Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பதி தரிசன நேரத்தில் மாற்றம் செய்துள்ள TTD தேவஸ்தானம் – பக்தர்களே கவனியுங்கள்!

திருப்பதி தரிசன நேரத்தில் மாற்றம் செய்துள்ள TTD தேவஸ்தானம் – பக்தர்களே கவனியுங்கள்!

உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறங்காவலர் குழு தரிசன நேரத்தில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி விஐபி (VIP) பிரேக் தரிசன நேரம் காலை 5 மணியிலிருந்து 8 மணியாக மாற்றப்பட்டுள்ளது. சர்வ தரிசனத்திற்காக நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக, அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் நடைபெற்ற TTD அறக்கட்டளை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றிய முழு விவரங்கள் கீழே!

முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி தரிசனம்

முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி தரிசனம்

பல ஆண்டுகளாக, விஐபிக்கள் மட்டுமே பகலில் முதல் தரிசனத்தைப் பெறுகிறார்கள், மேலும் சாதாரண பக்தர்கள் அவர்களுக்குப் பிறகுதான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதிகாலை தரிசன இடங்கள் முற்றிலும் விஐபிகள் மற்றும் சேவா டிக்கெட் வைத்திருப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டதால், சாமானியர்கள் தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, விஐபி பிரேக் தரிசன ஸ்லாட்டின் நேரத்தை மாற்ற வாரியம் முடிவு செய்துள்ளது.

பலவகையான திருப்பதி பாலாஜி தரிசனங்கள்

பலவகையான திருப்பதி பாலாஜி தரிசனங்கள்

மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். திவ்ய தரிசனம், சர்வ தரிசனம், ரூ. 300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம், சுப்ரபாத தரிசனம் என பலவகையான தரிசனங்கள் உள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களில் முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களை கொண்டு வருபவர்கள் மற்றும் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா 10000 ரூபாய் நன்கொடை வழங்குபவர்கள் ஆகியோருக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.

அதிக நேரம் குடவுனில் அடைபடும் சர்வ தரிசன பக்தர்கள்

அதிக நேரம் குடவுனில் அடைபடும் சர்வ தரிசன பக்தர்கள்

அதிகாலை நேரத்தில் துவங்கி காலை எட்டு மணி வரை சுமார் 4000 பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் இலவச தரிசனத்திற்காக இரவு முழுவதும் காத்திருப்பு குடவுனில் அடைபட்டு வேண்டி இருக்கிறது. சர்வ தரிசன பக்தர்கள் 18 முதல் 30 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் விஐபி தரிசனம் பெறும் நபர்களால் தங்குமிடங்களும் அதிகமாக புக் ஆகி விடுகின்றன.

விஐபி தரிசன நேரத்தில் மாற்றம்

விஐபி தரிசன நேரத்தில் மாற்றம்

பக்தர்களின் சிரமங்களை குறைப்பதற்காக தேவஸ்தானம் சார்பில் பல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒன்றாக டிசம்பர் 1 முதல் விஐபி பிரேக் தரிசன (VIP break darshan) நேரம் காலை 8 மணியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் இரவில் காத்திருக்கும் பக்தர்கள், காலையில் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய முடியும். இந்த முடிவை பக்தர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.

தங்குமிடங்களில் வரப்போகும் மாற்றம்

தங்குமிடங்களில் வரப்போகும் மாற்றம்

இந்த அதிரடி மாற்றத்தினால் திருமலையில் தங்குவதற்கான அறைகள் பெறுவதில் ஏற்படும் நெருக்கடியும் குறைய வாய்ப்பு உள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அவர்கள் நேராகவே சரியான நேரத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள் ரூம் புக்கிங்கில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்பதால் மேலும் ஸ்ரீவாரி அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கான டிக்கெட் கவுன்ட்டர் திருப்பதி மாதவம் ஓய்வு இல்லத்தில் துவங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

    Read more about: tirumala tirupati andhra pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+