Search
  • Follow NativePlanet
Share
» »ஒற்றை வரிசையில் ஏழுமலையான் தரிசனம், ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் – திருப்பதி கொண்டு வந்த மாற்றங்கள்!

ஒற்றை வரிசையில் ஏழுமலையான் தரிசனம், ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் – திருப்பதி கொண்டு வந்த மாற்றங்கள்!

உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கை வருகை தங்கு சுவாமி தரிசனம் செய்கின்றனர். திருப்பதி கோவிலில் முடி காணிக்கை செலுத்த பணம் கேட்பது தொடங்கி, கருவறை முன்பே பக்தர்களை வேக வேகமாக தள்ளி விடுவது, லட்டு வாங்க குடும்பமே போக வேண்டியுள்ளது என பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அவற்றிற்கு எல்லாம் தீர்வு காணும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது!

1

பக்தர்களின் கருத்து கணிப்பை கேக்கும் TTD

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மாதத்திற்கு ஒருமுறை ஒரு மணி நேரம் நேரடி ஒளிபரப்பில் பக்தர்கள் தங்கள் நிறை, குறை மற்றும் ஆலோசனைகளை செயல் அதிகாரிகளிடம் கூறுவது வழக்கம், அதே போல இந்த மாதமும் செயல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பக்தர்கள் தங்களுக்கு வேண்டியவற்றையும், திருப்பதி கோவிலில் ஏற்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்தும் கூறினர்.

திருப்பதி தேவஸ்தானம் மீது பக்தர்கள் தெரிவித்த குறைகள்

1. திருமலையில் முடி காணிக்கை கொடுக்கும் இடத்தில் பக்தர்களிடம் பணம் கேட்கப்படுகிறது, அதனை கட்டுப்படுத்த வேண்டும்.

2. கருவறை அருகே பங்காரு வாக்கிலி எனப்படும் தங்க நடைபாதையில் பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் போது மிகவும் வேகமாக இழுத்துவிடப்படுகிறார்கள்.

3. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் உணவு விற்பனை செய்யும் கடைகக் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.

4. லட்டு கவுண்டரில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றால் மட்டுமே லட்டு வழங்கப்படுகிறது, இல்லையெனில் கொடுக்க மறுக்கிறார்கள்.

5. ரூ.300 ஸ்பெஷல் தரிசன டிக்கெட்டுகள் மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியிடப்படுகின்றன. எனவே ஒரு மாதம் முன்னதாக வெளியிடுங்கள் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

6. அங்கபிரதட்சண டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்பதோடு மட்டுமல்லாமல் நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

7. ஏழுமலையானை அருகில் தரிசனம் செய்ய வாய்ப்பளிக்கும் லக்கி டிப்ப்பில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை.

8. வயதானவர்களுக்கு தரைதளத்தில் தங்குமிடத்தை ஒதுக்குங்கள் என்று பக்தர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

9. ரூ.500 ஆன்லைன் விர்ச்சுவல் சேவா டிக்கெட்டுகளும், ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளும் ஒரே நாளில் வெளியிடப்படுவதால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. வெவ்வேறு நாட்களில் வெளியிடவும்.

10. திருமலையில் தங்குமிடங்களில் 24 மணி நேரத்திற்கு பதிலாக இரண்டு நாட்கள் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும்.

மாற்றங்களை கொண்டு வரும் திருப்பதி தேவஸ்தானம்

1. முடி காணிக்கை கொடுக்குமிடத்தில் அவர்கள் பணம் கேக்கும் பட்சத்தில் பக்தர்கள் கொடுக்காமல் இருந்தாலே இந்த பிரச்சினை தீர்ந்துவிடும், தொடர்ந்து அவர்கள் கேட்டல் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தவும்.

2. பக்தர்கள் திருப்திகரமாக தரிசனம் செய்யும் வகையில் மகா துவரம் முதல் கருவறை வரை ஒற்றை வரிசை முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

3. அதிக விலை வசூலிக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் அன்னப்பிரசாதம் கூடிய விரைவில் வழங்கப்படும்.

4. லட்டு வழங்கும் இடங்களில் புரோக்கர்களை தடுத்து பநிறுத்தவே இந்த முடிவு எடுத்துள்ளோம் என்றும் பக்தர்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் TTD கேட்டு கொண்டுள்ளது.

5. பல தரப்பிலிருந்தும் கருத்துகணிப்பு கேட்ட பின்னரே மூன்று மாதங்களுக்கு முன்னரே ரூ.300 ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது, ஆனால் இனிவரும் மாதங்களில் ஒரு நாளைக்கு தினசரி டிக்கெட்டுகளுடன் 4000 டிக்கெட்டுகள் கூடுதலாக வெளியிடப்படும் என்றும் TTD கூறியுள்ளது.

6. அதிக பக்தர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அங்கபிரதட்சண டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன.

7. லக்கி டிப்பில் குறைவான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. சுவாமியை பிரார்த்தனை செய்து வாருங்கள், கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் அந்த டிக்கெட் கிடைக்கும்.

8. தரைதளத்தில் உள்ள தங்குமிடங்களில் வயதானவர்களுக்கே கொடுக்க வரவேற்பு அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று TTD கூறியுள்ளது.

9. ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளையும், ரூ.500 டிக்கெட்டுகளையும் வெவ்வேறு நாட்களில் வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

10. திருமலையில் மொத்தம் 7000 அறைகளே உள்ளன, தினமும் 1 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருவதால் அனைவர்க்கும் ரூம் கொடுக்க வேண்டியதால் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பில்லை என TTD தெரிவித்துள்ளது.

More News

    Read more about: tirupati andhra pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+