» »இந்தியாவின் டாப் 5 வரலாற்றுச் சின்னங்கள்!

இந்தியாவின் டாப் 5 வரலாற்றுச் சின்னங்கள்!

Written By: Staff

இந்தியா வளமான கலாச்சாரங்களையும் கலைகளையும் கொண்ட நாடு. எத்தனை மலைகள், கடல்கள், வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள், மாளிகைகள். இவற்றில் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கிய வரலாற்று கட்டிடங்களைப் பார்க்கலாம்!

Taj

Photo Courtesy : Dhirad

தாஜ் மகால், ஆக்ரா

ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகால் இந்தியாவின் மிகப்புகழ்பெற்ற சுற்றுலா தலம். யமுனா நதிக்கரையில் அமைந்திருக்கும் தாஜ் மகால் கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆனது. 22000 தொழிலாளிகள் உழைப்பில் உருவானது தாஜ் மகால்

mysore

Photo Courtesy : Spiros Vathis

மைசூர் பேலஸ்

மைசூரின் டாப் சுற்றுலா தலம் என்றால் அது சந்தேகமில்லாமல் மைசூர் பேலஸ்தான். மிரள வைக்கும் பிரமாண்ட கட்டுமானத்தைப் பார்ப்பதற்கே சுற்றுலா பயணிகள் பலர் இங்கு வருகின்றனர். ரோஸ்வுட் கதவுகளும், அழகிய வேலைப்பாடு உள்ள மேற்தளங்களும் மைசூர் மாளிகையின் முக்கிய ஈர்ப்பாகும். மாளிகையைச் சுற்றியிருக்கும் நந்தவனம், இரவு நேர விளக்கொளியில் கண் கவரும் மாளிகையின் ஜொலிப்புத் தோற்றம் என மைசூர் மாளிகை சுற்றுலா பயணிகளின் கனவு மாளிகை

tanjore

Photo courtesy : Nirinsanity

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயில் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்று. கி.பி. 1002'இல் அடிக்கல் நாட்டப்பட்டு 1010'இல் முடிக்கப்பட்டது. 2010'இல் 1000 வருடங்கள் கொண்டாடிய பெருமை இந்தக் கோவிலுக்கு உண்டு.

hawa

Photo Courtesy : Manudavb

ஹவா மகால், ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற வரலாற்று மாளிகை. 1799'இல் மகராஜா பிரதாப் சிங்கினால் கட்டப்பட்டது. மாளிகைக்குள் நுழைய பக்கவாட்டில் இருக்கும் வாசல் வழியே செல்ல வேண்டும். காலை நேர சூர்ய உதயத்தில் இந்த மாளிகையப் பார்ப்பதற்காகவே பல புகைப்பட கலைஞர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

cst

Photo Courtesy : Aaditya Ganapathy

மும்பை ரயில் நிலையம்

மும்பையில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ரயில் நிலையமாகும். இந்த ரயில்நிலையம், பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ் என்ற ஆங்கில பொறியாளரால், மொகாலய மற்றும் ஐரோப்பாவின் கோதிக் கட்டிடக் கலை என இரண்டின் பாதிப்பில் 1888'ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ரயில் நிலையம். நாட்டின் மிக பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான இது யுனஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Read more about: taj mahal hawa mahal cst tanjore

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்