Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் வசிக்கும் அனைவரும் குடும்பத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய தக்ஷிணசித்ரா – ஏன் தெரியுமா?

சென்னையில் வசிக்கும் அனைவரும் குடும்பத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய தக்ஷிணசித்ரா – ஏன் தெரியுமா?

சென்னையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தக்ஷிணசித்ரா ஒரு தனித்துவமான கலாச்சார அருங்காட்சியகம் ஆகும். மெட்ராஸ் கிராஃப்ட் அறக்கட்டளையின் திட்டமான தக்ஷிணசித்ரா தென்னிந்தியாவின் கலாச்சார மற்றும் கட்டிடக்கலை பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் 18 தனித்துவமான பாரம்பரிய வீடுகளை கொண்டுள்ளது. இது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கைவினை மற்றும் பிற கலை வடிவங்களை ஊக்குவிக்கிறது. பல்வேறு தென்னிந்திய சமூகங்களின் மாறுபட்ட வாழ்க்கை முறைகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் வாழ்க்கை வரலாற்று அருங்காட்சியகம் இது. சென்னைக்கு அருகில் இருக்கும் இப்படி ஒரு அழகிய இடத்திற்கு உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் சென்றால் அவர்கள் சந்தோஷமாக இருப்பதோடு பல விஷயங்களையும் கற்று கொள்வார்கள் தெரியுமா?

dakshinchitramuseumcover

எதற்காக இங்கே செல்ல வேண்டும்

ஒரு கிராமத்தின் வடிவத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் தென்னிந்தியர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையைக் காட்டுகிறது. மெட்ராஸ் கிராஃப்ட் அறக்கட்டளையின் திட்டமாக 14 டிசம்பர் 1996 அன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட இந்த பாரம்பரிய அருங்காட்சியகத்தில் 4,220 கலைப்பொருட்கள் மற்றும் 1,000,000 படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு அமைந்துள்ள 18 வீடுகள் ஒவ்வொன்றும் அதன் சொந்த சூழல் கண்காட்சியைக் கொண்டுள்ளது. இங்கு சென்றால் தென்னிந்திய பாரம்பரியம் பற்றிய ஆழமான அறிவை பெறலாம். மிக அற்புதமான கற்றல் பொக்கிஷங்களுடன் நீங்கள் வெளியே வருவீர்கள். குறிப்பாக இந்த இடத்திற்கு செல்லும் போது அழகான புகைப்படம் எடுக்க மறக்காதீர்கள்.

dakshinachitramuseum

தென்னிந்திய வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் தக்ஷிணசித்ரா

ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை முறையைக் குறிக்கும் வகையில் 18 பாரம்பரிய வீடுகளுடன் இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகள் அசல் உரிமையாளர்களின் அனுமதியுடன் இடிக்கப்பட்டு பின்னர் கட்டிடக்கலை மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தச்சர்களால் கட்டப்பட்ட உண்மையான வீடுகள். மெட்ராஸ் கிராஃப்ட்ஸ் அறக்கட்டளை உள்ளூர் பாணியிலான வீடுகளை வாங்கியது. இந்த வீடுகளை அமைக்க அவர்கள் 50,000 ரூபாய் முதல் 1.5 மில்லியன் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.

dakshinachitramuseum

கடந்த கால பாரம்பரியத்தை இக்கால இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டும் முயற்சி

இங்கே நீங்கள் பார்க்கும் ஒவ்வொன்றும் பழையகால வாழ்க்கை முறைகள் மற்றும் கட்டிடக்கலை பாணிகள், அவை எப்படி வியத்தகு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன என்பவற்றை பிரதிபலிக்கிறது. விலை உயர்ந்த மரங்கள் மற்றும் ஓடுகள் போன்ற பாரம்பரிய பொருட்களையும் நீங்கள் காணலாம். ஒரு காலத்தில் அத்தகைய பொருட்களில் வேலை செய்த திறமையான உழைப்பு இப்போது மறைந்து வருவதையும் நீங்கள் உணரலாம். இந்த பழைய வீடுகளை மீண்டும் உருவாக்குவது பல்வேறு பிராந்திய கட்டிடக்கலை பாணிகளை புனரமைப்பது மட்டுமல்லாமல், இந்த சமூகங்கள் ஒரு காலத்தில் அன்பாக வைத்திருந்த வாழ்க்கை, இயற்கை மற்றும் சமூகம் பற்றிய நம்பிக்கைகளை நினைவுபடுத்துகிறது.

dakshinachitramuseum

தக்ஷிணசித்ராவில் நம்மை ஈர்க்கக்கூடிய பல விஷயங்கள்

1. தமிழகம் நாட்டுக்கோட்டை செட்டியார் வீடு முதல் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் பாரம்பரிய வீடுகளை காணலாம்.

2. பாதுகாப்பு ஆய்வகம், கலைக்கூடம், கைவினைஞர் குடியிருப்புகளை காணலாம்.

3. ஆராய்ச்சி மற்றும் பரப்புதலுக்கான தொடர்ச்சியான பணிகளுடன் நூலகத்தை ஆராயலாம்.

4. அவ்வப்போது நடக்கும் கலை, ஓவியம், கலாச்சாரம் மற்றும் புத்தகங்களை வெளிப்படுத்தும் கண்காட்சிகளில் பங்கேற்கலாம்.

5. களிமண்ணை அழகான வடிவமாக மாற்றி, மட்பாண்டங்களை செய்யவும் இங்கு நீங்கள் முயற்சிக்கலாம். தமிழ்நாடு பிரிவில் உள்ள குயவன் வீட்டில் இந்த செயல்பாடு கிடைக்கிறது.

6. தக்ஷிணசித்ராவிற்குள் இருக்கும் கைவினைப் பொருட்கள் பஜாரில் லைட்டிங் பாகங்கள், தோட்டக் கருவிகள், பைகள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் போன்ற பல பொருட்கள் விற்கப்படுகின்றன.

7. நடன நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கும் ஒரு ஆம்பிதியேட்டர் உள்ளது அதையும் நீங்கள் பார்வையிடலாம்.

8. தக்ஷிணசித்ரா நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழுக்கள் மற்றும் கைவினைஞர்களை கொண்டு சிறப்பு மாநில மற்றும் கருப்பொருள் திருவிழாக்கள் மூலம் பல்வேறு நாட்டுப்புற கலைகளை மேம்படுத்துகிறது. நிகழ்ச்சி நடக்கும் நேரத்தில் மறக்காமல் அங்கு செல்லுங்கள்.

9. ஊஞ்சல் மற்றும் கயிறு விளையாட்டுகளுடன் குழந்தைகளுக்கான தனி விளையாட்டு பகுதி உள்ளது, அதில் உங்கள் குழந்தைகளை விளையாட வையுங்கள்.

10. மிகக் குறைந்த கட்டணத்தில், பெண்கள் இங்கு மெஹந்தி போட்டு கொள்ளலாம். அது இங்கே மிகவும் விசேஷம்.

11. அதோடு இங்கே விற்கும் சுவையான சிற்றுண்டிகளை வாங்கி சுவைக்க மறக்காதீர்கள்!

சிறிய குளங்கள், பறவைகள், அழகான பூக்கள் மற்றும் மரங்கள் வடிவில் பல ஆச்சரியங்கள் உள்ளன. இதன் பாரம்பரியமும், பசுமையான சுற்றுப்புறமும் இயற்கையின் அழகும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மீண்டும் மீண்டும் வரவழைக்கும்!

More News

    Read more about: chennai tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+