புதியதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் எவரும் ஒருவருக்கொருவர் சரியாக புரிந்து கொண்டு அன்பு கலந்த இல்லற வாழ்க்கையை தொடங்க ஆரம்ப புள்ளியாக இருக்கும் ஒரு விஷயம் தான் - தேனிலவு! அந்த தேனிலவுக்கு செல்ல இந்த காலத்து இளைஞர்கள் பெரும்பாலும் பாலி, தாய்லாந்து, சிங்கப்பூர், துபாய் என வெளி நாடுகளுக்கும் மணாலி, குலு, காஷ்மீர், சிக்கிம் என காஸ்ட்லியான இடங்களை தேர்வு செய்கின்றனர்.
இயற்கை அழகிலும், காதல் உணர்வை தூண்டுவதிலும் மற்ற இடங்களுக்கு நிகரான பல அழகிய இடங்கள் தமிழகத்திற்கு உள்ளேயும், தமிழகத்தில் இருந்து சென்று வரக்கூடிய தூரத்திலும், முக்கியமாக மிகவும் கம்மி பட்ஜெட்டில் உள்ளன.

கொடைக்கானல்
மலைவாசஸ்தலங்களின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் அடர்ந்த காடுகள், பசுமையான சுற்றுப்புறங்கள், இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சிகள், அமைதியான ஏரிகள் மற்றும் வசதியான விருந்தினர் இல்லங்கள் ஆகியவற்றால் நம்மை மயக்குகிறது. அழகான பைன் காடுகள் தொடங்கி, பிரையன்ட் பூங்கா, வட்டக்கனல், குணா குகைகள், போட்டிங், பல்வேறு நீர்வீழ்ச்சிகள் என உங்கள் துணையுடன் பேசிக் கொண்டே பொழுதை கழிக்கலாம்.

மூணாறு
கேரளாவின் வசீகரமான சுற்றுலாத்தலமான மூணாறு நிச்சயமாக தேனிலவுக்கு தென்னிந்தியாவின் சிறந்த மலைவாசஸ்தலம் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த நகரம் ஆண்டு முழுவதும் இனிமையான வானிலையை வழங்குகிறது. பழமையான தேயிலை தோட்டங்கள், வளைந்த சாலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் குளிர்ந்த காலநிலை ஆகியவை மூணாரை தேனிலவுக்கு விருப்பமான இடமாக மாற்றுகி

ஊட்டி
மலைகளின் ராணி என்று செல்லமாக அழைக்கப்படும் ஊட்டி திருமண வாழ்க்கையின் தொடக்கத்திற்கு ஏற்ற ஒரு மாயாஜால இடமாகும். வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் மலையேற்றம், கைகளைப் பிடித்துக் கொண்டு, உங்களின் எதிர்காலத்தைப் பற்றிப் பேசுவது, பரந்து விரிந்த தோட்டங்கள் மற்றும் பழத்தோட்டங்களில் ஒருவருக்கொருவர் ரசிப்பது என நேரம் போவது தெரியாது.

வாகமன்
பசுமையான காடுகளாலும், எல்லையற்ற அமைதியாலும் சூழப்பட்டிருக்கும், கேரளாவில் உள்ள இந்த அமைதியான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலம், தங்கள் புதிய வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்க அழகிய அமைப்புகளைத் தேடும் இளம் தம்பதிகளுக்கு புகலிடமாக உள்ளது. உங்கள் துணையுடன், பசுமையான பள்ளத்தாக்குகளுக்கு மத்தியில் நிதானமாக நடந்து செல்லுங்கள், ஏரியில் படகு சவாரி செய்யுங்கள், பாரன் மலைகளுக்குச் செல்லுங்கள், மர்மலா நீர்வீழ்ச்சியில் நீராடி மகிழ்ந்திடுங்கள்.

தேக்கடி
இந்தியாவின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான தேக்கடியின் பெரியார் வனப் பகுதி பல புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை வழங்குகிறது. வனவிலங்குகளை கண்டு ரசிப்பது, படகு வீட்டில் தங்குவது, இயற்கையுடன் உலா வருவது என தேக்கடி உங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

குடகு
இனிமையான காலநிலை, நீர்வீழ்ச்சிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் தோட்டங்களுக்கு நடுவே தங்கியிருப்பது என குடகு உங்களுக்கு ஒரு இனிமையான தேனிலவு அனுபவத்தை வழங்குகிறது. மசாலாத் தோட்டங்கள் வழியாக மலையேற்றம், காவிரியில் ஒரு கோரக்கிளில் மிதப்பது, அரிய பறவைகளின் காட்சிகளைப் படம்பிடித்தல், அபே நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுதல், இரவு முழுவதும் முகாமிடுதல் ஆகியவை குடகில் நீங்கள் ஈடுபட வேண்டிய விஷயங்களாகும்.

வயநாடு
நெல் வயல்களின் நிலம் என பொருள் படும் வயநாடு பெயருக்கு ஏற்றார் போலவே பசுமையான தோட்டங்களால் நம் கண்களை கட்டி போடுகிறது. இந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் இயற்கை அழகு மட்டுமே நிறைந்து இருக்கிறது. பசுமையான மலைகள், பழமையான ஆறுகள், கவர்ச்சியான வனவிலங்குகள் மற்றும் மூடுபனி மலைகள் முதல் மக்களின் அற்புதமான விருந்தோம்பல் வரை, வயநாடு சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் தேனிலவு பயணத்தில் கேரளாவிற்கு சுற்றுலா செல்ல சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

மேகமலை
தேனி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1500 மீ உயரத்தில் அமைந்துள்ள மேகமலை பசுமையான மலைகள், ஜில்லென்ற வானிலை, அழகான தோட்டங்கள், குளிர்ந்த நீர்வீழ்ச்சிகளால் நிறைந்துள்ளது. காதல் மனைவியுடன் அமைதியாக நேரம் செலவிட மேகமலை ஒரு சூப்பரான தேர்வாகும்.

சிக்மகளூர்
தென்னிந்தியாவிலும், கர்நாடகாவிலும் உள்ள அழகிய மலைவாசஸ்தலங்களில் ஒன்றான சிக்மகளூர், அடர்ந்த புல்வெளிகள் மற்றும் காடுகள் வழியாகச் செல்லும் சில அற்புதமான பாதைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த பிரபலமான தேனிலவு இடமானது பசுமையான தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், கம்பீரமான நீர்வீழ்ச்சிகள், பழங்கால கோவில்கள் மற்றும் மறக்க முடியாத தேனிலவு நாட்களை கழிக்க ரொமான்டிக் ரிட்ரீட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அரக்கு பள்ளத்தாக்கு
ஆந்திராவில் உள்ள ஒரே அழகிய மலைவாசஸ்தலமான அரக்கு பள்ளத்தாக்கு தென்னிந்தியாவின் சிறந்த தேனிலவு இடங்களில் ஒன்றாகும். இதமான வானிலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகள், அழகிய வனவிலங்கு சேகரிப்பு மற்றும் பசுமையான காபி தோட்டங்களுடன் அரக்கு புதுமண தம்பதிகளுக்கு ஒரு இனிமையான வானிலையை வழங்குகிறது.
இந்த இடங்களில் நீங்கள் எந்த இடத்திற்கு செல்லப் போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications






