Search
  • Follow NativePlanet
Share
» »கார்த்திகை தீபத்தின் போது மலை மேல் நின்று ‘மகா தீபம்' பார்க்க ஆசையா - இப்படி செய்யுங்கள்!

கார்த்திகை தீபத்தின் போது மலை மேல் நின்று ‘மகா தீபம்' பார்க்க ஆசையா - இப்படி செய்யுங்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலை மலையில் நடைபெறும் மகா தீபத் திருவிழாவிற்கு வருகை தருவது என்பது நம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த மலை மீது நின்று மகா தீபத்தை அருகில் பார்த்து பரவசப்படுவதற்கும், பரணி தீபத்தை கண்டு களிப்பதற்கும், கோயிலுக்குள் சென்று சிவபெருமான் ஆசி பெறுவதற்கும் தனித்தனியே பக்தர்களின் எண்ணிக்கை பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2024 ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? விழா நிரல் என்னென்ன என்று பார்ப்போம்!

Tiruvannamalai maha deepam festival 2024

திருவண்ணாமலைக்கு செல்ல நீங்கள் தயாரா?

திருவண்ணாமலை மலையின் உச்சியில் ஏற்றப்படும் இந்த மாபெரும் 'நெய் தீபத்தை' காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். மைல்களுக்கு அப்பால் தெரியும் மகா தீப ஒளியைப் பார்ப்பது, புண்ணியத்தைத் தருவதாகவும், அறியாமையைப் போக்குவதாகவும் நம்பப்படுகிறது. தீப ஒளியாக சிவபெருமான் இந்த உலகத்திற்கு காட்சி தருவதை காண நாமும் திருவண்ணாமலைக்கு செல்லலாமா?

வரலாறு

2024 ஆம் ஆண்டுக்கான திருவிழா விவரங்கள்

தேதி திட்டம்
01.12.2024 துர்க்கை அம்மன் சன்னதியில் தீபம் ஏற்றுதல்.
02.12.2024 பிடாரி அம்மன் சன்னதியில் தீபம் ஏற்றுதல்.
03.12.2024 விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதிகளில் தீபம் ஏற்றுதல்.
04.12.2024 கோ-பூஜை, வெள்ளி ரதத்தின் ஊர்வலம் மற்றும் சிம்மம் வாகனம்.
05.12.2024 தங்க ரிஷப தேர் மற்றும் தங்க இந்திர விமானம் ஊர்வலம்.
06.12.2024 தங்க சிம்ம வாகனம் மற்றும் வெள்ளித் தேர் ஊர்வலம்.
07.12.2024 தங்க காமதேனு வாகனத்தின் ஊர்வலம்.
08.12.2024 தங்க ரிஷப வாகனம் ஊர்வலம்.
09.12.2024 வெள்ளி ரதம் ஊர்வலம்.
10.12.2024 மஹா ரதம்
11.12.2024 பிச்சாண்டவர் சன்னதியில் தீபம் ஏற்றுதல், குதிரை வாகனம் ஊர்வலம்.
12.12.2024 கலச வாகனம் மற்றும் காமதேனு வாகனம் ஊர்வலம்.
13.12.2024 பரணி தீபம் மற்றும் அருணாச்சல மலை உச்சியில் மகா தீபம்
14.12.2024 நெபல் சன்னதி மற்றும் சண்டிகேஸ்வராவில் தீபம் ஏற்றுதல்.
15.12.2024 நெபல் சன்னதி மற்றும் அண்ணாமலையில் தீபம் ஏற்றுதல்.
16.12.2024 நெபல் சன்னதி மற்றும் சப்த்திரிஷியில் தீபம் ஏற்றுதல்.
17.12.2024 சண்டிகேஸ்வரருக்கு தீபம் ஏற்றுதல்.

எத்தனை பக்தர்களுக்கு அனுமதி?

கார்த்திகை தீபத் திருநாளான டிசம்பர் 13ம் தேதி ஏற்றப்படும் பரணி தீபத்தை காண கோவில் உள்ளே 7500 பேருக்கும், மாலையில் மகாதீபத்தை காண 11,500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது. மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க 2000 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும். உடல் பரிசோதனை அடிப்படையில் அனுமதி சீட்டுக்கள் வழங்கப்படும். இது தவிர கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் 5200 பேருக்கு பரணி தீபத்தை காணவும், 8000 பேர் மகாதீபத்தை காணவும் அனுமதி வழங்கப்படும்.

ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?

பரணி தீபத்தை காண 500 பேருக்கும், மகா தீபத்தை காண 1100 பேருக்கும் ஆன்லைனில் அனுமதி வழங்கப்படும். கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் இமெயில் முகவரி கண்டிப்பாகத் தேவை. ஓர் ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டணச்சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பரணி தீபம் மற்றும் மகா தீபம் காண விரும்புபவர்கள் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையத்தள முகவரியில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

யார் யார் எப்படி உள்ளே செல்ல வேண்டும்?

ஆன்லைன் டிக்கெட் மூலம் பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அன்று அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் டிக்கெட் மூலம் மகா தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மதியம் 2.30 முதல் 3.30 வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த 2 தீப நிகழ்வுகளைக் காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோவிலின் கிழக்கு ராஜ கோபுரம் (திட்டி வாயில்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த பயனுள்ள தகவலை அறிந்த நீங்கள் அனைவருக்கு தெரியப்படுத்துங்கள்! அனைவரும் அண்ணாமலையார் அருள் பெறுவோம்!

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+