» »கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2

கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2

Written By: Sabarish

தமிழ் நாட்காட்டி ராசிச் சக்கரத்தில் பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் சித்திரையே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது. அவ்வாறாக இந்த தமிழ்புத்தாண்டில் ராசிச் சக்கரத்தில் சூரியன் நுழையும் போது முதல் மூன்று இராசிக் காரர்கள் எந்தக் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என கடந்த தொகுப்பில் பார்த்தோம். தொடர்ந்து, அடுத்தடுத்து வரும் கடகம், சிம்மம், கன்னி ராசியுடையோர் எந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் சகலபாக்கியம் பெருகும் என பார்க்கலாம் வாங்க...

கடகம் - முத்துக்குமார சுவாமி கோவில்

கடகம் - முத்துக்குமார சுவாமி கோவில்


கடக ராசி உடையோருக்கு சனிபகவான் தொடர்வதால் சற்று மனவுளைச்சல்கள் வந்துசெல்லும். ஈரோடு மாவட்டம், பவளமலையில் உள்ள முத்துகுமார சுவாமி திருக்கோவிலுக்கு தமிழ்புத்தாண்டு அன்று சென்று வழிபட்டு வர குருபகவான் மூலம் மனநிம்மதியும், உடல் ஆரோக்கியமும், அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளும் அரங்கேறும்.

Manoj M Shenoy

என்ன சிறப்பு ?

என்ன சிறப்பு ?


பவளமலை முருகன் சந்நிதியில் உள்ள லிங்கம் விவசாய நிலப்பரப்பில் கண்டெடுக்கப்பட்டது. இயற்கையாக தோன்றிய லிங்கம் என்பதால் முத்துக்குமார சுவாமி தலத்தில் வைத்து வழிபட்டு வருகின்றனர். இதனை கைலாசநாதர் லிங்கம் என்றும், இயற்கையாக உருவானதால் சுயம்புலிங்கம் என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறது.

Indrajit Das

திருவிழா

திருவிழா


முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களான கந்த சஷ்டி, தைப்பூசம், கார்த்திகை உள்ளிட்ட தினங்களில் அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்று பால்குடம் ஏந்தி விழா கொண்டாடுகின்றனர். சித்ரா பவுர்ணமி, வைகாசி தினங்களிலும் சிறப்பு விழா நடத்தப்படுகிறது.

Ganesan

எப்போது செல்ல வேண்டும் ?

எப்போது செல்ல வேண்டும் ?


அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறக்கப்படுகிறது.

Utsavullas33

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ஆலப்புழா எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் சகாப்தி எக்ஸ்பிரஸ், திருவணந்தபுரம் வார ரயில், மங்களூர் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்தும் சாலை மார்க்கமாக ஈரோட்டை அடையலாம்.

Rsrikanth05

சிம்மம்- கார்க்கோடகேஸ்வரர் திருக்கோவில்

சிம்மம்- கார்க்கோடகேஸ்வரர் திருக்கோவில்


ரிஷப ராசிக்காரர்களுக்கு 12ல் ராகுவும், 6ல் கேதுவும் தொடர்வதால் வீட்டில் மகிழ்ச்சிகரமான விசேச நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பாத வகையில் தொழிலில் லாபம் அடைய அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், மறைமுக எதிரிகளால் சில தடங்கல்களும் ஏற்படும். இதனைத் தவிர்க்க அரியலூரில் உள்ள அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.

Dineshkannambadi

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


பல நூற்றாண்டுகளைக் கடந்த கோவிலில் உள்ள தூண்கள் பல்வேறு சிற்பக் கலைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சன்னதியின் அருகே தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மன் உள்ளிட்ட திருமேனிகள் உள்ளன. நாக தோஷம் நீக்கும் தலம் என்பதால் கோவிலின் ஒரு பகுதி நாகர் சிலைகளால் நிறைந்துள்ளது.

எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

திருவிழா

திருவிழா


சித்திரை வருடப் பிறப்பு, பிரதோஷம், ஆடி, விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, திருவாதிரை உள்ளிட்ட தினங்களில் தொடர் ஹோம பூஜைகளும், திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

Nvvchar

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், குருவார் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் என அரியலூருக்கு பல ரயில் சேவைகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும், எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்தும் உள்ளது. இதனருகே திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.

Josephben12345

கன்னி- தகட்டூர் பைரவர்

கன்னி- தகட்டூர் பைரவர்


இந்த ஆண்டு தொடக்கம் முதல் 2019 பிப்ரவரி வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ராகு இருப்பதால் எத்ததனை பிரச்சனைகள் வந்தாலும் அதனைக் கடந்து செல்லும் மனவலிமை கிடைக்கும். இருப்பினும் 4யில் சனி தொடர்வதால் நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரில் எழுந்தருளியுள்ள பைரவரை வழிபடுவது மேலானது. இதனால், செல்வாக்கும், பங்குச் சந்தையில் நல்ல வரவும் கிடைக்கும்.

Arulraja

சிறப்பு

சிறப்பு

தமிழகத்தில் இக்கோவிலைத் தவிர வேறெங்கும் பைரவருக்கு என தனி சன்னதி இல்லை என்பது தனிச்சிறப்பு. மேலும், இத்திருத்தலத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை, முருகன், துர்கை அம்மன் உள்ளிட்டோரும் அருள்பாலிக்கின்றனர். காலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் இத்திருத்தலத்தை அடைந்தால் தீப ஆராத்தியுடன் பைரவரை வழிபடும் பாக்கியம் கிடைக்கும்.

Nsmohan

திருவிழா

திருவிழா


ஞாயிறுதோறும் ராகு காலமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது. கார்த்திகை மாத திங்கள் முதல் வெள்ளி வரை விசேச பூஜைகள் நடத்தப்படுகிறது.

Arunankapilan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திருச்சிராப்பள்ளி விரைவு ரயில், வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ், காரைக்கால் எக்ஸ்பிரஸ் என பல ரயில் சேவைகள் உள்ளது. திருச்சி விமான நிலையம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Nileshantony92

தமிழ்புத்தாண்டில் இந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் !

கடகம் டூ அடுத்த மூனு ராசிக்காரங்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் 'ஜாக்பாட்'.! #AstrologyTemple2

துலாம் டூ தனுசு ராசிக்காரங்களே புத்தாண்டு உங்களுக்கு என்ன தரப்போகுது தெரியுமா? .. #Astrotemple3

மேட்டூர் அணை கட்டாமல் இருக்க 1 லட்சம் பவுன் நஷ்ட ஈடு கேட்ட விவசாயிகள்! #kaviri

மோடியோட ஊர்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்