Search
  • Follow NativePlanet
Share
» »ஆடிக் காத்து அதிர்ஷ்டத்தோடு அள்ளிக் கொட்டபோகுதாம்! இந்த நாலு ராசிக்காரங்களுக்கும்!

ஆடிக் காத்து அதிர்ஷ்டத்தோடு அள்ளிக் கொட்டபோகுதாம்! இந்த நாலு ராசிக்காரங்களுக்கும்!

எப்படி தை பொறந்த வழி பொறக்கும்னு பழமொழி இருக்கோ, அதுமாதிரியே தமிழர்களுக்கு ஆடி மாசமும் சிறப்புதான். சரியா ஆடி பொறக்குற அன்னைக்கு தமிழர்களின் ஒவ்வொரு வீட்டு வாசல்லையும் மகிழ்ச்சியும் பிறக்கும்னு பெரியவ

By Udhaya

எப்படி தை பொறந்த வழி பொறக்கும்னு பழமொழி இருக்கோ, அதுமாதிரியே தமிழர்களுக்கு ஆடி மாசமும் சிறப்புதான். சரியா ஆடி பொறக்குற அன்னைக்கு தமிழர்களின் ஒவ்வொரு வீட்டு வாசல்லையும் மகிழ்ச்சியும் பிறக்கும்னு பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க. தமிழர்கள் பெரும்பாலும் இயற்கையை நம்பி வாழ்ந்ததனால மழையையும் உழவுத் தொழிலையும் மனசுல வச்சி இத சொல்லிருக்கலாம். ஆடியில அடிக்குற காத்து உங்க ராசிக்கு ஏத்தமாதிரி நிறைய பலன்களை அள்ளித் தர போகுது. அதே நேரத்துல நீங்க இந்த ஆடி மாசம் போக வேண்டிய கோயில்களும், அதனால கிடைக்கப்போற பலன்களையும் இந்த பதிவுல பாக்கலாம். ஆனா அதுக்கு முன்னாடி இந்த பக்கத்தில் மேல் பகுதியில் இருக்கும் பெல் பட்டனைத் தட்டி, இந்த தளத்திலிருந்து தொடர் அப்டேட்டுகளை பெறுங்கள். மேலும் நமது முகநூல் பக்கத்திலும் பின்தொடருங்கள். ஏதேனும் சுற்றுலாத் தொடர்பான சந்தேகங்களுக்கு முகநூல் பக்கத்தின் உள்டப்பியைத் தொடர்புகொள்ளுங்கள். தமிழ் நேட்டிவ் பிளானட்

சிங்காரவேலர் கோவில்

சிங்காரவேலர் கோவில்

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நம்மில் பலருக்கு தெரியாத அல்லது சிலருக்கு மட்டுமே தெரிந்த விசயம் ஆடி மாசம் முருகருக்கும் உகந்ததுதான். முருகன் கோயில்களுக்கு சென்று வள்ளி, தெய்வானையை வணங்கும் பழக்கம் முற்காலத்தில் பல வீடுகளில் இருந்துள்ளது. இப்படி செய்வதால் தோசங்கள் நீங்கியதோடு செல்வம் வரும் தடையும் தகர்ந்து போகும்.

சிக்கல் சிங்காரவேலர் கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் சிக்கல் நவநீதேசுவரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ கிழக்கேயும், நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ மேற்கேயும் அமைந்துள்ளது.[1] கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதேசுவர் சன்னதியும், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதியும், மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சன்னதியும் அமைந்துள்ளது.

Srinivasa247

நவநீதேசுவரர் கோவில்

நவநீதேசுவரர் கோவில்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வசிட்டர், காமதேனுவின் வெண்ணெயினால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டுப் பூசனை முடிவில் அதை எடுக்க முயன்ற போது அது சிக்கிக் கொண்டது என்பது ஒரு தொன்னம்பிக்கை. இங்குள்ள சிக்கல் சிங்காரவேலர் சந்நிதி தனிச்சிறப்பு கொண்டது. முக்கியமாக இந்த கோயில் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறந்த பலனை அளிக்கவல்லது

Ssriram mt

செல்வம் கொழிக்கச் செய்யும் கோயில்கள்

செல்வம் கொழிக்கச் செய்யும் கோயில்கள்

இந்த ஆடி மாசத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றியும் உண்டுமாம். சம்பள உயர்வும் உண்டுமாம். இதனால் முழுபலனையும் அடைய மேற்கண்ட முருகன் கோயிலுக்கு சென்று வரலாம். அல்லது உங்கள் பணிச்சுமை காரணமாக முடியவில்லை என்றால் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு முருகன் வள்ளி, தெய்வானையோடு அமர்ந்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

நாகப்பட்டினம் அதன் சிறந்த வரலாறு மற்றும் பண்பாட்டினால் மிகவும் புகழ் பெற்ற நகரம் ஆகும். இங்குள்ள துறைமுகம், நாட்டிலுள்ள சிறந்த துறைமுகங்களுள் ஒன்று. இங்கு அமைந்துள்ள கோவில்கள் புனித யாத்திரை மேற்கொள்வோரால், மிகவும் கவரப்பட்டவை ஆகும். சௌந்தர்யராஜ பெருமாள் கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், காயாரோகணசுவாமி கோவில், ஆறுமுகசுவாமி கோவில், போன்ற புகழ்பெற்ற கோவில்களைக் கொண்ட நகரமாக இது விளங்குகிறது. வேதாரண்யம் என்ற ஊரில் அமைந்திருக்கும் வேதாரண்யேஸ்வரர் கோவில், நாகூரில் 16 ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த நாகூர் தர்கா ஆகியவை நாகப்பட்டனத்துக்கு அருகாமையில் உள்ள சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்.

Ssriram mt

 அங்காளபரமேசுவரி அம்மன் கோயில்கள்

அங்காளபரமேசுவரி அம்மன் கோயில்கள்

தமிழகமெங்கும் இருக்கும் சிறப்பு வாய்ந்த அங்காளபரமேசுவரி அம்மன் கோயில்களுக்கு செல்வது சிறந்தது. அதிலும் ரிஷிப ராசிக்காரர்கள் இங்கு செல்வது இன்னும் சிறப்பு.

அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர், விழுப்புரம் மாவட்டம்.
அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர், விளார் சாலை, தஞ்சாவூர்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், புட்லூர், திருவள்ளூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி , சூளை, சென்னை.
அங்காளபரமேசுவரி, ராயபுரம் கல்மண்டபம், சென்னை.
அங்காளபரமேசுவரி , சென்ட்ரல், சென்னை.
அங்காளபரமேசுவரி , பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி , முத்தனாம் பாளையம், திருப்பூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி , காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி , சூரக்குழி, ஆண்டிமடம் அருகே, அரியலூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி , கோடாலிகருப்பூர், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்.
அங்காளபரமேசுவரி , வானாதிராஜபுரம், கடலூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி , துறையூர், திருச்சி மாவட்டம்.
அங்காளபரமேசுவரி , திருப்பனிபேட்டை, திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்.
அங்காளபரமேசுவரி , கோட்டூர், திருவாரூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி , கூவத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி , வேளுக்குடி, திருவாரூர், தஞ்சை மாவட்டம்.
அங்காளபரமேசுவரி , அச்சுதம்பேட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டம்

ஆகிய கோயில்கள் தமிழகமெங்கும் இருக்கின்றன. உங்களுக்கு எது மிகவும் அருகில் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை முயற்சி செய்வது சிறந்தது.

கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்

கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்

கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில் 108 திவ்ய தேசங்களுள் ஒரு கோயிலாகும். இது மிகவும் சிறப்பு மிக்க கோயிலாக விளங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி அருகே உள்ள கோயிலடி எனும் ஊரில் இந்த கோயில் அமைந்துள்ளது. இதன் புராண பெயர் திருப்பேர் நகர் என்பதாகும். இந்த கோயிலின் சிறப்பு இங்கு இரவில் அப்பம் செய்து இறைவனுக்கு படைக்கிறார்கள்.

எப்படி செல்வது

கல்லணை - திருவையாறு சாலையில் திருக்காட்டுப்பள்ளி நோக்கி திருச்சியிலிருந்து கிழக்கு நோக்கி 25 கிமீ தூரம் வரை சென்றால் இந்த கோயிலை அடையலாம்.

பா.ஜம்புலிங்கம்

திருவேற்காட்டு கருமாரியம்மன் கோயில்

திருவேற்காட்டு கருமாரியம்மன் கோயில்

கருமாரியம்மனை வேண்டி இங்கு வரும் பக்தர்களுக்கு திருமண தடை, குழந்தையின்மை நீங்கும். தொழில் வளர்ச்சி தருகிறது..

தீராத நோய்களைத் தீர்த்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். ராகு கேது கிரக தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன.

பௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை செய்யப்படுகின்றது.இந்தப் பூஜையைச் செய்பவர்கள் அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப பலன்களை அடைந்து வாழ்வில் உயர் நிலை பெறுகின்றனர்.

அள்ளிக் கொடுக்கும் ஆடி

அள்ளிக் கொடுக்கும் ஆடி

ரிஷப ராசிக்காரர்களுக்கு குதூகலத்துடன் கூடிய ஒரு சிறப்பான உல்லாச பயணம் போகும் வாய்ப்பு கிடைக்குமாம். அதன்படி மேலும் சில நன்மைகள் வீட்டில் இருப்போருக்கும் கிடைக்கும். சுற்றுலா செல்பவர்கள் செல்லுமிடத்தில் கோயில்களுக்கும் சென்றுவிட்டு செல்வது இன்னும் சிறப்பாகும்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்

திருப்பத்தூர் - குன்றக்குடி சாலையில் திருப்பத்தூரிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் இந்த ஊரில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கோயில் மிகவும் பழமையானது. 1300 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டது. இங்குள்ள பிள்ளையாரின் உருவம் 2 மீ உயரமானதாகுமே. கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது.

Sai DHananjayan

குன்றக்குடி முருகன் கோயில்

குன்றக்குடி முருகன் கோயில்

மதுரையிலிருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது குன்றக்குடி. இங்கிருந்து 5 கிமீ தொலைவில் பிள்ளையார்பட்டி உள்ளது. குன்றக்குடியில் தம்பி முருகரும், பிள்ளையார் பட்டியில் அண்ணன் விநாயகரும் வீற்றிருக்கின்றனர்.

Arunachalam S -

 சமயபுரம் மாரியம்மன் கோயில்

சமயபுரம் மாரியம்மன் கோயில்

திருச்சியிலிருந்து வடக்கே காவிரி வடகரை பகுதியில் சுமார் 15 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் கோயில் ஆகும். இவ்விடம் கண்ணனூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும் போஜீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளது. மாரியம்மன் இந்த கோயிலில் எட்டு கைகளுடன், கழுத்தில் தலை மாலை அணிந்து அசுரர்களை காலால் மிதித்து தனது இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

வடமாநிலத்திலிருந்தும் நிறைய பக்தர்கள் வருகை தருகின்றனர்.

TRYPPN

அள்ளிக்கொடுக்கும் ஆடி

அள்ளிக்கொடுக்கும் ஆடி


மிதுன ராசிக்காரர்களின் வருமானம் உயர்ந்து அவர்களின் குடும்ப நம்பிக்கை அதிகரிக்குமாம். இதனால் செல்வம் பெருகும். மேலும் வீட்டில் இதுவரை ஏற்பட்டு வந்த சின்ன சின்ன சிக்கல்கள் கூட இந்த கோயில்களுக்கு சென்று வந்தால் தீர்ந்துவிடும்.

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள வீரபாண்டி எனும் ஊரில் உள்ளது இந்த கௌமாரியம்மன் கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த கோயில் ஆகும். ஆடி மாசத்தில் சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு சித்திரைத் திருவிழாவின் போது ஒரு 24 மணி நேரம் முழுவதும் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த சமயத்தில் அம்மனிடம் வேண்டிக்கொள்பவர்கள் எது கேட்டாலும் கிடைக்குமாம்.

மோசூர் முத்துமாரியம்மன் திருக்கோயில்

மோசூர் முத்துமாரியம்மன் திருக்கோயில்


அருள்மிகு குட்டைக்கரையம்மன் என்கிற முத்துமாரியம்மன் திருக்கோயில் , வேலூர் மாவட்டத்தில் மோசூர் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த மிகப் பழமை வாய்ந்த திருக்கோயில் ஆகும். மேலும் ஆடி மாசத்தில் மிகவும் வலிமை பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு தவக் காளியம்மனுக்கு தனிச் சந்நிதி கொடுக்கப்பட்டுள்ளது. மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் திருமணம் நடக்கும்., தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

ஆடி தரும் அற்புதம்

ஆடி தரும் அற்புதம்

கடக ராசிக்காரர்கள் குடும்ப தலைவராக இருப்பின் அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி பொங்கும்.

Saravananrajm

பண்ணாரி

பண்ணாரி

தமிழகத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில்களிலேயே பண்ணாரி மாரியம்மன் கோயில் பெரும் புகழ் பெற்றதாகும். ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை எண் 209ல் பயணித்தால் பண்ணாரி எனும் ஊரை அடையலாம்.


Krishnaeee

வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில்

வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில்

வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில், மதுரையிலிருந்து கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த வண்டியூர் மாரியம்மன் கோயில். இதன் ஒருபகுதியில் வைகை ஆறு ஓடுகிறது. இல்லை முன்பு ஓடியது என்றுதான் சொல்லவேண்டும். பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் உள்ளார். மூலவராக மாரியம்மன் இருப்பதால் வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது.

எஸ்ஸார்

அள்ள அள்ள குறையாத செல்வ வரம்

அள்ள அள்ள குறையாத செல்வ வரம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். அதே நேரத்தில் அவர்களுக்கு இந்த கோயில்களுக்கு சென்று வந்த பலன்கள் கிடைத்தால் நோய் நொடி நீங்கும்

Youtube

 கோட்டை மாரியம்மன் கோயில்

கோட்டை மாரியம்மன் கோயில்

500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்களில் சிலர் இந்த கோயிலை கட்டியதாக நம்பப்படுகிறது. இந்த அம்மன்தான் இந்த கோட்டைக்கு காவல் தெய்வம். இதனாலேயே கோட்டை மாரியம்மன் என்று பெயர் வந்தது.

ஆடிப் பெருந்திருவிழாவில் ஆண்டு தோறும் ஆடி மாதம் சேலம் நகரே கொண்டாடும் அளவுக்கு ஆடித் திருவிழா வெகு விமர்சையாக இந்த கோயிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு நடக்கு பூச்சாட்டுதல் எனும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது.

 திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்

திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்

மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் இருக்கும் இந்த கோயில் மிகவும் சிறப்பானது. பொதுவாக கோயில்களில் மாரியம்மன் இடது காலை மடித்து வலது காலை ஊன்றியபடிதான் இருக்கும். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ வலது காலை மடித்து இடது காலை ஊன்றியிருக்கிறார். இந்த அமைப்பு இங்கிருக்கும் மாரியம்மனின் சிறப்பம்சம்.

Saba rathnam

 சேமிப்பே செல்வம்

சேமிப்பே செல்வம்

கன்னி ராசிக்காரர்களின் வங்கி சேமிப்பு உயர்ந்து வீட்டில் செல்வம் பெருகும்

Saba rathnam

திருச்சி செல்லாண்டியம்மன் கோயில்

திருச்சி செல்லாண்டியம்மன் கோயில்


திருச்சியில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோயில் மிகச் சிறப்பு வாய்ந்த கோயிலாகும். ஒவ்வொரு வருடமும் திருவிழா நடக்கும்போது, பனை ஓலையில் அம்மனை எழுந்தருளச்செய்கிறார்கள். இந்த ஓலையில் அம்மன் அருள்பாலிப்பதாக நம்பிக்கை உள்ளது. செல்லாண்டியம்மனுக்கு மற்ற தெய்வங்களைப் போல தலை, கை மற்றும் உடல் இல்லை. அம்மன் இத்தலத்தில் இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதியினை மட்டும் காட்டி தன சூலத்தால் அசுரனை வதம் செய்தபடி கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளாள்

நகை வாங்கும் யோகம்

நகை வாங்கும் யோகம்

துலாம் ராசிக் காரர்களின் வீட்டில் தங்க நகை வாங்கும் யோகம் அடிக்கிறது. வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில்

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில்

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் என்பது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சக்தி தலமாகும். இது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுடன் இணைந்த கோவிலாகும். இந்த தலம் திருநெல்வேலியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவை வட்டார வழக்கில் தசரா என்று அழைக்கின்றனர்.

பரிகாரம் அரு மருந்து

பரிகாரம் அரு மருந்து

விருச்சிக ராசி காரர்களின் தந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் இதனால் வீட்டில் கொஞ்சம் குழப்பங்கள் நிகழலாம். இதனைத் தீர்க்க சில கோயில்களில் சென்று பரிகாரம் செய்யவேண்டியிருக்கும்.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று திருவிழா நடைபெறுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று அபிசேகம் மற்றும் பூசைகள் நடைபெறுகின்றன. ஆடி மாதம் சிறப்பானதாக இருக்கும்.

ஆன்மீக நாட்டம்

ஆன்மீக நாட்டம்


தனுசு ராசிக்காரர்களின் பக்தி அதிகரித்து கடவுள் ஆன்மீக நாட்டம் கொள்வீர்கள்.

கன்னிவாடி இராஜகாளியம்மன் கோவில்

கன்னிவாடி இராஜகாளியம்மன் கோவில்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த கோயில் ராஜகாளியம்மன் கோயில் ஆகும். இது மிகவும் அழகான கட்டுமானத்தையும், மிகுந்த சக்தியையும் கொண்ட அம்மனும் உள்ள கோயில் ஆகும். இங்கு திருமணம் தடை, குழந்தைப் பேறின்மை ஆகிய தடைகள் நீங்க வேண்டுதல்கள் வைக்கப்படுகின்றன.

சிக்கனமே செல்வம்

சிக்கனமே செல்வம்

மகர ராசிக்காரர்களுக்கு செலவு அதிகரிப்பதால் சிக்கனத்துடன் இருப்பது சிறந்தது.

Ssriram mt

வேலை வரம் அருளும்

வேலை வரம் அருளும்


கும்ப ராசிக்காரர்களில் சிலர் சில மாதங்களாக வேலைக் கிடைக்காமல் தவித்து வந்திருப்பார்கள். அவர்களுக்கு இந்த மாதம் முடிவதற்குள் நிலையான வேலை கிடைக்கும். அதற்கு சில கோயில்களுக்கும் சென்று வருவது உங்கள் வேலையின் நிலைத் தன்மையை அதிகரிக்கும்.

Ssriram mt

 தொட்டதெல்லாம் துலங்கும்

தொட்டதெல்லாம் துலங்கும்

மீன ராசிக்காரர்கள் நிறைய கோயில்களுக்கு சென்று வரவேண்டிய காலம் இது. வெகு நாட்களாக தள்ளிப் போட்டுக்கொண்டிருந்த திட்டங்களையெல்லாம் செய்யத் தொடங்குவீர்கள். அதிலும் கோயில்களுக்கு செல்லும் திட்டம் இந்த மாதத்திலேயே நிறைவேறும்.

IM3847

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X