Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா?

உலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா?

By Udhaya

கோயில் என்பது 'கோ' மற்றும் 'இல்' ஆகிய இரு சொற்கள் சேர்ந்து உருவானது. அதாவது 'கோ' என்றால் இறைவன் (அரசன் என்றும் பொருள்படும்), 'இல்' என்றால் இல்லம். எனவே இறைவன் வாழும் இல்லம் என்ற அர்த்தத்தில் கோயில் என்றானது. அதேபோல 'ஆன்மா லயப்படுகின்ற இடம்' என்ற பொருளில் ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் ஆன்மாவை மையப்படுத்தி கொண்டிருக்கும் கோயில்கள் தமிழகத்தில் நிறைய உள்ளன. வாருங்கள் உலகின் அதீதப் பழமையான கோயில்களுக்கு போய் வரலாம். உலகில் பல கோயில்கள் இதைவிட பழமையாக இருந்தாலும், இன்றளவிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கோயில்கள் தமிழகத்திலேயே உள்ளன.

திருநெல்வேலி

திருநெல்வேலி

திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோவில் இதுவாகும்.

Vashikaran Rajendrasingh

பழமை

பழமை

இரண்டு கோவில்களும், 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.

arunpnair

நடனக்கலை

நடனக்கலை

புராணங்களின்படி, சிவபெருமான் தமது தாண்டவ நடனத்தை ஆடிய பல்வேறு தலங்களில் நெல்லையும் ஒன்றாகும். இதனால், பரத நாட்டியம் போன்ற பழமையான நடனக்கலைகளுக்கும் இதர கலைகளுக்கும் முக்கியமான இடமாக திருநெல்வேலி கருதப்படுகிறது. இந்நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக, இக்கோவிலின் உள்ளே, தாமிரத்தினால் ஆன மேடை என்னும் பொருள் படும் தாமிர அம்பலம்/தாமிர சபை அமைக்கப்பட்டு உள்ளது.

விழாக்கள்

திருக்கல்யாணம், நவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்ற சிறப்பான விழா நாட்களில் இக்கோவிலைத்தரிசனம் செய்வது இனிமையான அனுபவமாகும். அக்டோபர் மாதம் 15 முதல் நவம்பர் மாதம் 15 வரை அதாவது தமிழ் மாதமான ஐப்பசி திங்களில் மேலே கூறிய விழாக்கள் நடைபெறும். தைப்பூச திருவிழாவானது இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் மற்றொரு திருவிழாவாகும். நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளதால் இக்கோவிலை கண்டுபிடித்து வந்து சேருவதில் சுற்றுலாப்பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இருக்காது.

Divya suresh

 திருவாரூர்

திருவாரூர்

தியாகராஜஸ்வாமி திருக்கோயில், தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்று. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில், 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

Srinivasan G

 அமைப்பு

அமைப்பு

இக்கோயில், சுமார் 33 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு தெய்வங்களுக்காகக் கட்டப்பட்ட ஏராளமான சந்நிதிகளுடன் பிரம்மாண்டமாகக் காணப்படுகிறது. இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை "வன்மிகிநாதர்" என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர்.

Kasiarunachalam

பழமை

பழமை

வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது. இக்கோயில், ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ நாயன்மார்களால் பாடப்பெற்ற தேவாரப் பதிகங்களால், பெரும்புகழ் பெற்று விளங்குகிறது. தேர்த்திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறும் மார்ச் மாதத்தில் இக்கோயிலுக்குச் சென்றால் மிக விசேஷமாக இருக்கும்.

Kasiarunachalam

 காஞ்சி கைலாசநாதர்

காஞ்சி கைலாசநாதர்

மற்ற கோவில்களைப் போல இக்கோவிலின் வெளிப்புறம் வெறும் சுவரல்ல; சிறு சன்னதிகள் நிரம்பியிருக்கும் வெளிப்புறச் சுவர்! இதனால், கோவிலுக்கு நுழையும் முன்னரே, நீங்கள், உங்கள் கண்களை அகல திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வெளிப்புற சன்னதியிலும், சோமஸ்கந்த புராணக் குறிப்புகள் பொறிக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன.

 மூலஸ்தானம் :

மூலஸ்தானம் :

எல்லா சிவாலயங்களைப் போலவே இங்கும், மூலஸ்தானத்தில், சிவலிங்கம் நந்திக்கு நேரெதிராய் வீற்றிருக்கிறது. ராஜசிம்மா, சிவனின் பெரும் பக்தனின் காரணத்தால், நாம் கோவிலின் பல கற்களில், சிவனின் சிற்பத்தை காணலாம். மேலும், பல நந்தி, சிங்கச் சிற்பங்களையும் நாம் காணலாம். புராணக் குறிப்புகள், நந்தியை பல்லவ சாம்ராஜ்யத்தின் சின்னமாக சித்தரிக்கிறது. இதனால், நந்திக்கு, இத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சிங்கத்தின் சிற்பச்செதுக்கல்களுக்கு காரணம் :

சிங்கத்தின் சிற்பச்செதுக்கல்களுக்கு காரணம் :

அரசர் அல்லது அந்த சிற்பத்தை வடிவமைத்த கலைஞன் ஒரு குறிப்பிட்ட மிருகத்தின்மீது அளவு கடந்த நேசத்தின் வெளிப்பாடாய் இருக்கலாம். இதோடு, இன்னும் பிற தெய்வங்களான, விஷ்ணு, பிரம்மா, விநாயக, துர்கா ஆகியவற்றின் சிற்பங்கள் கோவிலின் உள்ளே இருக்கிறது. துரதிருஷ்டவசமாக, ராஜசிம்மாவால் கோவிலின் முழு கட்டுமானத்தையும் பார்க்க முடியவில்லை. அவரது மகன், மகேந்திர வர்மன், அப்பாவின் பெரும் படைப்பை, தன் காலத்தில் முடித்து வைத்தான். அக்காலத்தில், கைலாசநாதர் கோவில், கட்டுமானத்தில் ஒரு மைல்கல். இப்படி ஒரு தலைசிறந்த கோவிலை பார்க்கும் ஆவல் யாருக்குத்தான் இருக்காது ?

கைலாசநாதர் கோவிலின் சிறப்பம்சங்கள்:

கைலாசநாதர் கோவிலின் சிறப்பம்சங்கள்:

கோவிலுக்குள்ளே இருக்கும் சுற்றுப் பாதை வட்ட வடிவு கொண்டது. அதனூடே ஊர்ந்து சென்று, பல படிகள் ஏறித்தான் வெளியே வர முடியும். இந்த‌ப் பாதை, வாழ்வுக்கும், மரணத்திற்கும் ஒரு அடையாளமாக நம்பப்படுகிறது. பிரசித்திபெற்ற தஞ்சை பிரகதீஸ்வர கோவில் இதன் பாதிப்பில் கட்டப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கைலாசநாதர் கோவில், காஞ்சியில், மிகப் பழமை வாய்ந்த கோவிலாக இருந்தாலும், தமிழ் நாட்டில் உள்ள மற்ற கோவில்களைப் போல இது அத்தனை பிரசித்திபெற்றது இல்லை. கைலாசநாதர் கோவிலை அடைய : காஞ்சிபுரம், சென்னையிலிந்து 68 கி.மீ. தொலைவு. பல பேருந்துகள் சென்னைக்கும் காஞ்சிக்கும் இடையே இயக்கப்படுகின்றன. காஞ்சி ரயில் நிலையம்தான், கோவிலுக்கு அருகில் இருக்கும் ஒரு ரயில் நிலையம். சென்னை விமான நிலையம், இக்கோவிலுக்கு அருகில் இருக்கும் ஒரு விமான நிலையம். காஞ்சிக்குச் செல்ல சிறந்த பருவ காலம்: அக்டோபரிலிருந்து மார்ச் வரை.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயில் அல்லது பெருவுடையார் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்' என்பதாகும். பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் நகரில் வீற்றிருக்கிறது. வேறெந்த சோழர் கால கோட்டைகளோ அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை. எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு ‘தட்சிண மேரு' எனும் கம்பீரப்பெயருடன் வீற்றிருக்கிறது.

Richard Mortel

 கல்வெட்டுகள்

கல்வெட்டுகள்

கோயிலின் நிர்வாகம் செம்மையாக நடைபெற விரிவான நடைமுறைகளும் முறைமைகளும் உருவாக்கப்பட்டிருந்தன என்பதை கோயில்பகுதியிலேயே இடம்பெற்றுள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இளம் வயதில் முடி சூடி பல போர்க்கள வெற்றிகளையும் கண்டு கலாரசனையும் அதீத மேலாண்மைத்திறனும் வாய்க்கப்பட்டிருந்த ராஜராஜ சோழர் நிச்சயம் அந்த கீர்த்திப்பெயருக்கு எல்லாவிதத்திலும் தகவமைந்தவர் என்பதற்கான சான்றுதான் இந்த ‘ராஜராஜுச்சரம் கோயில்'. இந்த கோயிலில் எழுப்பப்பட்டிருக்கும் புதுமையான விமான கோபுரத்தின் உயரம் 190 அடி ஆகும்.

Richard Mortel

நந்தி மண்டபம்

நந்தி மண்டபம்

கோயில் வளாகத்தில் ‘முன் தாழ்வாரம்', நந்தி மண்டபம், கருவூர்த்தேவர் கோயில், சுப்ரமணியர் கோயில் போன்றவை பின்னாளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இங்கு காணப்படும் கல்வெட்டுகள் மறுக்க முடியா வரலாற்று ஆவணங்களாக பல தகவல்களை கொண்டுள்ளன. இந்த கல்வெட்டுகளின் தொலைநோக்கு பார்வைமொரு முக்கியமான பிரமிக்க வைக்கும் அம்சமாக விளங்குகிறது. இங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நந்தி ஒரே கல்லால் ஆனதாக 14 மீ உயரமும், 7மீ நீளமும், 3மீ அகலமும் அகலமும் கொண்டதாக வீற்றிருக்கிறது. இதன் எடை 25 டன் என்பதாக சொல்லப்படுகிறது.

Richard Mortel

விழாக்கள்

விழாக்கள்

பிருகதீஸ்வரர் என்ற பெயருடன் சிவபெருமான் உறையும் இந்த திருக்கோயிலில் மே மாதத்தின்போது வருடாந்திர திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒரு மஹோன்னத பொற்காலத்தின் சாட்சியமாகவும் கல்லிலே பொறிக்கப்பட்ட ஆவணமாகவும் வீற்றிருக்கும் இந்த தட்சிண மேருவை தமிழர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது தரிசிப்பது அவசியம். "இதனை விட்டுச்சென்றார் நம் முன்னோர் - எதனை விட்டுச்செல்வோம் நாம் நாளை?" என்ற ஒரு கேள்வியும் காத்திருக்கிறது இக்கோயிலில் நமக்கு.

Nandhinikandhasamy

திருவெண்காடு

திருவெண்காடு

திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி-பூம்புகார் சாலைக்கு தென்கிழக்கில், சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் ஒன்பது நவக்கிரக கோயில்களுள் ஒன்றாகும்.

Rsmn

காசிக்கு நிகராக

காசிக்கு நிகராக

திருவெண்காடு,காசிக்கு நிகராகக் கருதப்படும் ஆறு திருத்தலங்களுள் ஒன்று. இங்கு, புனித நீர், உறைவிட தெய்வம் மற்றும் ஸ்தல விருட்சம் ஆகிய அனைத்தும், எண்ணிக்கையில் மூன்றாகவே உள்ளன. திருவெண்காடு, ஒன்பது கிரகங்களுள் ஒன்றான புதன் கிரகத்துக்கு உரியது. இத்தலம், ஐம்பத்தியோரு சக்தி பீடங்களுள் ஒன்று. இங்கு சிவபெருமானின் 64 மூர்த்தங்களையும், அகோரமூர்த்தி வடிவத்தையும் காணலாம். இங்கு தான் சிவபெருமான் தன் ஆறு விதமான தாண்டவங்களை நிகழ்த்தியதாக கருதப்படுகிறது.

Shankaran Murugan

 திருவெண்காடு மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலா தளங்கள்

திருவெண்காடு மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலா தளங்கள்

ஒன்பது நவக்கிரக ஸ்தலமான திருநாகேஸ்வரத்துக்கு அருகிலேயே மற்ற எட்டு நவக்கிரக ஸ்தலங்களும் அமையப்பெற்றுள்ளன. சனி பகவான் கோயில் உள்ள திருநள்ளாறு, சுக்ரபகவான் கோயில் உள்ள கஞ்சனூர், சூரிய பகவானுக்குரிய சூரியனார் கோயில், ராகுவுக்கு கோயில் உள்ள திருநாகேஸ்வரம், சந்திரனுக்கு கோயில் உள்ள திங்களூர், கேதுவுக்கு கோயில் உள்ள கீழ்பெரும்பள்ளம் ஆகிய ஊர்கள் திருவெண்காடுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன.

Ssriram mt

கும்பகோணம்

கும்பகோணம்

கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மாசிமக விழாவும் 12 ஆண்டுகளுக்கொருமுறைக் கொண்டாடப்படும் மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது.

பா.ஜம்புலிங்கம்

பழமை

பழமை

இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. 7 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த சைவநாயன்மார்களது பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவிலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலில் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை நாயக்கர்களால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பா.ஜம்புலிங்கம்

அமைப்பு

அமைப்பு

இன்று கும்பகோணம் நகரத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாக விளங்குவது இக்கோவிலே. இதன் ராஜகோபுரம் 125 அடி உயரத்தில், 9 நிலைகளைக் கொண்டதாக கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. இக்கோவிலுக்குள் அடுத்தடுத்து அமைந்துள்ள 3 வட்டமான சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார். இக்கோவிலின் நடுமையத்தில் அமைந்துள்ள இறைவனது சன்னிதியில் ஆதிகும்பேஸ்வரரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது.

பா.ஜம்புலிங்கம்

திருவானைகாவல்

திருவானைகாவல்

திருவானைகாவல் அல்லது திருவானைகோயில் என்று அழைக்கப்படும் இந்த தொன்மை வாய்ந்த நகரம் காவேரி ஆற்றின் வடகரையில், ஸ்ரீரங்கத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது. திருவானைகாவல் நகரில் ஜம்புகேஸ்வரர் ஆலயம் அமைந்திருப்பதால் இது சிவபக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.

Ssriram mt

அமைப்பு

அமைப்பு

இந்த கோயிலின் முதன்மை தெய்வமான சிவபெருமானை தவிர பக்தர்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தேவி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலின் உட்பிரகாரத்தில் அமைத்துள்ள பஞ்சபூதஸ்தலம் எனப்படும் புனித நீர் தொட்டியில் நீராடினால் பாவங்கள் தீர்ந்து மோட்சத்துக்கு வழிவகுக்கும் என்று நம்பபடுகிறது.

Hari Prasad Nadi

சி.வி. ராமன்

சி.வி. ராமன்

திருவானைகாவல் நகரம், இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர், சர் சி வி ராமன் பிறப்பிடமாக இருப்பதினால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உலக புகழ் பெற்ற இயற்பியலாளர் பிறந்த இடத்ததை பார்க்க வேண்டும் என்ற ஆசை காரணமாக பல சுற்றுலாப் பயணிகளை இந்த சிறிய நகரத்தை தேடி வருகின்றனர். சர் சி.வி. ராமன் தனது வாழ்வின் பெரும்பகுதி நாட்களை கழித்த வீடு இன்னும் இந்நகரத்தில் உள்ளது.

Nsmohan

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

தன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அது புராதனமான காஞ்சிபுரம் நகரம் மட்டுமேயாகும். இந்நகரம், பல கோயில்களை கொண்டுள்ளதனால் மட்டுமல்ல, இது பல்லவ மன்னர்களின் தலைநகரமாகவும் இருந்த காரணத்தினாலும், பெரும் புகழ் பெற்றுள்ளது. இன்றும், சில சமயங்களில் இதன் பழைய பெயர்களான "காஞ்சியம்பதி" என்றும் "கொஞ்சிவரம்" என்றும் அழைக்கப்படுகிறது.வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்நகரை "ஆயிரம் கோயில்களின் நகரம்" என்றே அறிந்து வைத்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரத்திற்கு செல்வது எளிது.

Amiya418

 ஏழு புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்று

ஏழு புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்று

இந்து மதத்தினர், தம் வாழ்நாளில் ஒரு தரமாவது சென்று வர வேண்டிய ஏழு புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்றான இந்நகரம், இந்துக்களின் புனித நகரமாகக் கருதப்படுகிறது. இந்து மதப் புராணங்களின் படி, அவ்வேழு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவோர் கண்டிப்பாக மோட்சத்தை அடைவர் என்று நம்பப்படுகிறது. இந்நகரம், சிவ பக்தர்கள் மற்றும் விஷ்ணு பக்தர்கள் ஆகிய இருபிரிவினருக்கும் புனித ஸ்தலமாகும். காஞ்சிபுரம் நகரில், சிவ பெருமான் மற்றும் மஹா விஷ்ணுவிற்காக எழுப்பப்பட்ட பல கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுள் மஹா விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள வரதராஜ பெருமாள் கோயிலும், சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள ஏகாம்பரநாதர் கோயிலும் மிகப் பிரபலமானவை. சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள, ஐம்பூதங்களைக் குறிக்கும் விதமான "பஞ்சபூத ஸ்தலங்கள்" என்னும் ஐந்து கோயில்களுள், ஏகாம்பரநாதர் கோயிலும் ஒன்று. புனித நகரம் ஏராளமான விஷ்ணு கோயில்கள் இங்குள்ளதாலேயே காஞ்சிபுரம், அப்பெயரில் அழைக்கப்படுவதாக சான்றோர்கள் கூறுகின்றனர்.

IM3847

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

"கா" என்பது "ஆஞ்சி"-யைக் கொண்டுள்ள பிரம்மாவை குறிக்கிறது. அதாவது இங்குள்ள விஷ்ணுவை வழிபட்ட பிரம்மா என்ற அர்த்தம் கொண்டு இதன் பெயர் வழங்கப்படுகிறது. எனினும் இங்கு சிவன் கோயில்கள் பலவும் உள்ளன. காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் அதிக பட்ச சிவன் கோயில்கள் இருப்பதால், அப்பகுதி "சிவகாஞ்சி" என்றும் விஷ்ணு கோயில்கள் அதிகம் உள்ள கிழக்குப் பகுதி, "விஷ்ணு காஞ்சி" என்றும் வழங்கப்படுகின்றது. கைலாசநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், கச்சப்பேஷ்வரர் கோயில் மற்றும் குமரகோட்டம் ஆகியன இங்குள்ள பிரபலமான வேறு சில கோயில்களாகும். பழங்காலப்பெருமையின் கலவை வரலாற்று ஆர்வலர்கள், பெருமை மிக்க கடந்தகாலத்தைக் கொண்ட காஞ்சிபுரத்தை, மிகவும் விரும்புவர்.

Myselfpallab

மேற்கத்திய ஆதிக்கங்களின் பூரண கலவை

மேற்கத்திய ஆதிக்கங்களின் பூரண கலவை

இன்றைய நிலையில், காஞ்சிபுரம் அதன் ஏராளமான கோயில்கள் மற்றும் இந்திய, மேற்கத்திய ஆதிக்கங்களின் பூரண கலவையாக விளங்குவதால், பெரிதும் புகழ்பெற்று விளங்குகின்றது. பட்டு நகரம் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் உலகமெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பட்டு நூலில், தங்கச் சரிகை சேர்த்து நெய்யப்படும் இச்சேலைகள், முற்காலத்தில் வாழ்ந்த பெண்கள் மட்டுமல்லாது, இக்காலத்து நவீன பெண்களும் விரும்பும் வண்ணம் நெய்யப்படுகின்றன. இச்சேலைகள், தென்னிந்தியாவின் உடைக் கலாச்சாரத்தில் முக்கியமான அங்கமாக இருப்பினும், தமிழர்களின் தனிப்பெருமை வாய்ந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பெருமை பொருந்தியதாகும்.

SINHA

விழாக்கள்

விழாக்கள்

வருடந்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இப்புனித நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், தேவராஜஸ்வாமி கோயில், மற்றும் கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்களுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். காஞ்சிபுரம், நாட்டின் பிற பகுதிகளுக்கு, சாலை வழி மற்றும் இரயில் வழி போக்குவரத்து சேவைகளினால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும். காஞ்சிபுரத்தின் வானிலை, வெப்பமான கோடைகாலமும், இரம்மியமான குளிர்காலமுமாக மாறி மாறி காணப்படும்.

IM3847

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X