Search
  • Follow NativePlanet
Share
» »நீங்கள் சிதம்பரம் சென்றால் மிஸ் பண்ணாமல் இந்த இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்!

நீங்கள் சிதம்பரம் சென்றால் மிஸ் பண்ணாமல் இந்த இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்!

சிதம்பரம் நம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான ஊர் தான்! தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த சிறிய நகரம் 5 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்து பழங்காலத்து திராவிட கலாச்சாரத்தை இன்றளவும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. வளமான வரலாறு மட்டுமின்றி, சிதம்பரத்தின் இயற்கை அழகு தென்னிந்தியாவின் பல இடங்களை விஞ்சுகிறது என்று தான் சொல்ல வேண்டும். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அழகிய நகரம் எண்ணற்ற கண்கவர் சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. அவை யாவும் நம் வாழ்வில் நிச்சயம் கண்டு களிக்க வேண்டியவை! நீங்களும் சிதம்பரம் போகும் போது மறக்காமல் ஒரு விசிட் அடித்துவிட்டு வாருங்கள்!

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

ஐந்து பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக நடராஜர் கோயில் ஆதிப்பரம்பொருளான சிவபெருமானுக்காக கி.மு.10ம் நூற்றாண்டில் சோழப் பேரரசர்களால் கட்டப்பட்டது. 40 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நடராஜப் பெருமான் கோயில், சோழர்களின் கட்டிடக்கலையின் மேதைமைக்கு மிக அழகான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் தென்னிந்தியாவில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாகும்.

மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆனி திருமஞ்சனம் ஆகிய முக்கிய திருவிழாக்களில் மூலவரான நடராஜர் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா அருகிறார். கருவறையில் உள்ள கடவுளே வீதி உலா வருவது இந்த கோவிலில் மட்டுமே! பொன் அம்பலத்தின் தங்க மண்டபத்தில் ஆனந்த தாண்டவத்தை ஆடும் நடராஜராக சிவனே காட்சியளிக்கிறார்.

பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள்

பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள்

உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடு என்ற பெருமையைக் கொண்டுள்ள பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் 1100 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த இயற்கை அழகு நிறைந்த அதிசயம் சந்தேகத்திற்கு இடமின்றி, தென்னிந்தியாவில் சுற்றிப் பார்க்கும் இடங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். காட்டில் பல்வேறு அளவுகளில் 50 க்கும் மேற்பட்ட தீவுகள் மற்றும் 4,400 பெரிய மற்றும் சிறிய கால்வாய்கள் உள்ளன. கோணம், இறால், நண்டு, மட்டி, ஆமை, நீர்நாய் மற்றும் சுமார் 200 வகையான பறவைகளும் 2 லட்சம் மரங்களும் இங்கு உள்ளன. இயற்கையை அதன் மிக அழகான வடிவில் காண, பிச்சாவரம் காயல் பகுதிக்கு வருகை தருவது அவசியம்.

தரங்கம்பாடி

தரங்கம்பாடி

தரங்கம்பாடி என்பது சிதம்பரத்திலிருந்து ஒரு மணி நேர பயண நேரத்தில் சென்றடையக்கூடிய துறைமுக நகரமாகும். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கு முன்பு இது நீண்ட காலமாக டேனிஷ் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. இந்த நகரத்தின் டேனிஷ் பெயர் டிரான்க்யூபார். டச்சுக்காரர்கள் வங்காள விரிகுடாவின் கடற்கரையில் 17 ஆம் நூற்றாண்டில் டான்ஸ்போர்க் கோட்டையைக் கட்டினார்கள். இந்த நகரம் தொலைதூர கடந்த காலங்களில் மேற்கத்திய உலகத்துடன் தமிழ்நாடு கொண்டிருந்த பல தொடர்புகளை நினைவூட்டுகிறது. 1718 இல் டச்சுக்காரர்களால் தரங்கம்பாடியில் கட்டப்பட்ட தேவாலயம் ஜெருசலேமில் உள்ள தேவாலயத்தின் மாதிரியாகும்.

சிலப்பதிகாரம் கலைக்கூடம்

சிலப்பதிகாரம் கலைக்கூடம்

இந்த சிலப்பதிகாரம் கலைக்கூடம் பூம்புகார் நகரில் உள்ளது, இந்த நகரம் சோழர் காலத்தில் காவேரி பூம்பட்டினம் என்று அழைக்கப்பட்ட ஒரு பண்டைய துறைமுக நகரமாக இருந்தது. இந்த நகரத்தில் இருக்க வேண்டிய பழங்கால நினைவுச்சின்னங்கள் அனைத்தும் ஆழி பேரலையால் அழிந்துவிட்டன என்று வரலாறு கூறுகிறது. இந்த பழம்பெரும் நகரத்தின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக 20 ஆம் நூற்றாண்டில் இந்த சிலப்பதிகாரம் கலைக்கூடம் கட்டப்பட்டது. இது பழைய தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் தொடர்பான கலைப்படைப்புகளுடன் கூடிய 7 மாடி கட்டிடமாகும். நீங்கள் சிதம்பரம் சென்றால் கட்டாயம் இந்த இடத்தை பார்க்க தவறாதீர்கள்.

தில்லை காளி அம்மன் கோவில்

தில்லை காளி அம்மன் கோவில்

தில்லை நடராஜர் கோவிலின் வடக்கு முனையில் அமைந்துள்ள தில்லை காளி அம்மன் கோவில், இந்த நகரத்தில் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கோவிலில் உள்ள சில கல்வெட்டுகள், பழைய இந்து ஷோசா காலங்களை விவரிக்கின்றன. கோவில் பூசாரிகள் ஒவ்வொரு நாளும் நான்கு முறை பூஜை செய்கிறார்கள், ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் செய்யப்படும் தனிப்பட்ட பூஜையில் ஏராளமான மக்கள் கலந்துக் கொள்கின்றனர். இக்கோயிலின் பிரதான தெய்வமான காளி மிகவும் உக்கிரம் வாய்ந்தவர் என்றும் தன் பக்தர்களிடம் தீய எண்ணத்துடன் யாரும் நெருங்க முடியாதபடி அன்னை காத்து அருள்கிறாள் என்றும் நம்பப்படுகிறது.

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

சிதம்பரம் 42 கிமீ தொலைவில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழபுரம் 1025 ஆம் ஆண்டு முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சியின் போது எழுப்பப்பட்ட நகரமாகும். மேலும், இது சுமார் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக இருந்தது. ராஜராஜ சோழனின் மகனும் வாரிசுமான முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோவில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான 'கிரேட் லிவிங் சோழர் கோவில்கள்' பட்டியலில் இடம் பெற்றுள்ள கோவிலாகும். இக்கோயிலில் உள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்டு, இக்கோயிலில் உள்ள கருவறையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் தரையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சூரிய ஒளி நந்தியின் மீது விழுந்து கருவறையில் உள்ள இறைவனைப் பிரதிபலிக்கிறது. இதைக் கட்டாயம் நீங்களும் காண வேண்டும் தானே!

 பூம்புகார் கடற்கரை

பூம்புகார் கடற்கரை

பூம்புகார் கடற்கரை தமிழ்நாட்டின் பழமையான கடற்கரைகளில் ஒன்றாகும். இது 3 கிமீ நீளமுள்ள இயற்கையான கடற்கரையாகும், அதன் தெற்கு முனையில் காவேரி ஆற்றின் முகத்துவாரம் உள்ளது. காவேரி நதி கடலில் கலக்கும் முகத்துவாரத்திற்கு சென்று பார்க்க வேண்டும். அது மிகவும் அழகாக இருக்குமெனவும் அமைதியை உணரலாம் என்றும் அங்கு செல்பவர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கோவலன், கண்ணகி என மதுரையை அழிக்க கிளம்பிய புயல் இங்கிருந்து தான் சென்றது. பல வரலாற்றை உட்கொண்ட பூம்புகார் கடற்கரையில் அமைதியாக உலாவி அழகை ரசித்திடுங்கள்.

மயூர நாத சுவாமி கோவில்

மயூர நாத சுவாமி கோவில்

சிதம்பரத்திலிருந்து 42 கிமீ தொலைவில் அமைந்துள்ள மயிலாடுதுறையில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மயூரநாத சுவாமி கோவில் உள்ளது. வாரணாசியில் உள்ள கோயிலுக்கு நிகரான ஆறு கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்று. இக்கோயில் 10ஆம் நூற்றாண்டில் செம்பியன் மகாதேவியின் காலத்தில் கல்லால் புனரமைக்கப்பட்டது. செம்பியன் மகாதேவியின் காலத்து விநாயகர், நடராஜர், தக்ஷிமாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, கங்கா விசர்ஜனமூர்த்தி, துர்க்கை மற்றும் பிக்ஷடனர் ஆகியோரின் சில கல் சிற்பங்கள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில்

ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில்

சோழர்களின் பாரம்பரிய கட்டிடக்கலை பாணியில் 11 ஆம் நூற்றாண்டில் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாகும். எமன் சிவனுடன் மோதிய 8 வீர ஸ்தலங்களில் ஒன்று திருக்கடையூர். மிருகண்டுவின் மகன் மார்க்கண்டேயரை எமனிடமிருந்து சிவபெருமான் காத்த தலம் இது என்று நம்பப்படுகிறது. எமனின் கயிற்றால் ஏற்பட்ட வடு, அபிஷேக காலங்களில் லிங்கத்தில் இன்றளவும் நாம் காணலாம். இக்கோயிலின் அம்பாள் ஸ்ரீ அன்னை அபிராமி ஆவாள். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றை இக்கோயிலில் செய்தால் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம். நீங்களும் அதைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்களே!

சிதம்பரம் ஷாப்பிங்

சிதம்பரம் ஷாப்பிங்

சிதம்பரம் ஷாப்பிங் செய்வதற்கான குறைந்த வாய்ப்புகளை வழங்குகிறது, சந்தைகளில் நினைவுப் பொருட்கள், கோவில் மற்றும் நடராஜரின் பிரதிகள் மற்றும் சில உள்ளூர் கைவினைப்பொருட்கள் ஆகியவற்றை மட்டுமே வாங்க முடியும். ஆனால் சிதம்பரம் கோல்டு கவரின் நகைகள் மிகவும் பிரபலமானவை. நீங்கள் அவற்றை வாங்கி மகிழலாம்.

சிதம்பரம் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள எந்த முக்கிய நகரத்திற்கும் விமானம் அல்லது ரயிலில் செல்வதன் மூலம், உள்ளூர் போக்குவரத்து அல்லது தனியார் போக்குவரத்து மூலம் சிதம்பரத்தை எளிதாக அடையலாம். இத்தனை சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்கள் நிரம்பிய சிதம்பரத்திற்கு நீங்கள் எப்போது செல்ல போகிறீர்கள்?

More News

Read more about: chidambaram tamil nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+