Search
  • Follow NativePlanet
Share
» »308ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திருப்பதி லட்டு – எப்படி அனைவர்க்கும் பிடித்த பிரசாதமாக இது மாறியது?

308ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திருப்பதி லட்டு – எப்படி அனைவர்க்கும் பிடித்த பிரசாதமாக இது மாறியது?

ஒவ்வொரு பிரசித்தி பெற்ற கோவிலுக்கும் பிரத்யேகமாக பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம், ஆனால் இந்தியாவில் கிடைக்கும் அனைத்து பிரசாதங்களுகும் மணி மகுடமாக இருக்கும் பிரசாதம் என்றால் அது திருப்பதி லட்டு தான்! வெங்கடாசலபதியை தரிசித்து விட்டு அந்த திருப்பதி லட்டுக்களை வாங்கி சுவைக்கும் போது கிடைக்கும் சந்தோஷமே தனி தான். நம் எல்லோருக்கும் பிடித்த திருப்பதி லட்டு தன்னுடைய 308 ஆவது வயதில் கால் எடுத்து வைத்துள்ளது!

1

பிரசித்திப் பெற்ற வெங்கடேச பெருமானின் பிரசாதம்

மாவு, சர்க்கரை, நெய், எண்ணெய், ஏலக்காய் மற்றும் உலர் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரத்யேக லட்டு, உலகின் பணக்கார இந்து கோவிலான வெங்கடேச பெருமானை பிரசித்திப் பெற்ற பிரசாதமாகும். வெங்கடேசப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்த பிறகு, அங்கு வழங்கப்படும் பிரசாதமான திருப்பதி லட்டிற்கு நாம் அனைவருமே அடிமை என்று தான் சொல்ல வேண்டும்.

308ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திருப்பதி லட்டு

ஸ்ரீ வாரி லட்டு என்றும் அழைக்கப்படும் இந்த பழம்பெரும் இனிப்பு, சுமார் 308 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன் தனித்துவமான சுவை மற்றும் அமைப்புக்காக இன்றளவும் ததிருப்பதி லட்டு கொண்டாடப்படுகிறது. முதல் முதலாக திருப்பதி லட்டு ஆகஸ்ட் 2, 1715 இல் வழங்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை திருப்பதி லட்டு தினமும் கோவிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

550 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டு

தற்சமயம் நாம் பார்க்கும் லட்டு, 1940 ஆம் ஆண்டு மெட்ராஸ் அரசாங்கத்தின் கீழ் கிட்டத்தட்ட 6 முறை செய்தபின் அதன் இருப்பையும் வடிவத்தையும் பெற்றது. பண்டைய கல்வெட்டுகளின்படி, லட்டு இருப்பது 1480 இல் நன்கு ஆவணப்படுத்தப்பட்டது, மேலும் அது "மனோஹரம்" என்று பெயரிடப்பட்டது. புகழ்பெற்ற திருப்பதி லட்டுகளை உருவாக்கிய பெருமை கல்யாணம் ஐயங்கார் அவர்களை சேரும். இனிப்பை உருவாக்க பிரபலமான மிராசிதாரி முறையை அறிமுகப்படுத்தியவரும் இவரே ஆவார்.

2

24 மணி நேரமும் பிரசாதம் விற்பனை

விசேஷ காலங்களில், லட்டுக்கு அதிக தேவை ஏற்படுகின்றது. பிரம்மோற்சவத்தின் போது, அதிகாரிகள் 24 மணி நேரமும் பிரசாதம் விற்பனை செய்கின்றனர். யாத்ரீகர்களுக்கு எல்லா நேரங்களிலும் லட்டுகள் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் விரிவான திட்டங்களை மேற்கொள்கின்றனர். 2015 ஆம் ஆண்டு பிரம்மோத்ஸவத்தின் முதல் ஏழு நாட்களில், சுமார் 1.8 மில்லியன் லட்டுகள் விற்பனையாகி, முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்தது.

ஒரு நாளைக்கு லட்டு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

1. கடலை மாவு - 10 டன்

2. முந்திரி பருப்பு - 700 கிலோ

3. சுத்தமான நெய் - 500 லிட்டர்

4. சர்க்கரை - 10 டன்

5. ஏலக்காய் - 150 கிராம்

6. சர்க்கரை மிட்டாய் - 500 கிலோ

7. திராட்சை - 540 கிலோ

2

திருப்பதி லட்டு தயாரிக்கப்படுவது எப்படி

வறுத்த பேரீச்சம்பழம், கொதிக்கும் தூய நெய், சர்க்கரை பாகு, முந்திரி, ஏலக்காய் மற்றும் திராட்சை மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் கலவையான திருப்பதி லட்டு 1984 க்கு முன்பு விறகுகளால் இயங்கும் அடுப்புகளில் தயாரிக்கப்பட்டது. பின்னர், TTD திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மூலம் இயக்கப்படும் அடுப்புகளை அறிமுகப்படுத்தியது. இப்போது ஆட்டோமேடிக் மெஷின்கள் வந்துவிட்டன.

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மெஷின்கள்

தானிய மாவு மற்றும் பிற மூலப்பொருட்களின் கலவை நேரடியாக தானியங்கி "பூந்தி பொட்டு"க்கு அனுப்பப்படும் மற்றும் இயந்திரம் அதிக வெப்பநிலையில் சுத்தமான நெய் கொதிக்கும் பாத்திரத்தில் கலவையை இறக்கும். இயந்திரம் கொதிக்கும் நெய்யிலிருந்து பூந்தியை பிரித்து மற்றொரு இயந்திரத்திற்கு அனுப்புகிறது, அங்கு முந்திரி, ஏலக்காய், திராட்சை, சர்க்கரை மற்றும் சர்க்கரை பாகு ஆகியவை கலக்கப்படும். பின்னர் அவை யாவும் "லட்டு பொட்டு"க்கு கன்வேயர் பெல்ட்கள் மூலம் அனுப்பப்படும். அவ்வளவுதான் சுவையான லட்டு மிக்ஸ் தயார்.

என்றைக்குமே சுவை குறையாது

லட்டு செய்யும் தொழிலாளர்கள், தானியங்கி இயந்திரங்களில் கிடைக்கும் கலவையில் லட்டு தயாரித்து, சம்பந்தப்பட்ட கவுன்டர்களுக்கு அனுப்புவார்கள். இதன் மூலம் பக்தர்களுக்கு கூடுதலாக சுகாதாரமான, சுவையான லட்டு பிரசாதங்களை தயாரித்து வழங்க முடியும். எது எப்படி இருந்தாலும்,திருப்பதி லட்டுக்கு மவுசு என்பது என்றுமே குறையாது மக்களே!300 அல்ல 3000 ஆண்டுகளையும் கடந்து திருப்பதி லட்டுவின் புகழ் ஓங்கட்டும்!

More News

    Read more about: tirupati andhra pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+