சசிகலா. இந்த பெயரையும் மன்னார்குடியையும் தமிழ் தெரிந்த அல்லது தமிழக அரசியல் தெரிந்த யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். அதேசமயம், சசிகலா குடும்பத்தினரின் சொந்த ஊரான மன்னார்குடி பற்றி மட்டும்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்து வைத்திருக்கிறோம் நம்மில் பலர். ஆனால் உண்மையில் சசிகலாவுக்கு சொந்தமான மற்றும் அவருக்கு சம்பந்தமான இடங்களுக்கு அருகே இவ்வளவு இருக்கா என்பது நிச்சயம் பிரம்மிப்பை ஏற்படுத்தும்.

மன்னார்குடி
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மன்னார்குடி. பெரும்பாலும் சசிகலா எனும் பெயருக்காக பிரபலமானதாக கருதப்படும் இந்த மன்னார்குடியில், உலகப் புகழ் பெற்ற கோயில் ஒன்றும் உள்ளது.
Nativeplanet

ராசகோபாலசுவாமி கோயில்
திருவாரூரிலிருந்து 20கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில், தலைநகர் சென்னையிலிருந்து 310கிமீ தொலைவில் உள்ளது. இந்த கோயிலைப் பற்றி மேலும் அறிய
Chitrinee

அருகிலுள்ள மற்ற இடங்கள்
மன்னார்குடியிலிருந்து அருகில் ஹரித்ரா நதி, முத்துப்பேட்டை, முடிகொண்டான் கோதண்ட ராமர் கோயில், தியாகராஜசுவாமி கோயில், கூத்தனூர் சரஸ்வதி கோயில் என சிறப்பு வாய்ந்த இடங்கள் உள்ளன..
Harizen20

சென்னை
தலைநகராம் சென்னை மாநகரில், சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள் பல இயங்கி வருகின்றன. அதைச் சுற்றிலும் பல இடங்கள் சுற்றுலாவுக்கான சிறந்த இடங்களாக உள்ளன.
Sathyaprakash01

பீனிக்ஸ் மால்
சென்னை வாசிகளுக்கு நிச்சயம் அறிமுகமான இடமாக இந்த பீனிக்ஸ் மால் இருக்கும். சென்னையின் மையப்பகுதியில் வேளச்சேரியில் அமைந்துள்ளது இந்த பீனிக்ஸ் மால். இதில் திரைப்பட அரங்குகள், பல வர்த்தக நிறுவனங்கள் என நிறைய அரங்குகளும் கடைகளும் உள்ளன. சென்னை வாசிகளின் முதன்மையான பொழுதுபோக்கு தளமாகவும் இது உள்ளது.
Nandhinikandhasamy

ஈக்காட்டுத் தாங்கல்
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பல ஐடி நிறுவனங்களுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பெயர் பெற்றது. இங்கு சுற்றுலாவுக்காக பெரிய அளவிலான பகுதிகள் எதுவும் இல்லை என்றாலும், பொழுதுபோக்க ஏதுவாக சிறிய சிறிய மால்கள், பூங்காக்கள் அமைந்துள்ளன. புதியதலைமுறை, புதுயுகம், ஜெயாடிவி முதலிய தொலைக்காட்சி அலுவலகங்களும் இங்குதான் அமைந்துள்ளன.
Oneindia Tamil

அருகிலுள்ள சுற்றுலா அம்சங்கள்
ஈக்காட்டுத்தாங்கல் சுற்றியும் ஜாபர்கான் பேட்டை, கிண்டி, ராமபுரம் ஆகிய இடங்களைக் கொண்டது. ஆசியாவிலேயே சிறந்த பாலங்களுள் ஒன்றான கத்திப்பாரா இதன் அருகிலேயே அமைந்துள்ளது. ராமபுரம் எம்ஜியார் இல்லம், காசி திரையரங்கம், தாமரை தொழில்நுட்பப் பூங்கா, ஒலிம்பியா தொழில்நுட்பப்பூங்கா என பல இடங்கள் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.
A.arvind.arasu

திரையரங்குகள்
இந்த இடத்திலிருந்து மிக அருகிலேயே தமிழ்த் திரைப்படங்களுக்குப் பெயர் பெற்ற காசி திரையரங்கம், ஜோதி திரையரங்கம், உதயம் திரையரங்கம் ஆகியன உள்ளன. இந்த பகுதி மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் கலந்துள்ளவை திரையரங்குகள் ஆகும்..
offcial

கத்திப்பாரா
கத்திப்பாரா பாலம் என்பது ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க பாலங்களுள் ஒன்றாகும். இதன் சிறப்பம்சம் ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போல அமைந்திருக்கும் இதன் வடிவமாகும். தற்போது இதன் அருகிலேயே மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, ஒன்றன்மேல் ஒன்றாக மூன்று அடுக்குகள் இருப்பது காண்பதற்கு வித்தியாசமானதாகவும் உள்ளது.
wiki

ஆன்மீகத் தலங்கள்
இதன் அருகில் வேம்புலியம்மன் கோயில், ஸ்ரீ லட்சுமி விநாயகர் கோயில், அம்பாள்நகர் மசூதி, ஸ்ரீ கங்கையம்மன் கோயில், ராமலிங்கேசுவரர் திருக்கோயில் என பல இடங்கள் அமைந்துள்ளன.
சென்னைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள

தஞ்சாவூர்
சோழர்குல முடிவேந்தர்களின் ஆட்சிப்பீடமான தஞ்சாவூரில், எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் உள்ளன. ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோயில் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக வீற்றிருப்பதோடு உலக அளவில் பெருமையையும் பெற்றுத்தந்திருக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியச்சின்னம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

மனோரா கோட்டை
தஞ்சாவூர் நகரத்திலிருந்து 65கி.மீ தூரத்தில் பட்டுக்கோட்டை நகரத்திற்கு அருகே இந்த மனோரா கோட்டை அமைந்திருக்கிறது. இது 1815ம் ஆண்டில் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது.இது இன்றளவும் மிகச்சிறந்த நினைவுச் சின்னமாகப் போற்றப்படுகிறது.
எட்டு அடுக்குகளுடன் எண்முக வடிவில், 23மீ உயர கோபுரம் நிச்சயமாக காண்போருக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.
Tamil Nativeplanet

தஞ்சைப் புதையல்கள்
இங்கிருந்த சுரங்கப்பாதைகளில் மன்னரால் புதையல் பதுக்கப்பட்டிருந்தது என்றும் நம்பிக்கைகள் உள்ளன. இதன் காரணமாக சில புதையல் தேடிகள் இக்கோட்டைப்பகுதிக்கு சேதத்தையும் விளைவித்துள்ளனர். தற்சமயம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை இந்த வரலாற்றுச்சின்னத்தை பாதுகாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.

சுற்றியுள்ள இடங்களில் சுற்றுலா அம்சங்கள்
பிரகத்தீசுவரர் ஆலயம், ராயல் மாளிகை அருங்காட்சியகம், ராஜராஜன் மண்டபம், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சை மராத்தா மாளிகை, சிவகங்கை பூங்கா, சோழர்கால கோயில்கள், பெரியார் சிலை, மராத்தா தர்பார் ஹால்,கண்டீஸ்வரர் கோயில், நீலமேகபெருமாள் கோயில் என சுற்றிலும் எண்ணற்ற இடங்கள் உள்ளன.
youtube

ராயல் மாளிகை அருங்காட்சியகம்
ராயல் பேலஸ் மியூசியம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. சோழர்கள் மட்டுமல்லாது, இந்த பகுதியை ஆண்ட மன்னர்களின் வரலாற்று நினைவுச்சின்னங்களையும், கோயில்கள், போர்கள் பற்றிய தகவல்களையும் தாங்கி நிற்கிறது.
ஓவியங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட நிறைய பொருள்கள் பாதுகாக்கப்படுகின்றன.

ராஜராஜன் மணிமண்டபம்
தஞ்சாவூரின் தெற்குப் பகுதியில் ராஜராஜசோழனின் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இது 1991ம் ஆண்டு 8ம் உலகத் தமிழ் மாநாட்டின்போது அமைக்கப்பட்டது.
சோழர்கால கட்டிடக்கலை வடிவிலேயே இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிற்பபாகும்.
youtube

பெங்களூர்
பரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இந்தியாவின் புதிய முகம். இன்றைய இளைய தலைமுறையால் மிக சுலபாக பொருந்திக்கொள்ள கூடிய ஒரு நவீன அடையாளம்.
இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள

கோடநாடு
கோடநாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மையான இடமாகும். அடிக்கடி அங்குதான் ஓய்வெடுப்பார் அவர். இந்த இடமும் சுற்றுலாப் பிரியர்களிடையே சமீப காலமாக பெரும் ஆர்வத்துக்குள்ளாகியுள்ளது.
Pc: Hari Prasad Sridhar
கோடநாடு- தெரிந்த விசயங்களும்! தெரியாத மர்மங்களும்!

கூடலூர்
ஊட்டி அருகே அமைந்துள்ள பச்சை பசேலென்ற ஊர் கூடலூர் ஆகும். இங்கும் சுற்றுலாப் பயணிகளின் பார்வை அதிகரித்து வருகிறது. அருகிலேயே மசினகுடி, ஊட்டி, குன்னூர் போன்ற இடங்கள் இருப்பதால் இதன்மீதான ஆர்வம் சுற்றுலாப் பயணிகளை இங்கு வரவழைக்கிறது.
Prof. Mohamed Shareef

மசினகுடி
சாகசங்களை விரும்புபவர்களா நீங்கள்? அதுவும் காடுகளில் பயணம் செய்வது என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்படியென்றால் நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான்.