Search
  • Follow NativePlanet
Share
» »நமது குழப்பங்களுக்கு பதிலளிக்கும் மந்திரக் கல் – யாராலும் நகர்த்த முடியாத கல் தானாகவே நகரும் அதிசயம்!

நமது குழப்பங்களுக்கு பதிலளிக்கும் மந்திரக் கல் – யாராலும் நகர்த்த முடியாத கல் தானாகவே நகரும் அதிசயம்!

நீங்கள் படத்தில் பார்க்கும் இந்த கல் ஒரு சாதாரண கல் அல்லவே அல்ல! இந்த கல் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது, மகாராஷ்டிராவின் மா துளிஜா பவானி கோவிலில் தான் இருக்கிறது இந்த கல். சத்ரபதி சிவாஜி போருக்குச் செல்லும்போது அவருக்கு எழும் சந்தேகங்கள் அனைத்தையும், கேள்விகள் அனைத்தையும் இந்த மந்திரக் கல்லிடம் கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் தான் போருக்கு செல்வாராம்! இன்று வரை இந்த கல் சொல்லும் அனைத்தும் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறது என அங்கே செல்லும் பக்தர்கள் கூறுகின்றனர்!

51 சக்தி பீடங்களில் ஒன்றான மா துளிஜா கோயில்

துல்ஜா பவானி கோயில் மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் துல்ஜாபூரில் அமைந்துள்ளது. இது துர்கா மாதாவின் அவதாரமான பவானி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவில். ஸ்ரீ துல்ஜாபவானி மந்திர் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகும் மற்றும் இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.

உலகை காக்க வந்த மா துளிஜா தேவி

மா துளிஜா பவானி அவதாரம் பற்றி பல கதைகள் உள்ளன. புராணங்களின் படி, மது-கைதாப் என்ற அரக்கன் உலகை அழிக்க முற்பட்டான். பக்தர்கள் அனைவரும் பிரம்மாவிடம் சென்றனர். பிரம்மரோ, மாதா பார்வதியிடம் உதவி பெறுமாறு அறிவுறுத்தினார். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மாதா பார்வதி தேவி வாராஹி, வைஷ்ணவி, பிராமி, சாம்பவி மற்றும் கௌமாரி, இந்திராணி, பவானி ஆகிய சப்த கன்னியர்கள் ஒரு சேர வடிவத்தை இந்த வடிவத்தை எடுத்து அசுரனை அழித்து அமைதியை நிலைநாட்டினாள். பவானி தேவி எருமை வடிவில் மாறுவேடமிட்ட மகிஷனை அழித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. மகிஷா பாலகாட் மலைத்தொடரின் ஒரு பகுதியான யமுனா சாலா மலையை கைப்பற்றினார். இந்த மலையின் மீது தான் துளிஜா பவானி கோவில் உள்ளது.

chintamanistone1

மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்

12ஆம் நூற்றாண்டில் கடம்ப வம்சத்தைச் சேர்ந்த மராட்டிய மகாமண்டலேசுவர மரததேவாவால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூன்று வாயில்கள் உள்ளன, பிரதான நுழைவாயில் சர்தார் நிம்பல்கரின் பெயரிடப்பட்டது, மற்ற இரண்டும் சத்ரபதி சிவாஜியின் பெற்றோரின் பெயரிடப்பட்டது. பக்தர்களின் கூற்றுப்படி, பவானி அம்மன் சிலை சுயம்புவாக உள்ளது. கிரானைட் கற்களால் செய்யப்பட்ட இந்த சிலை மூன்றடி உயரம் கொண்டது. தேவிக்கு எட்டு கரங்கள் தாங்கிய ஆயுதங்களும் மகிஷா என்ற அரக்கனின் தலையும் உள்ளது.

தானாகவே நகரும் சிந்தாமணி கல்

மேற்கூறிய எல்லாவற்றையும் விட சுவாரஸ்யமான விஷயம் இது தான், மா துளிஜா பவானி கோயிலில் ஒரு மந்திரக் கல் ஒன்று உள்ளது. இந்த கல்லின் பெயர் சித்தமணி கல், இந்தக் கல் யாருடைய கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் சொல்லக் கூடியது. அந்த கல்லை யாராலும் நகர்த்தவே முடியாது. ஆனால் நீங்கள் கேள்வி கேட்கும் போது மட்டும் இந்த கல் தானாகவே நகர்ந்து உங்களுக்கு பதிலளிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் இன்று வரை நடந்து வரும் அதிசயம்!

deityimage1

பக்தர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசயக் கல்

இந்த கல்லின் மீது உங்கள் இரு கைகளையும் மிக மெதுவாக வைக்க வேண்டும், பின்னர் உங்கள் மனதில் உங்கள் கேள்விகளை கேட்க வேண்டும், அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்த்தால் நீங்கள் திகைப்பீர்கள். நீங்கள் கேட்கும் கேள்விக்கான பதில் ஆம் என்றால் கல் வலது பக்கம் சுழலும், கேள்விக்கு பதில் இல்லை என்றால் கல் இடது பக்கம் சுழலும், கல் சுழலவில்லை என்றால் நீங்கள் கேட்கும் விஷயம் சற்றே தாமதமாக நடக்கும் என்று அர்த்தம். இன்று வரை இந்த கல் கூறும் அனைத்தும் பிழையில்லாமல் நடந்து வருவதாக அங்கு சென்று வரும் மக்கள் கூறுகின்றனர்!

More News

    Read more about: maharashtra chintamani stone
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+