை பிப்ரவரி 26 முதல் தேஜ ஸ்ரீ அதிவிரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

Tejas express

பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சி

சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் அதிவிரைவு தேஜஸ் விரைவு ரயில் 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் தாம்பரத்தில் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த நிறுத்தமானது நகரின் தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளின் பரந்த பிரிவினருக்கு உதவியாக இருக்கும். தாம்பரம் தகவல் தொழில்நுட்ப மையங்களுக்கு அருகில் இருப்பதால் சென்னைக்கும் மதுரைக்கும் இடையே அடிக்கடி பயணம் செய்யும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் தாம்பரத்தில் இறங்குகிறார்கள். இந்த முடிவு பெரும்பாலான பயணிகளுக்கு பயனளிக்கும்.

Tejas express

தனியார் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ்

இந்த நிறுத்தத்தால் இரு நகரங்களுக்கு இடையே வணிகர்கள் பயனடைவார்கள் என தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2019 இல் சென்னை-மதுரை வழித்தடத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் 1 முதல் ஏசி எக்ஸிகியூட்டிவ் நாற்காலி கார், 12 ஏசி நாற்காலி கார்கள் மற்றும் இரண்டு ஜெனரேட்டர் கம் லக்கேஜ் வேன்கள் உள்ளன. மொத்தம் 15 கம்பார்ட்மெண்ட்கள் உள்ளன. இது ஒரு தனியார் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

Tejas express

தாம்பரம் தவிர மற்றபடி எந்த மாற்றமும் இல்லை

தாம்பரம் தவிர, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில்களின் நிறுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெற்கு ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. சென்னை எழும்பூர்-மதுரை இடையே தேஜஸ் அதிவிரைவு விரைவு வியாழன் தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நிகராக கருதப்படுவது தாம்பரம் ரயில் நிலையம். இங்கிருந்து அதிகளவில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் மிகவும் அதிகமாக உள்ளனர். தாம்பரத்தில் அறிவிக்கப்பட்ட தேஜஸ் அதிவிரைவு ரயிலின் இந்த நிறுத்தத்தை பொதுமக்கள் மகிழ்ச்சியாகவே கருதுகின்றனர்.

More News

    Read more about: tejas express tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+