Search
  • Follow NativePlanet
Share
» »‘ஒற்றை லட்டுக்கு கொட்டோ கொட்டுது பார் துட்டு’ –திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு!

‘ஒற்றை லட்டுக்கு கொட்டோ கொட்டுது பார் துட்டு’ –திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு!

உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடேச பெருமாளின் நிகர சொத்து மதிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அறிக்கை வெளி வந்த நேரம் முதல் இந்த தகவலே இணையத்தை கலக்கி வருகிறது. ஆம்! திருப்பதி ஏழுமலையான் என்றால் சும்மாவா என்ன? அவரின் நிகர சொத்து மதிப்பு 2.5 லட்சம் கோடிகளாம்! எவ்வளவு என்று நாம் யோசிக்கவே தலை சுற்றுகிறது அல்லவா! லட்சக்கணக்கான கோடிகளின் சொத்து விவரங்கள் இதோ கீழே!

எத்தனை கோவில்கள் இருந்தாலும் திருப்பதி திருப்பதி தான்!

எத்தனை கோவில்கள் இருந்தாலும் திருப்பதி திருப்பதி தான்!

ஏழுமலையானுக்கு 108 திவ்யதேசங்கள், நாடெங்கிலும் புகழ்ப்பெற்ற கோயில்கள் இருந்தாலும், திருப்பதி வெங்கடேச பெருமாள் என்றால் கூடுதல் சிறப்பு தான். திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் வரும் என்றெல்லாம் பெரியவர்கள் கூறுவது உண்டு. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபாதை வாயிலாகவும், பேருந்து மற்றும் சொந்த வாகனம் வாயிலாகவும் திருப்பதி வந்து சுவாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்திவிட்டு செல்கின்றனர். உண்டியல் காணிக்கையாக, நன்கொடையாக, அன்னதான நன்கொடையாக, பல்வேறு காண்ட்ராக்ட் வாயிலாக, லட்டு விற்பனை, பல்வேறு தரிசன டிக்கெட்டுகள் வாயிலாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமானம் கொட்டுகிறது.

சிறப்பு வாய்ந்த திருப்பதி வெங்கடாஜலபதி

சிறப்பு வாய்ந்த திருப்பதி வெங்கடாஜலபதி

கலியுகவரதனாக காட்சி கொடுக்கும் எம்பெருமானுக்கு செய்யப்படும் ஒவ்வொரு விஷயமும் சிறப்பு வாய்ந்தது தான். அவருக்கு நெதர்லாந்தில் இருந்து பூக்கள், சீனாவில் இருந்து வாசனை திரவியங்கள், பாரிஸில் இருந்து அலங்காரப் பொருட்கள் என பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் தயாரிக்கப்படும் பிரத்யேக விசேஷப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கமான விஷயமே. இவருக்கு நாம் ஒரு அங்கவஸ்திரம் சார்த்த வேண்டுமென்று நினைத்தாலும், பணம் கட்டிய பின்னர் 3 முதல் 7 வருடங்கள் காத்திருக்க வேண்டும். நமக்கு முன்னே அத்தனை பேர் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இணையத்தைக் கலக்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள்

இணையத்தைக் கலக்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள்

நீண்ட காலத்திற்குப் பின்னர் திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த சொத்து மதிப்பு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் சொத்து மதிப்பை விட அதிகமாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. ஆம்! திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் நிகர சொத்துமதிப்பு ரூ.2.5 லட்சம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ, உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான நெஸ்லே மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான ONGC மற்றும் IOC ஆகியவற்றின் சொத்து மதிப்பை விட அதிகம்.

அப்பப்பா இவ்வளவு சொத்துக்களா

அப்பப்பா இவ்வளவு சொத்துக்களா

கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, 10.25 டன் தங்கம் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இது தவிர 2.5 டன் தங்க நகைகள், சுமார் ரூ.16,000 கோடி ரொக்கம் ஆகியன வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7,123 ஏக்கர்களில் 960 சொத்துகள் உள்ளன. இதன் இன்றைய மதிப்பு ரூ 85,705 கோடி ஆகும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோவில் மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, அரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள பல கோயில்களும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட கணக்கின் படி, வங்கிகளில் இருந்து கிடைக்கும் வட்டி மூலம் மட்டுமே திருப்பதி கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி வருமானம் கிடைத்துள்ளதாம். மொத்தமாக திருமலை திருப்பதி வெங்கடேச பெருமானின் சொத்து மதிப்பு 2.5 லட்சம் கோடிகளாம்!

முன்னணி நிறுவனங்களை தூக்கி சாப்பிட்ட திருப்பதி பாலாஜி

முன்னணி நிறுவனங்களை தூக்கி சாப்பிட்ட திருப்பதி பாலாஜி

பங்குத்துறை புள்ளி விபரங்களின் படி விப்ரோ நிறுவன சொத்துக்களின் சந்தை மதிப்பு ரூ.2.14 லட்சம் கோடி. நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.1.96 லட்சம் கோடி, அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.1.99 லட்சம் கோடி. ஓஎன்ஜிசி, ஐஓசி, என்டிபிசி, மகேந்திரா அன்ட் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, டிஎல்எஃப் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சொத்து மதிப்புக்கள் திருப்பதி கோவில் சொத்து மதிப்பை விட குறைவு தான். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி, ஹச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிசி உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களில் சொத்து மதிப்பு மட்டுமே திருப்பதி கோவில் சொத்துக்களை விட அதிகம்.

நன்கு நிர்வகிகப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்

நன்கு நிர்வகிகப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும், அவர்கள் எப்படி இந்த கோவிலை நிர்வகிக்கிறார்கள் என்று! நாள்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து சென்றாலும், திருமலை முழுவதும் மிக தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். அன்னதானம், குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து என எல்லாவற்றிலும் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர் என்பது நம் அறிந்த விஷயமே. அது மட்டுமில்லாமல், பாலங்கள், சாலைகள் மற்றும் பிற கட்டுமானுங்கள் மற்றும் பல தர்ம காரியங்களில் கோயில் தேவஸ்தானம் செலவு செய்கின்றது.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆலயமே உலகின் மிகவும் பணக்கார இந்து ஆலயமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

Read more about: tirupati andhra pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X