Search
  • Follow NativePlanet
Share
» »2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்

2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்

2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர் கோயில்

மாயன் காலண்டர் பத்தி கேள்வி பட்டிருக்கீங்களா? 2012 ல உலகமே அழிந்துவிடும்னு சொல்லி எல்லாருக்குள்ளயும் கிலிய உண்டாக்கிச்சே அதுதான். எப்படியோ ஐந்து வருடங்கள் தாண்டி வந்துவிட்டோம்.

மாயன் நாகரிக்கத்துக்கு சற்றும் குறையாத நாகரிகம் கொண்ட தமிழ் சித்தர்கள் பலர் உலகம் எப்படி இயங்கப் போகிறது என்பது பற்றி முன்னரே எழுதி வைத்துள்ளனர்.

சுனாமி, சென்னை வெள்ளம் பற்றி முன்கூட்டியே எழுதிய ஒருவரைப் பற்றியும் அவர் வாழ்வதாக கூறப்படும் மலை பற்றியும் நாம் பார்க்கப்போகிறோம்.

முக்காலமும் உணர்ந்த தலையாட்டி சித்தர்

யுகங்கள் கடந்தாலும், பெரும் பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர்.

நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். பூலோக இந்திரன் என்று தேவர்களால், ரிஷிகளால் என்றும் போற்றப்படும் மகா முனிவர் ஸ்ரீ காகபுஜண்டர். அவரும் அவரைப் போன்ற மகா முனிவர்களான ,ஸ்ரீ காலாங்கி, ஸ்ரீ புலிப்பாணி, ஸ்ரீ கொங்கணர், ஸ்ரீ கோரக்கர் போன்ற பலநூறு சித்தர்கள் வாசம் செய்யும் மலை பிரும்மரிஷி மலை ஆகும்.

அதிகம் படித்தவை:

மலைப் பகுதி எங்குள்ளது?

மலைப் பகுதி எங்குள்ளது?

இம்மலை திருச்சி பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

பென்ஸ் கார் தெரியும்.... பென்ஸ் ரயில்? இத படிங்க!

சித்தர்கள் எத்தனை பேர்

சித்தர்கள் எத்தனை பேர்

210 மகா சித்தர்கள் இங்கு வாசம் செய்வதாக வரலாறு கூறுகின்றது.

உலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?

ஜீவ சமாதி

ஜீவ சமாதி

பிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மகத்தான சக்தி படைத்தது.

ஜோதி

ஜோதி

இங்குள்ள மலையின் மீது அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுவது போல மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.

அதிர்வலைகள்

அதிர்வலைகள்

மலையின் கீழ் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. மிகுந்த அதிர்வலைகள் உடையதாய் இம்மலையும், இவ்வாலயமும் விளங்குகிறது.

ஜீவ வித்துக்கள்

ஜீவ வித்துக்கள்

வருங்காலத்தில் ஸ்ரீ தேவி நளினி அம்மனாய் தோன்றி, "ஸ்ரீ ரங்கா கலி கொண்டு வா!" என்று கூறி கலி முடிக்கும் போது, மகா சித்தர் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி, ஒரு கோடி மனித ஜீவ வித்துக்களை பாதுகாக்கும் மாமலையாக இப் பிரும்மரிஷி மலையே விளங்கப் போவதாக சித்தர் வாக்கில் கூறப்படுகிறது.

பெருவுடையார் கோயில் தெரியும். அது என்ன இரண்டாவது பெருவுடையார் கோயில்?

தலையாட்டிச் சித்தர்

தலையாட்டிச் சித்தர்


இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ள தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி. இன்னமும் சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார்.

உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்

2020ல் இந்தியா

2020ல் இந்தியா

அவர் எழுதிய காலஞானம் நூலில் வருங்காலத்தில் நடக்கும் பல அதிசயமான தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அதுபற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல் 2020க்குள் உலகில் நடக்கப் போகும் பல விஷயங்கள் பற்று அந்நூலில் கூறப்பட்டுள்ளதாம்.

சிதம்பர ரகசியம்!!! இதுதானாம்

More News

Read more about: travel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+