Search
  • Follow NativePlanet
Share
» »அடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா!

அடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா!

நாட்டிலேயே உயரமான சிலைகள் எல்லாம் எங்கே இருக்கு தெரியுமா ? இந்தியாவின் மிக உயரமான சிலைகள் எங்கெங்கு உள்ளன, அவற்றின் உயரம் என்ன என்று பார்க்கலாம் வாங்க.

பிற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் சிலை மீதான வாதங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். முற்போக்கு அடையாளங்களின் சிலைகளை தகர்ப்பது முதல் வரலாற்று தொன்மை மிக்க சிலைகளை தட்டித் தூக்குவது வரை அன்றாடம் ஏதேனும் நகையில் இதன் மீதான உரையாடல் நம் நாட்டில் நடந்தே தீரும். உலகின் பல்வேறு நாடுகள் உயர உயரமான சிலைகளை எழுப்பியுள்ளன. இவற்றில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் புத்தர் சிலைகள் உலகில் பல இடங்களில் பார்க்க முடியும். அந்த வகையில் நம் நாட்டில் மிக உயரமான சிலைகள் எங்கெங்கு உள்ளன, அவற்றின் உயரம் என்ன என்று பார்ப்போம்.

பத்மசம்பவா

பத்மசம்பவா


தெற்கு சிக்கிம்மின் தலைநகரமாக 'நம்சி' மலைநகரம் விளங்குகின்றது. கேங்டாக்கிலிருந்து 92 கிலோ மீட்டர் தொலைவிலும், சிலிகுரியிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் இம்மலை நகரம் உள்ளது. சிக்கிம் மாநிலத்தின் புத்தமத குருவாகப்போற்றப்படும், குரு பத்மசம்பவா அவர்களின் 118 அடி உயர அமர்ந்த நிலை சிலை இங்குதான் அமைந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற ஏரிகளில் ஒன்றான ரேவால்சார் ஏரிக்கு அருகே இந்த பத்மசம்பவா சிலை அமைந்துள்ளது. இது 123 அடி உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

John Hill

போத்கயா புத்தர் சிலை

போத்கயா புத்தர் சிலை


கயாவுக்கு இன்று இரண்டு முகம். கயா என்றழைக்கப்படும் ஊர் கங்கைகரையில் உள்ளது. வைதிக முக்கியத்துவம் உள்ளது. போத்கயா சிலரால் புத்த கயா என்றும் அழைக்கப்படுகிறது. போதியைச் சூழ்ந்துள்ள கயா என்ற பொருளில் போத் கயா என்று சொல்லப்படுகிறது. பீகார் மாநிலத்தில் உள்ள புத்தர் ஞானம்பெற்ற இடமான போத்கயா நகரில் இந்த பிரம்மாண்ட புத்தர் சிலை அமைந்துள்ளது. 1989-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த சிலை 80 அடி உயரம் கொண்டது.

Andrew Moore

நந்துரா அனுமார் சிலை

நந்துரா அனுமார் சிலை


மகாராஷ்டிரா மாநிலம், நந்துரா என்னும் இடத்தில் அனுமனுக்கு 105 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் அற்புதமான இந்த சிலை தேசிய நெடுஞ்சாலை என் 06 இல் அமைந்துள்ளதால் பயணிகள் எளிதில் இந்த பிரம்மாண்ட கண்டு ரசிக்கலாம்.

Akshay Deokar

ஹர் கி பௌரி சிவன் சிலை

ஹர் கி பௌரி சிவன் சிலை


ஹரித்வார் கும்பமேளா நடக்கும் ஊர்களில் ஒன்று. இங்குள்ள கங்கை நதிக்கரையில் "ஹர் கி பௌரி" என்று ஒரு இடம் உள்ளது. இதற்கு ஹரனின் காலடி என்பது அர்த்தம் அதாவது சிவனின் காலடி என்று பொருள். உத்தரகண்ட்டின் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌரி எனுமிடத்தில் இந்த உயரமான சிவன் சிலை அமைந்துள்ளது. 100 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிலை உலகின் 3-வது உயரமான சிவன் சிலையாகும்.

Jay Galvin

லிகிர் மடாலய தங்க புத்தர் சிலை

லிகிர் மடாலய தங்க புத்தர் சிலை


லிகிர் மடாலய தங்க புத்தர் சிலை ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள லிகிர் மடாலயத்தில் அமைந்துள்ளது. 1999-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த மைத்ரேய புத்தர் சிலை 75 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

Prince Roy

முருதேஸ்வர்

முருதேஸ்வர்


கர்நாடகாவில் 123 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் முருதேஸ்வர் சிவன் சிலை உலகிலேயே 2-வது பெரிய சிவன் சிலையாகும். சூரிய ஒளி நேரடியாக சிலை மேல் படும்போது ஒளிரும்படியாக இந்த சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் நான்கு கைகளுடன், தங்க முலாம் பூசப்பட்டு காட்சியளித்துக் கொண்டிருந்தது. பின்பு அப்பகுதியில் வீசிய பலத்த கடல் காற்று காரணமாக உடுக்கை பிடித்திருந்த கை அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதேபோல் கடுமையான மழையால் தங்க முலாமும் அழிந்து போயிற்று.

Vivek Shrivastava

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X