30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, கேட்பாரற்று கிடக்கும் இந்த 600 ஆண்டுகள் பழமையான அரண்மனை, தமிழ்நாட்டின் பழமையான அரண்மனைகளில் ஒன்றாகும். பண்டைய காலத்தில் உடையர்களால் செழுமையான ஆட்சி செய்த போது கட்டப்பட்ட இந்த அரண்மனை இப்போது மிகவும் சிதிலமடைந்து புறாக்களுக்கும், வௌவால்களுக்கும் புகலிடமாக உள்ளது. இந்த பழங்கால கட்டமைப்பை புணரமைக்க தமிழக அரசு ஏதாவது முயற்சி செய்யுமா?
உடையார்கள் ஆண்ட உடையார் பாளையம்
தமிழ்நாட்டில் உள்ள பழைய பாளைய ஆட்சிகளில் உடையார் பாளையம் பாளையமும் ஒன்று. உடையார்பாளையம் அரண்மனை தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அரண்மனை முழுவதுமாக இடிந்து சிதிலமடைந்து கிடக்கிறது. சில பகுதிகள் ஜமீன் சந்ததிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1500களில் கட்டப்பட்டதென்றும், இதை கட்டியவர் சின்ன நல்லப்ப உடையவர் என்றும் கூறுகிறார்கள். இவர் தனது அரண்மனையை கட்டிய பின், அரண்மனையைச் சுற்றி பல கிராமங்களை உருவாக்கி இருக்கிறார் என்றும் அதனாலேயே உடையார் பாளையம் உருவானதாக வரலாறு கூறுகிறது.

பல பொக்கிஷங்கள் இடிபாடுகளில் முடக்கம்
இடிபாடுகளில் பெல்ஜியன் படிந்த கண்ணாடி சுவரோவியங்கள், ஐரோப்பிய சரவிளக்குகள், அசாதாரணமான பெரிய மர தளபாடங்கள், அலமாரிகள், ஒரு பெரிய ரோல் மேசை, கவர்ச்சியான மற்றும் பழமையான பீங்கான் துண்டுகள், பல்லக்குகள் ஆகியவை அடங்கும். அவை பல ஆண்டுகளாக தூசி மற்றும் புறக்கணிப்புகளால் மூடப்பட்டிருக்கின்றன. மேலும் பல சரவிளக்குகள், படங்கள், சிற்பங்கள், கலைப் படைப்புகள் அனைத்தும் பல ஆண்டுகளாக புறக்கணிப்பட்ட நிலையில் உள்ளன.
பல்வேறு நினைவுகளுக்கு சான்றாக நிற்கும் தடவாளங்கள்
பல்லவர்களின் வழித்தோன்றல்களான பிரம்ம வன்னியகுல சத்திரியர்கள், கங்கானுஜ பார்க்கவ கோத்திரம் "காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டப் பெயருடன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். லக்ஷ்மி விலாசம், நீதிமன்ற மண்டபம், நடனம் மற்றும் இசைக் கச்சேரிகள் நடந்த கிருஷ்ண விலாசம், குடும்பத் திருமணம் நடந்த மண்டபம் என்று தனியே சில வடிவங்கள் உள்ளன.
பெருமை வாய்ந்த உடையார்கள் ஆட்சி
பிற்காலத்தில், காலாட்கள் தோழ உடையார்கள் என்ற சந்ததியினர், உடையார்பாளையம் பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளனர். இந்த சந்ததியினரைப்பற்றிய குறிப்புகள் நாயக்கமன்னர்கள் வரலாறுகளில் பேசப்படுகிறது. காஞ்சிபுரத்தை பூர்விகமாகக் கொண்ட இவர்களை பற்றிய பெருமைகளை விளந்தை கல்வெட்டு கூறுகிறது.

கங்கைக்கொண்ட சோழபுரம் காத்த உடையார்கள்
கங்கைக்கொண்ட சோழபுரம் இவர்களது ஆளுமையில் 400 ஆண்டுகளாக இருந்து இருக்கிறது. கங்கைக்கொண்ட சோழபுரத்தின் கோபுரக்கலசங்கள் சிங்க முகக்கிணறு ஆகியவை உடையார் பாளையம் ஆட்சியர்களின் காலத்தில் கட்டப்பட்டது எனவும், இவர்கள் காலத்தில் கோவில்கள் பலவும் புரனமைக்கப்பட்டுள்ளது எனவும் வரலாறின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.
உடையார்களை அடைந்தால் அச்சமில்லாமல் வாழலாம்
இவர் அன்னியர்கள் படையெடுப்பின் சமயம் பல அரசர்களுக்கு தன் அரண்மனையில் அடைக்கலம் கொடுத்து காத்தவர் என்றும் அந்நிய படையெடுப்பில் காஞ்சிபுரத்திலுள்ள ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீ காமாட்சியம்பிகை ஸ்ரீ வரதராஜர் போன்ற பல பல தெய்வங்களை தனது அரண்மனையில் பாதுகாத்து வந்திருக்கிறார் என்றும் வரலாறு கூறுகிறது. உடையார் பாளையத்திற்கு சென்றால் அச்சமின்றி வாழலாம் என்ற நம்பிக்கையை பல அரசர்களிடமிருந்து பெற்றவர்.
புறாக்கள், வௌவால்களின் புகலிடமாக மாறிய அரண்மனை
அளவிலும் உயரத்திலும் மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒத்திருக்கும் இந்த அரண்மனை பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட போதிலும், இது இன்னும் அதன் அழகைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகள் உயிர்வாழும், அதைப் பாதுகாக்கும் முயற்சி இல்லாவிட்டால் மறைந்து போகலாம். மேற்கூரைகள் பழுதடைந்து, புறா, வௌவால்களின் புகலிடமாக மாறியுள்ளன. லக்ஷ்மி விலாசம் மோசமான நிலையில் இருப்பதால், அதற்குள் நுழைய வேண்டாம் என்று பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரண்மனையை மீட்குமா தமிழக அரசு
இன்றும் இந்த அரண்மனையில் வேல் கம்பு அம்பாரி,பல்லக்கு போன்றவை பத்திரமாக உள்ளது. இவர்களின் வழி வந்த ஜமீன்களின் கண்காணிப்பில் அரண்மனையானது இருந்தாலும், அவர்களிடம் போதுமான நிதி வசதி இல்லாததால் இந்த அரண்மனையானது இன்று சிதலமுற்ற நிலையில் காணப்படுகிறது. இதில் எஞ்சி நிற்கும் கட்டிடத்தை அரசு பொறுப்பேற்று, இதை பாதுக்காக்க வேண்டும் என்று வரலாறை விரும்பும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Click it and Unblock the Notifications





