Search
  • Follow NativePlanet
Share
» »தெறி டீசரில் வரும் இந்த இடம் எது தெரியுமா ?

தெறி டீசரில் வரும் இந்த இடம் எது தெரியுமா ?

By Naveen

புத்தாண்டுக்கு கூட இத்தனை பேர் இரவு 12மணி வரை விழித்திருந்து கொண்டாடியிருக்க மாட்டார்கள். ஆனால் நேற்று இரவு விஜய்யின் புதிய படத்தின் டீசர் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்ட போது இணையமே அதிர்ந்தது என சொல்லலாம்.

ஒரு பக்கம் விஜய் ரசிகர்களை பெரிய அளவில் திருப்திபடுத்தும் விதமாக டீசர் இருப்பதாக சொல்லப்பட்டாலும் இதே நாளில் சென்ற ஆண்டு வெளியான அஜித்தின் 'என்னை அறிந்தால்' பட சாயலிலேயே இதுவும் இருக்ககூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த டீசரில் ஒரே ஒரு நொடி மட்டுமே கடந்து போன ஒரு காட்சியே பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியிருக்கிறது. அது விஜய் சற்று வித்தியாசமான கெட்டப்பில் மலைகள் சூழ்ந்த ஓரிடத்தில் நீண்டதொரு சாலையில் புல்லட்டில் போகும் காட்சி தான் அது.

அது எந்த இடம்?. வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

லடாக்:

லடாக்:

ராயல் என்பீல்ட் பைக் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தன் வாழ்கையில் ஒரு ஒருமுறையாவது பயணித்திட வேண்டிய இடம் லடாக்கின் பேரழகு நிறைந்த சாலைகள் ஆகும்.

உலகில் இதைவிட அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்த சாலையே இல்லை என சொல்லலாம்.

லடாக்:

லடாக்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்திருக்கும்லடாக்கில் தான் உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் சாலைகள் உள்ளன.

இங்குள்ள ஆபத்தான பள்ளத்தாக்குகளில் பயணிப்பது மெய்சிலிர்க்கவைக்கும் அனுபவமாக இருக்கும்.

Sumeet Basak

லடாக்:

லடாக்:

பொதுவாக இங்கே பைக் பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இரண்டு சாலைகளை பயணம் செய்வதற்காக தேர்ந்தெடுக்கின்றனர்.

ஜம்முவின் தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து லடாக்கின் தலைநகரான லெஹ் வரையிலும் அல்லது ஹிமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லெஹ் வரையிலும் சாலைப்பயணம் செய்கின்றனர்.

sandeepachetan.com trav

லடாக்:

லடாக்:

இந்த பயணத்தின் போது கடல் மட்டத்தில் இருந்து மிக உயரத்தில் இருக்கும் மலை முகடுகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் போன்றவற்றை கடக்க வேண்டியிருக்கும்.

Prabhu B Doss

மணாலி - லெஹ்:

மணாலி - லெஹ்:

மணாலி - லெஹ் சாலையில் பயணிக்க வேண்டும் என்பது பைக் ஆர்வலர்களின் கனவுப் பயணங்களில் ஒன்று. கிட்டத்தட்ட 460கி.மீ தூரம் கொண்ட இந்த சாலைப்பயணம் சாகசத்தில் உச்சம் எனலாம்.

ஏனென்றால் இந்த சாலையில் கிட்டத்தட்ட 360கி.மீ தொலைவு மனிதர்களே வசிக்காத பகுதியாக இருக்கிறது.

மணாலி - லெஹ்:

மணாலி - லெஹ்:

பெட்ரோல், மருத்துவமனை போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என்பதினால் தெளிவான திட்டமிடல் இந்த பயணத்திற்கு அவசியம்.

பொதுவாக மணாலியில் இருந்து லெஹ் வந்தடைய மூன்று நாட்கள் வரை ஆகிறது.

Anuradha

மணாலி - லெஹ்:

மணாலி - லெஹ்:

ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை இந்த சாலைப்பயணம் மேற்கொள்ள சிறந்த காலகட்டமாக சொல்லப்படுகிறது.

மற்ற நேரங்களில் இந்த சாலையில் இருக்கும் இரண்டு முக்கிய கணவாய்களான ரோஹ்டங் மற்றும் பரலச்சலா கணவாய்கள் பனியால் மூடப்பட்டிருக்கும்.

Sameer Karmarkar

ஸ்ரீநகர் - லெஹ் நெடுஞ்சாலை:

ஸ்ரீநகர் - லெஹ் நெடுஞ்சாலை:

லடாக் தலைநகர் லெஹ்வை நோக்கி பயணிக்க மற்றுமொரு சிறந்த சாலை லெஹ்வை காஷ்மீருடன் இணைக்கும் ஸ்ரீ நகர்-லெஹ் தேசிய நெடுஞ்சாலை ஆகும். 434கி.மீ நீளமுடைய இந்த சாலை பூக்களின் பள்ளத்தாக்கை ஒட்டி செல்கிறது.

Prabhu B Doss

ஸ்ரீநகர் - லெஹ் நெடுஞ்சாலை:

ஸ்ரீநகர் - லெஹ் நெடுஞ்சாலை:

கடுமையான பனிப்பொழிவின் காரணமாக வருடத்தில் ஆறு மாதங்கள் இந்த நெடுஞ்சாலை மூடியிருக்கிறது. மே மாதம் அக்டோபர் வரை இந்த சாலையில் பயணிக்க உகந்த நேரமாகும்.

Henrik Johansson

ஸ்ரீநகர் - லெஹ் நெடுஞ்சாலை:

ஸ்ரீநகர் - லெஹ் நெடுஞ்சாலை:

ச்பிதுக் மடாலயம், காந்த மலை, பதர் சாஹிப் குருத்வாரா, சொன்மார்க், கார்கில், வாஹா போன்ற அற்புதமான சுற்றுலாத்தலங்களங்களுக்கு இந்த பயணத்தின் போது செல்லலாம்.

பௌர்ணமி இரவில் இந்த சாலையில் பயணிக்கும் அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது.

Sanjay P. K.

ஸ்ரீநகர் - லெஹ் நெடுஞ்சாலை:

ஸ்ரீநகர் - லெஹ் நெடுஞ்சாலை:

நண்பர்களுடன் நீண்ட தூர பயணம் போக வேண்டும் என்பது உங்கள் ஆசையாக இருந்தால் நிச்சயம் லடாக்கிற்கு ஒரு ரோட் ட்ரிப் வாருங்கள்.

லடாக் பயண தகவல்கள்

Read more about: ladakh adventure road trip
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X