Search
  • Follow NativePlanet
Share
» »பரிசல் சவாரி, குளியல், சுடச்சுட மீன் வறுவல் – ஒகேனக்கல் செல்ல இதுவே சரியான நேரம்!

பரிசல் சவாரி, குளியல், சுடச்சுட மீன் வறுவல் – ஒகேனக்கல் செல்ல இதுவே சரியான நேரம்!

நமது அன்றாட வாழ்வில் இருந்து ஓய்வெடுத்து ஒரு சின்ன சுற்றுலா சென்று வந்தால் மனதிற்கும் உடலுக்கும் ஒரு புது விதமான புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. அதுவும் இந்த நேரத்தில் களைக்கட்டி இருக்கும் ஒகேனக்கலுக்கு சென்று அருவியில் குளித்து ஆட்டம் போட்டு, பரிசலில் சவாரி செய்து, அங்கே மிகவும் பிரஷ்ஷாக கிடைக்கும் மீன் வறுவல்களை ருசித்தால் நன்றாக இருக்கும் இல்லையா!

1

புகை போல ஆர்ப்பரித்து கொட்டும் அருவி

கன்னடத்தில் 'ஹோகே' என்றால் புகை என்றும் 'கல்லு' என்றால் பாறை என்றும் பொருள். ஒகேனக்கல் என்பது பாறைகளின் மேல் புகை என்று பொருள்படும், இது கர்நாடகாவிலிருந்து காவேரி நதி தமிழ்நாட்டிற்குள் நுழையும் போது பல பிரிவுகளாக 70 அடி உயரத்தில் இருந்து ஓங்காரமாக விழுவதை பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக இருக்கும்.

ஒரு நாள் சுற்றுலா செல்ல சரியான இடம்

பெங்களூரில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள ஒகேனக்கல்லில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தாராளமாக கொட்டுகிறது. கார்பனைட் பாறைகள், கொராக்கிள் (கூடை படகு) சவாரிகள், நன்னீர் மீன்கள், உள்ளூர்வாசிகளின் எண்ணெய் மசாஜ்கள் ஆகியவை பெங்களூரில் இருந்தும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட மக்களுக்கு ஒரு நாள் பயணம் அல்லது வார இறுதிப் பயணத்திற்கு ஏற்றதாக அமைகிறது.

2

ஏன் ஒகேனக்கல் செல்ல வேண்டும்

1. ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி ஆண்டு முழுவதும் அதிகபட்ச நீர் மட்டத்தால் கண்ணுக்கு விருந்தளிக்கிறது. பாறைகள் வழியாக அற்புதமான காட்சிகளையும் நீரோட்டத்தையும் அனுபவிக்க முடியும்.

2. இருபுறமும் நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட இரண்டு மாபெரும் பாறைகளுக்கு நடுவில் ஆற்றின் மீது கோரக்கிள் சவாரி செய்து மகிழலாம்.

3. ஒகேனக்கல்லுக்கு வருபவர்கள் புதிதாக பிடிபட்ட மீன் சார்ந்த உணவுகளை அனுபவிக்கலாம். கட்லா, ரோபு, கெண்டை, கழுதி, வாழை, மிர்கால், அரஞ்சன் மற்றும் ஜிலேபி வகை மீன்களை ருசிக்கலாம்

4. உள்ளூர் ஆட்கள் ஆற்றின் கரையில் பார்வையாளர்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்கிறார்கள்.

5. வலுவான நீரோட்டங்கள் மற்றும் நீருக்கடியில் கூர்மையான பாறைகள் இல்லாத இடத்தில் நீங்கள் நீச்சலடித்து மகிழலாம்.

எப்போது செல்ல வேண்டும்

ஒகேனக்கல்லுக்கு ஆண்டு முழுவதும் செல்லலாம் என கூறினாலும் பருவமழைக்குப் பிறகு அல்லது பருவமழை தொடங்கிய நேரம் தான் சரியான நேரம், இந்த நேரத்தில் அது கூட்டமாக இருக்கும். எனவே, நீர்வீழ்ச்சிக்கு அடியில் சென்று அதன் அழகை ரசிக்க கோரக்கிள்கள் சாத்தியமாகும். உள்ளூர் மக்களால் பரிசல் என்று அழைக்கப்படும் கோரக்கிள்களில் சுமார் 6 பேர் வரை பயணிக்கலாம், இதில் சவாரி செய்வது நிச்சயமாக சாகசமாக இருக்கும்.

3

எப்படி செல்வது

ஒகேனக்கல் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அருவியிலிருந்து 180 கி.மீ தொலைவில் பெங்களூர் உள்ளது. பெங்களூர், தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய இடங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒகேனக்கல் செல்லும் சாலைகள் மிகவும் நன்றாக பராமரிக்கப்படுவதால் நீங்கள் உங்கள் சொந்த வாகனங்களிலும் ஒரு லாங் ரைடு செல்லலாம்.

4

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஒகேனக்கல் அருவி மட்டுமல்லாது ஒகேனக்கல்லுக்கு அருகே பல எண்ணற்ற அழகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன, அவற்றையும் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.

1. மேட்டூர் அணை

2. மேலகிரி மலைகள்

3. பென்னகரம் கிராமம்

4. தீர்த்தமலை கோவில்

5. கிருஷ்ணகிரி அணை

6. முதலைகள் காப்பகம்

7. சினி நீர்வீழ்ச்சி

8. வத்தல்மலை

இத்தனை சிறப்பு வாய்ந்த ஒகேனக்கல்லுக்கு நீங்கள் எப்போது செல்லக் போகிறீர்கள்?

More News

    Read more about: hogenakkal travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+