Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மிக அசுத்தமான மூன்று சுற்றுலாத்தலங்கள்

இந்தியாவின் மிக அசுத்தமான மூன்று சுற்றுலாத்தலங்கள்

By Super Admin

சுற்றுலா செல்வதற்கான முக்கிய காரணமே மாசு நிறைந்த நகர வாழ்கையில் இருந்து தப்பித்து சுத்தமான காற்றை சுவாசித்து உடலும், மனதும் புத்துணர்ச்சி பெறவேண்டும் என்பது தான்.

மனதை கொள்ளைகொள்ளும் 50 அரண்மனைகள்!!!மனதை கொள்ளைகொள்ளும் 50 அரண்மனைகள்!!!

ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால் குறிப்பிட்ட 'சீசன்' காலகட்டங்களில் சுற்றுலாத்தலங்கள் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும். அப்போது அந்த இடமும் முற்றாக மாசுபடுகிறது. அப்படி இந்தியாவில் இருக்கும் மிகவும் அழுக்கான சுற்றுலாத்தலங்கள் எவைஎவை என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஹோட்டல் மற்றும் பயண கட்டணங்களில் 70% தள்ளுபடி பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

காசி - கங்கை ஆறு :

காசி - கங்கை ஆறு :

உலகத்திலேயே தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்துவரும் பழமையான நகரங்களில் ஒன்றாக சொல்லப்படுவது உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்துக்களின் புனிதஸ்தலமான வாரணாசி எனப்படும் காசி நகரமாகும். கங்கைக்கரையில் அமைந்திருக்கும் இந்த நகரம் இப்போது மிக மிக மாசடைந்த நகரங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

Photo: Flickr

காசி - கங்கை ஆறு :

காசி - கங்கை ஆறு :

இங்குள்ள மக்களின் நம்பிக்கைப்படி காசிக்கு சென்று கங்கை ஆற்றில் குளித்தால் வாழ்வில் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கங்கையில் ஸ்நானம் செய்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் கங்கைக்கரையில் இருக்கும் படித்துறைகளில் தினமும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பிணங்கள் எரியூட்டப்படுகின்றன.

Photo: Flickr

காசி - கங்கை ஆறு :

காசி - கங்கை ஆறு :

இவைகளோடு காசி நகரில் இருக்கும் அனைத்து கழிவு நீர் குழாய்களும் கங்கையிலே சங்கமிப்பதால் மிக ஆபத்தான உயிர்கொல்லி நுண்ணுயிரிகள் கங்கை ஆற்றில் உருவாவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Photo: Flickr

காசி - கங்கை ஆறு :

காசி - கங்கை ஆறு :

இந்த அசுத்தங்கள் எல்லாவற்றையும் தாண்டி ஆன்மீகத்தில் நாட்டமுடையவர்களின் சொர்கமாகவே வாரணாசி நகரம் திகழ்கிறது. இங்கே நாம் வாழ்கையில் இதுவரை சந்தித்திராத விதவிதமான மனிதர்கள் பார்க்கலாம். இறப்பை நோக்கி காத்திருக்கும் முதியவர்கள், முற்றும் துறந்த அகோரிகள், ஆன்மீக அனுபவம் தேடி வந்திருக்கும் வெளிநாட்டவர்கள் என வாழ்வின் இன்னொரு முகத்தை நாம் இங்கே பார்க்கலாம்.

Photo: Flickr

காசி - கங்கை ஆறு :

காசி - கங்கை ஆறு :

வாரணாசியில் நாம் முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்களென்றால் அது காசி விஸ்வநாதர் கோயில், தச்யஸ்வமேத படித்துறை, மணிகர்ணிகா படித்துறை, ராம் நகர் கோட்டை போன்றவை ஆகும். இவற்றை தவிரவும் நூற்றுக்கணக்கான கோயில்கள் இந்த நகரில் உண்டு.

Photo: Flickr

காசி - கங்கை ஆறு :

காசி - கங்கை ஆறு :

இந்த மிகப்பெரும் வரலாற்று பழமையுடைய காசி நகரை பற்றிய மேலதிக தகவல்களை தமிழின் முதன்மை பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் அறிந்துகொள்ளுங்கள்.

Photo: Flickr

காசி - கங்கை ஆறு :

காசி - கங்கை ஆறு :

கங்கை கரையில் நடக்கும் முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றான கங்கா ஆரத்தி.

Photo: Flickr

காசி - கங்கை ஆறு :

காசி - கங்கை ஆறு :

கங்கை கரையில் நடக்கும் முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றான கங்கா ஆரத்தி.

Photo: Flickr

காசி - கங்கை ஆறு :

காசி - கங்கை ஆறு :

வாரணாசியின் புகழ் பெற்ற அம்சங்களில் ஒன்று அங்கு கிடைக்கும் பட்டு சேலைகள் ஆகும். இவை 'பெனாரஸ்' பட்டு என்று அழைக்கப்படுகிறது.

Photo: Flickr

காசி - கங்கை ஆறு :

காசி - கங்கை ஆறு :

காசி நகரில் இருக்கும் படித்துறைகள்.

photo: Flickr

காசி - கங்கை ஆறு :

காசி - கங்கை ஆறு :

காசி நகரில் இருக்கும் படித்துறைகள்.

photo: Flickr

காசி - கங்கை ஆறு :

காசி - கங்கை ஆறு :

காசி நகரில் இருக்கும் படித்துறைகள்.

photo: Flickr

மெரீனா பீச் - சென்னை :

மெரீனா பீச் - சென்னை :

சென்னைவாசிகள் பலருக்கும் மெரீனா கடற்கரை என்பது வாழ்க்கையோடு ஒன்றிய ஓரிடமாகும். காதலை பகிர்ந்துகொள்ளவும், மனம் விட்டு பேசவும், தனிமையை கொண்டாடிடவும், நண்பர்களுடன் கூத்தடிக்கவும் என எல்லாவற்றுக்கும் இந்த கடற்கரையைவிட சிறந்த ஓரிடம் சென்னையில் இருக்க முடியாது. அப்படிப்பட்ட இந்த கடற்கரை மிகவும் குப்பைகள் சூழ்ந்த ஓரிடமாகவும் உள்ளது.

Photo: Flickr

மெரீனா பீச் - சென்னை :

மெரீனா பீச் - சென்னை :

என்னதான் கடற்கரையை அசுத்தப்படுத்துவது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடந்தாலும் தினமும் கிட்டத்தட்ட டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் இங்கு குவிகின்றன. இதைவிட கொடுமை கடற்கரையோரத்தில் வசிக்கும் பலரும் இயற்கை உபாதைகளை கழிக்கவும் இந்த இடத்தையே பயன்படுத்துகின்றனர்.

Photo: Flickr

மெரீனா பீச் - சென்னை :

மெரீனா பீச் - சென்னை :

வார இறுதி விடுமுறைகளிலும், தீபாவளி, காணும் பொங்கல் போன்ற விசேஷ நாட்களிலும் மக்கள் இங்கே அதிகமாக கூடுகின்றனர். இந்த மெரீனா கடற்கரையிலேயே வைத்து மிக சுத்தமான இடமாக சொல்லப்படுவது எல்லியட்ஸ் பீச் எனப்படும் பெசன்ட் நகர் பீச் ஆகும்.

Photo: Flickr

மெரீனா பீச் - சென்னை :

மெரீனா பீச் - சென்னை :

மாலை நேரத்தில் இந்த பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்தால் வங்காள விரிகுடாவுக்கு பின்னணியில் சூரியன் மறையும் அற்புதமான காட்சியை கண்டு ரசிக்கலாம். சென்னைக்கு சென்றால் கட்டாயம் நாம் செல்லவேண்டிய இடம் இதுவாகும்.

சென்னையை பற்றியும், மெரீனா கடற்கரை பற்றியும் மேலும் சுவாரஸ்யமான தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo: Flickr

மெரீனா பீச் - சென்னை :

மெரீனா பீச் - சென்னை :

மெரீனா கடற்கரையில் கிடைக்கும் அருமையான மீன் வறுவலை சுவைத்திட மறந்துவிடாதீர்கள்.

Photo: Flickr

மெரீனா பீச் - சென்னை :

மெரீனா பீச் - சென்னை :

சில நேரங்களில் இங்கே அலைகளின் வேகம் அளவுக்கு அதிகமாக இருக்குமென்பதால் கடலில் குளிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Photo: Flickr

சபரி மலை - பம்பா நதி :

சபரி மலை - பம்பா நதி :

கேரள மாநிலத்தில் இருக்கும் சபரி மலை இந்தியாவிலேயே அதிகம் பேர் வந்துசெல்லும் ஆன்மீக ஸ்தலமாகும். விஷ்ணு மற்றும் சிவ பெருமானின் மகனாக சொல்லப்படும் ஐயப்பன் இக்கோயிலின் மூலவராவார். இக்கோயிலானது ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களும் பின்னர் கார்த்திகை மாதம் முழுக்கவும் திறந்திருக்கிறது.

சபரி மலை - பம்பா நதி :

சபரி மலை - பம்பா நதி :

இந்த கோயிலுக்கு இருமுடி கட்டி வருபவர்கள் அனைவரும் பம்பா நதியில் நீராடி பின்னர் புது வேட்டி அணிந்தே மலையேற வேண்டும். இதனாலேயே பம்பா மிகவும் அசுத்தம் நிறைந்த இடமாக மாறிவிட்டது.

Photo:Raghunath N.B

சபரி மலை - பம்பா நதி :

சபரி மலை - பம்பா நதி :

அதிலும் குறிப்பாக கார்த்திகை மாதம் இங்கே லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் அப்போது எங்கு பார்த்தாலும் குப்பைகளாக காட்சி தருகிறது. அம்மாதம் தவிர மற்ற மாதங்களில் பக்தர்களின் வருகை குறைவாகவே இருக்கும்.

Photo:Raghunath N.B

சபரி மலை - பம்பா நதி :

சபரி மலை - பம்பா நதி :

சபரி மலை பற்றிய மேலதிக தகவல்களை இங்கே அறிந்துகொள்ளுங்கள்.

Photo: Raghunath N.B

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X