Search
  • Follow NativePlanet
Share
» »தொட்டதெல்லாம் ஜெயமாக்கும் குரு பகவான் தலங்கள்.! எந்த ராசிக்கு பரிகாரம் தேவை ?

தொட்டதெல்லாம் ஜெயமாக்கும் குரு பகவான் தலங்கள்.! எந்த ராசிக்கு பரிகாரம் தேவை ?

குருபகவான் வருட கிரகங்கள் என்றழைக்கப்படும் பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்குபவர். நம் வாழ்வில் மிக முக்கியமானவை இரண்டு உள்ளது. தனம் என்று சொல்லக்கூடிய பணம், புத்திர பாக்கியம் என்னும் குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகமாக குரு விளங்குகிறார். திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள். குருவின் அருள் இருந்தால் ஞானம், கூர்ந்த மதிநுட்பம், அமைச்சர் யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை துறைகளில் பிரகாசிக்கலாம். எனவேதான் குரு பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் சுப கிரகமான குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். குருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைந்து துலாம் ராசியில் உள்ள குரு புரட்டாசி மாதம், அக்டோபர் 11யில் விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த காலகட்டத்தில் எந்த ராசிக்காரர்கள் எந்த குரு தலத்திற்குச் சென்று வழிபட்டால் குரு பெயர்ச்சியின் மொத்த பயனையும் பெற முடியும் என பார்க்கலாம் வாங்க.

பாடி திருவலிதாயம்

பாடி திருவலிதாயம்

சந்திரனின் ஆதிக்கம் பெற்ற கடக ராசியில் ராசிநாதன் சந்திரன் பதினைந்து உலவி வருவார். குருபகவான் கடகத்தில் 4வது வீட்டில் இருந்து அக்டோபர் மாதம் முதல் 5வது வீட்டிற்கு செல்கிறார். குருபகவான் ராசியை பார்வையிடுகிறார். காதல் கனியும் காலம், திருமண வாய்ப்புகளும் கைகூடி வரும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து பாடி திருவலிதாயம் தலத்தில் கடக ராசிக்காரர்கள் குருபகவானை வழிபடுவது நல்லது. தற்போது சென்னைக்கு அருகில் உள்ள 'பாடி' என்னும் இடமே 'திருவலிதாயம்' என்னும் தலம் ஆகும். பாரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால் இத்தலம் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது.

Ssriram mt

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. வலிதாயநாதர் கோவில் குருபகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால் தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னதி உள்ளது. இவர் சிவனை வணங்கும்விதமாக மேற்கு நோக்கியிருப்பது சிறப்பான அமைப்பு.

தென் திட்டை ராஜகுரு

தென் திட்டை ராஜகுரு

தென் திட்டை ராஜகுரு தலம் துலாம் ராசிக்காரர்களுக்கு ஊற்ற தலமாக உள்ளது. இது நாள் வரை துலாம் ராசியில் இருந்த குரு பகவான் அக்டோபர் மாதம் முதல் ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்திற்கு செல்கிறார். குரு பெயர்ச்சியினால் வீட்டில் அமைதி நிலவும், உல்லாச பயணம் செல்லக்கூடிய நேரம், சிலருக்கு பணி செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும், பதவி உயர்வுகள் கிடைக்கும். துலாம் ராசிக்கார்கள் தங்களது துணைவியுடன் அல்லது குடும்பத்தினருடன் இத்தலம் சென்று பரிகாரம் செய்து விட்டு வர அடுத்த மூன்று மாதங்களில் சொத்து, செல்வம், புகழ் என தொட்டெல்லாம் பொன்னாகும்.

B Jambulingam

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

குருவித்துறை குரு

குருவித்துறை குரு

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியுடையோருக்கு இதுநாள் வரை ராசியின் விரைய ஸ்தானத்தில் இருந்த குருபகவான், அக்டோபர் மாதம் முதல் ராசிக்குள் வந்து அமர்கிறார். இதனால் அன்றைய நாள் முதல் பணவரவு அதிகரிக்கும். குரு பகவானை வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வரலாம். திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். குரு 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தை பார்ப்பதால் வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு ஏற்படும். விருச்சிக ராசியில் இதுவரை ஏற்பட்டிருந்த சிறுசிறு தோஷங்கள் நீங்க குருவித்துறை குருபகவானை வழிபட்டு வர குருவின் மோத்தப் பார்வையும் இடையூறு இன்றி விழும்.

Ssriram mt

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

அருள்மிகு சித்தாத வல்லப பெருமாள் திருக்கோவில், குருவித்துறை, வாடிப்பட்டி, மதுரை இது மிகவும் பழமையான சிறப்பு மிக்க திருத்தலம். இது ஒரு பெருமாள் திருத்தலம். நவக்கிரகங்கள் பெரும்பாலும் சிவன் கோவில்களில் தான் தானி இயலும். ஆனால் இங்கு குருபகவான் தனி சன்னதியில் சக்கரத்தாழ்வாருடன் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பான அம்சம். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர்.

ஆலங்குடி ஆபத்சகாயஸ்வரர் ஆலயம்

ஆலங்குடி ஆபத்சகாயஸ்வரர் ஆலயம்

நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தலத்துச் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம் - குருதக்ஷிணாமூர்த்தி, ஆதலின் இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர். தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான். வடக்குத் திசை குருவிற்கு உரியது. தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. மீன ராசிக்கு 3-ம் இடத்தை குரு பார்க்கப் போவதால் ஆலங்குடி ஆபத்சகாயஸ்வரர் ஆலயத்தில் வழிபட்டு தைரியமாக அனைத்து காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு. பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக ஆலங்குடி சென்று குருவுக்கு பிரீதி செய்வதும், திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து முருகப் பெருமானை வழிபாடு செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும்.

Rasnaboy

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. சென்னையில் இருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக சுமார் 318 கிலோ மீட்டர் பயணித்தால் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயஸ்வரர் ஆலயத்தை அடையலாம். மாமல்லபுரம், கடலூர், மயிலாடுதுறை வழியாகவும் 302 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆலயத்தை அடையமுடியும்.

ஆழ்வார்திருநகரி

ஆழ்வார்திருநகரி

ஆழ்வார்திருநகரி தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும். பொதுவாக ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், இத்தலத்தில் சிஷ்யனான மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார்.

Ssriram mt

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

108 திருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து பந்தல்குடி, கோவில்பட்டி வழியாக 174 கிலோ மீட்டர் பயணித்தால் தூத்துக்குடியில் உள்ள ஆழ்வார்திருநகரி வந்தடையலாம். கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாகவும் 186 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவிலை அடையமுடியும். திருச்செந்தூருக்கு முன்னதாக இக்கோவில் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய குரு பட்டமங்கலம்

கிழக்கு நோக்கிய குரு பட்டமங்கலம்

கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தி சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளுகிறார். இவரது சன்னதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னதி அமைந்துள்ளது. இவரது சன்னதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தெட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடைபெறும்.

R.K.Lakshmi

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

மதுரையில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கிலோ மீட்டர் தொலைவிலும் திருப்புத்தூர் உள்ளது. இங்கிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் பயணித்தால் பட்டமங்கலம் குரு தலத்தை அடையலாம்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மேதா தட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம், அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

Sathish DJ

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

மதுரையில் இருந்து பந்தல்குடி, பசுவந்தனை, தூத்துக்குடி வழியாக 181 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருச்செந்தூர் முருகன் கோவில். திருநெல்வேலி, நாகர்கோவில், இராமநாதபுரம் என மாநகரத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் திருந்செந்தூர் வந்தடைய பேருந்துவசதிகள் எளியமுறையில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வார சிறந்த கட்டுரைகள் -

மிதக்கும் ஏரியில் மிதக்கும் கிராமம்... இயற்கையின் அமானுஷ்யம்!

தொட்டதெல்லாம் ஜெயமாக்கும் குரு பகவான் தலங்கள்.! எந்த ராசிக்கு பரிகாரம் தேவை ?

கொடைக்கானல் சாலைக்கு வயசு நூறாம் எந்த சாலை தெரியுமா?

கோவா சுற்றுலா செல்ல சிறந்த காலம் எது? - கோடை Vs மழை

குமரி Vs கோவை - தனிமை சுற்றுலாவுக்கு சிறந்தது எது?

வாசகர் கேள்விகள் - எது பெஸ்ட் ஊட்டியா? கொடைக்கானலா?

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more