Search
  • Follow NativePlanet
Share
» »ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் வேளாங்கண்ணி திருவிழாவின் சிறப்புகள் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் வேளாங்கண்ணி திருவிழாவின் சிறப்புகள் என்ன?

பதினாறாம் நூற்றாண்டில் பேராலயம் கட்டப்பட்டதில் இருந்து ஆண்டுதோறும் வேளாங்கண்ணி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா, செப்டம்பர் 8 ஆம் தேதி தேர் திருவிழாவுடன் முடிவடைகிறது. 10 நடைபெறும் இந்த திருவிழாவில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த பழமையான திருவிழாவின் சிறப்பு என்னவென்று பார்ப்போம்!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நடந்து வரும் பக்தர்கள்

ஒரு புனித ஆலயத்திற்கு வெறுங்காலுடன் பாதயாத்திரை செய்வது இந்து மத நடைமுறை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அது தவறு. வேளாங்கண்ணி வருடாந்திர திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பகதர்கள் கூட்டம் காவி உடை அணிந்து வேளாங்கண்ணின்னு நடந்து செல்கிறார்கள். அக்கம் பக்கம் ஊர்களில் தொடங்கி சென்னை, கொச்சி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து வரை பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செல்கின்றனர்.

நாட்டிலேயே மிக புகழ்பெற்ற தேவாலயங்களில் ஒன்று

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி தேவாலயம் அல்லது ஆரோக்கிய மாதா பேராலயம், நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை மையங்களில் ஒன்றாகும். வேளாங்கண்ணி திருவிழா 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பசிலிக்காவைச் சுற்றி நடந்த அற்புதங்களை நினைவுபடுத்துகிறது. கப்பல் விபத்தில் சிக்கிய போர்த்துகீசிய மாலுமிகளின் உயிரை அன்னை மேரி எப்படி காப்பாற்றினார் என்பதை ஒரு வரலாற்று சம்பவம் கூறுகிறது.

velankannifestival

கிழக்கின் லூர்து - வேளாங்கண்ணி

மற்றொரு நன்கு அறியப்பட்ட அதிசயம் என்னவென்றால், அன்னை மரியா இளம் தாயின் வடிவத்தில் தோன்றி, அதை விற்கும் ஊனமுற்ற பையனிடம் தனது குழந்தைக்கு மோர் கேட்டார். குழந்தைக்கு மோர் ஊட்டிய பிறகு, அந்தச் சிறுவனுக்கு தன் உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தி, அவனது ஊனமுற்ற கால்களைக் குணப்படுத்தினாள். இந்த அதிசய நிகழ்வைத் தொடர்ந்து, மக்களால் ஓலை வேயப்பட்ட தேவாலயம் கட்டப்பட்டது. கன்னி மேரியின் அற்புதமான குணப்படுத்தும் சக்திகள் தேவாலயத்திற்கு 'கிழக்கின் லூர்து' என்ற பெயரையும் இந்த ஆலயம் பெற்றுள்ளது.

அதிசயங்கள் நிகழ்த்தும் வேளாங்கண்ணி அன்னை

வேளாங்கண்ணியின் தூய ஆரோக்கிய மாதா அன்னைக்கு அதிசய சக்திகள் இருப்பதாக தேவாலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்களால் நம்பப்படுகிறது. மதம், ஜாதி, மதம் என அனைத்து பிரிவினரும் தேவாலயத்திற்கு வந்து அன்னையை தரிசித்துவிட்டு செல்கின்றனர். பக்தர்கள் ஒருமுறை வந்து வேண்டுவதை அவர்கள் அடுத்த முறை அங்கு வருவதற்குள் இந்த தாய் நடத்தி கொடுக்கிறார் என்றும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் நடை பயணமாக வருவது வழக்கம். கிறிஸ்தவ தேவாலயங்களில் தேங்காய் உடைக்கும் பழக்கம் அங்கு மட்டுமே உண்டு என்பது அதன் தனி சிறப்பு, மேலும் முட்டி போட்டுக்கொண்டு கோவிலுக்கு செல்வதும் வழக்கம்.

velankannifestival1

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும் மாதாவின் பிறந்தநாள்

கீழ்த்திசை நாடுகளின் புனித நகரம் என்றழைக்கப்படும் பெருமைக்குரிய வேளாங்கண்ணியில் மாதாவின் பிறந்தநாள் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும். அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கும். பேராலயத்தில் இருந்து தொடங்கிய கொடி ஊர்வலமானது, லட்சக்கணக்கான பக்தர்கள் இடையில் கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத்தெரு வழியாக மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் ஊர்வலமாக சென்று மீண்டும் பேராலய முகத்திற்கு எடுத்து வரப்படும். அதனைத் தொடர்ந்து மாதா வாழ்த்து பாடலுடன் வானவேடிக்கை மிளிர மாதா உருவம் பொறித்த கொடியை கொடிமரத்தில் ஏற்றுவார்கள். கொடியேற்றும் சமயத்தில் ஒவ்வொரு ஆண்டும் அந்த தேவி மழையாக பெய்து பகதர்களை ஆசீர்வாதம் செய்வாள் என்பது ஐதீகம்.

velankannifestival devi darshan

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா

கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, 10 நாட்களும் நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, கூட்டுப்பாடல் திருப்பலி, நற்கருணை ஆசீர் ஆகியவை இடம் பெறும். விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். முக்கிய நிகழ்வான வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ம் தேதியும் அதனைத் தொடர்ந்து மாதா பிறந்த தினமான செப்டம்பர் 8-ஆம் தேதி சிறப்பு திருப்பலி பேராலயத்தில் நடைபெற உள்ளது.

நீங்கள் 2024 வேளாங்கண்ணி திருவிழாவில் கலந்து கொள்ள சென்றால், இப்போதே பிளான் பண்ணுங்கள்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+