Search
  • Follow NativePlanet
Share
» »இப்படி ஒரு வித்தியாசமான ராஜ கோபுரத்தை பார்த்திருக்கீங்களா? இத படிச்சு தெரிஞ்சுகோங்க!!

இப்படி ஒரு வித்தியாசமான ராஜ கோபுரத்தை பார்த்திருக்கீங்களா? இத படிச்சு தெரிஞ்சுகோங்க!!

சிவனின் அவதாரமான ராஜகோபால சுவாமிகள் இக்கோவிலில் சிறுவனாக காட்சி தருகிறார்.

By Udhaya

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள ராசகோபால சுவாமி கோயில் ஒரு வைணவக் கோயில் ஆகும்.

பகவான் கிருஷ்ணரின் ஒரு வடிவமான ராசகோபாலசுவாமி இந்த கோவிலில் சிறுவனாக காட்சியளிக்கிறார். இந்தக் கோவில் 23 ஏக்கர் ( பரப்பளவில் பரவியுள்ளது. குருவாயூரைச் சேர்த்து இந்த கோவில் தட்சிண துவாரகை என்று அழைக்கப்படுகிறது.

ராஜகோபால சுவாமி கோவில், மன்னார்குடி

ராஜகோபால சுவாமி கோவில், மன்னார்குடி

ராஜகோபாலசுவாமி கோயில் குலோத்துங்க சோழரின் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டு, அவருக்குப் பின் வந்த பல்வேறு சோழ மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு கொண்டே வந்துள்ளது. பின்னர், நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் மொத்தம் 16 கோபுரங்கள் இருப்பதுடன், இதன் ராஜகோபுரம் இந்தியாவின் உயரமான கோபுரங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

PC: Raji.srinivas

 ராஜகோபுரம்

ராஜகோபுரம்

கோவிலில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்கள் உள்ளன. பொதுவாக எல்லா ராஜகோபுரத்திலும் கதை சிற்பங்கள் இருக்கும்,. ஆனால் இந்த கோவிலில் கதை சிற்பங்கள் கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் இல்லை.

PC: Supraja kannan

நுழைவுவாயில்

நுழைவுவாயில்

உறையும் ராஜகோபால சுவாமியின் திருஉருவத்தின் உயரம் 12 அடி (3.7 மீ) ஆகும். ஆலயம் நுழைவு வாயிலில் மழை நீர் சேகரிக்கப்பட ஒரு பெரிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

PC: Krishna kumar Subramanian

கோவிலின் சிறப்பு

கோவிலின் சிறப்பு

ராஜகோபாலர் இக்கோவிலில் சிறுவனாக காட்சியளிக்கிறார். வேட்டி அணிந்துள்ள அவர், அதையே தலைப்பாகையாக சுருட்டி வைத்துள்ளார். கையில் சாட்டையும் வைத்துள்ளார்.

PC: Ssriram mt

கோவிலின் வெளிப்புறத் தோற்றம்

கோவிலின் வெளிப்புறத் தோற்றம்

நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது


PC: Ssriram mt

 கோவிலில் காணப்படும் அழகிய கற்சிற்பம்

கோவிலில் காணப்படும் அழகிய கற்சிற்பம்

இந்தக் கோவில் குலோத்துங்க சோழனால் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கிபி 1070-1125 இல் கட்டப்பட்டது. மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்படுகிறது, மேலும் மன்னார்குடி நகரம் கோவில் சுற்றி வளரத் தொடங்கியது.


PC:Ssriram mt

கற்சிற்பம்

கற்சிற்பம்

கோவிலில் காணப்படும் அழகிய கற்சிற்பம்

PC:Ssriram mt

கோவிலின் தேர்

கோவிலின் தேர்

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருளும் உள்பிரகார தேரோட்டம் நடைபெறும். இந்தத் தேர் கடந்த 1892-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது

PC:Ssriram mt

பிள்ளையார்

பிள்ளையார்

கோவிலில் அமைந்துள்ள பிள்ளையார் பிரகாரம்.

PC: rajagopalaswamytemple

ராஜகோபால சுவாமி கோவில்

ராஜகோபால சுவாமி கோவில்

ராஜகோபால சுவாமி கோவில்

PC: rajagopalaswamytemple

More News

    Read more about: பயணம் travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+