» »இமயமலை சிகரத்தை காண சிறந்த இடங்களுக்கு ஒரு சுற்றுலா செல்லலாமா?

இமயமலை சிகரத்தை காண சிறந்த இடங்களுக்கு ஒரு சுற்றுலா செல்லலாமா?

Posted By: Udhaya

இமயமலை இந்திய துணைக்கண்டத்தின் பிரம்மிக்கவைக்கும் அதிசயமாகும். இதை காண விரும்பும் அனைவருக்கும் மலையின் அடிவாரத்தில் பல சுற்றுலா தளங்கள் உருவாகியுள்ளது.

இவற்றில் சிறந்த இடங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்

சௌகோரி

சௌகோரி

கடல் மட்டத்திலிருந்து 2010 மீ உயரத்தில் வீற்றுள்ள இந்த சௌகோரி எனும் மலைவாசத்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கு இமயமலைத்தொடர் மலைகளின் மத்தியில் அமைந்துள்ள இந்த நகரம் வடக்கில் திபெத் மற்றும் தெற்கில் தேராய் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது.

wiki

 புராதன கோயில்கள்

புராதன கோயில்கள்


சௌகோரி பகுதியில் பல புராதன கோயில்கள் அமைந்துள்ளன. பெரிநாக் எனும் கிராமத்தில் உள்ள நாகமந்திர் எனும் கோயில் இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த பாம்புக்கோயில் நாகவேணி மன்ன்னர் பேணிமாதவா என்பவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்த்உ 1350 மீ உயரத்தில் வீற்றிருக்கும் பாதாள் புவனேஷ்வர் எனும் கோயிலும் பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலை ஒரு சுரங்கப்பாதை போன்ற குகையின் வழியாக சென்றடையலாம்.

Parthasarathi Chattopadhyay

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

சௌகோரி மலைக்கிராமத்திற்கு பயணிகள் மிகச்சுலபமாக விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக சென்றடையலாம். சௌகோரிக்கு மிக அருகாமையில் உள்ள சர்வதேச விமான நிலையம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையமாகும்.
கத்கோடம் எனும் ரயில் நிலையமும் சௌகோரிக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்து பயணிகள் டாக்சிகள் மற்றும் பேருந்துகள் மூலம் சௌகோரிக்கு வரலாம். கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்தின் துவக்கம் ஆகியவை சௌகோரிக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்ற பருவங்களாக விளங்குகின்றன.

Shubhachemu

பாதாள் புவனேஸ்வர்

பாதாள் புவனேஸ்வர்

புவனேஷ்வர் எனும் இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 1350 மீ உயரத்தில் உள்ள இந்த பாதாள் புவனேஷ்வர் எனும் குகைக்கோயில் அமைந்துள்ளது. இது சிவனுக்கான கோயில் என்ற போதிலும் இந்த பழமையான கோயிலில் 33 கோடி தெய்வங்கள் உறைவதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது. குகைக்கோயிலுக்கு செல்லும் சுரங்கப்பாதையில் பல அற்புதமான கடவுள் சிற்பங்களையும், ஸ்டாலக்மைட் எனும் பாறைப்படிம அமைப்புகளையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

uttarakhandtourism.gov.in

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

கங்கோலிகாட் எனும் இடத்திலிருந்து வடகிழக்கே 16 கி.மீ தூரத்திலுள்ள இந்த பாதாள் புவனேஷ்வர் கோயில் ஸ்தலத்திலிருந்து ராஜ்ரம்பா, பாஞ்சசுலி, நந்த தேவி மற்றும் நந்த காட் போன்ற சிகரங்களையும் பார்த்து ரசிக்கலாம். இந்த ஸ்தலத்தின் ஆன்மீக முக்கியத்துவமானது சார் தாம் ஸ்தலத்திற்கு ஈடானதாக கருதப்படுகிறது.

uttarakhandtourism.gov.in

ராம்கர்

ராம்கர்

ராம்கர் என்ற அழகிய மலைவாழிடம் உத்தரகண்டிலுள்ள நைனிடால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இந்த இடம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது மலையின் மேல் காணப்படுவது 'மல்லா' என்றும், மலையடிவாரத்தில் இருப்பது 'தல்லா' என்றும் அறியப்படுகின்றன. இந்த இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டரிலிருந்து 1900 மீட்டர் வரை இருக்கும். இந்த இடம் பச்சை பசேலென்ற பீச், ஆப்ரிகாட், பேரிக்காய் மற்றும் ஆப்பிள் தோட்டங்களால் சூழ்ந்திருப்பதால், இதனை 'குமாவோனின் பழக்கூடை' என்றும் அழைப்பர்.


Ricky ponting183

 சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்

இங்கு சுற்றுலா வருபவர்கள், மகாதேவி வர்மா என்ற புகழ் பெற்ற எழுத்தாளருக்காக சமர்பிக்கப்பட்ட நூலகத்தை கண்டுக்களிக்கலாம். இந்த நூலகமே அவரை 'லச்மா' என்ற புகழ் பெற்ற கதையை எழுத உந்துகோலாக இருந்தது. அதன்பிறகே இந்த நூலகம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, அவருடைய பெயராலேயே அழைக்கப்படலானது. இங்கே உள்ள பல சுற்றுலாத் தலங்களில், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த ஆசிரமம் இங்கு வருபவர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்கிறது. நேரம் கிடைத்தால், சுற்றுலாப் பயணிகள் குமாவோன் மண்டல் விகாஸ் நிகாம் என்ற ஒய்வு விடுதி, ஸ்ரீ நரைன் சுவாமி ஆசிரமம் மற்றும் கிரிஜா தேவி கோவிலுக்கும் சென்று வரலாம். ராம்கரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் முக்தேஷ்வர் என்ற மற்றொரு குறிப்பிடத்தக்கத் தலமா ஒன்று உள்ளது. இந்த இடம் சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட 350 வருட பழமை வாய்ந்த கோவிலுக்கு புகழ் பெற்று விளங்குகிறது.

Kuarun

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

பண்ட்நகர் விமான நிலையம் தான் ராம்கரிற்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம். இந்த விமான நிலையத்திலிருந்து டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சீரான விமான சேவைகள் உள்ளன. கத்கோடம் இரயில் நிலையம் தான் ராம்கரிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம். பயணிகள் இந்த இரயில் நிலையத்திலிருந்து ப்ரீ-பேட் டாக்சிகள் மூலமாக ராம்கர் வந்தடையலாம். நொவ்குச்சியாடல் மற்றும் நைனிடாலிலிருந்து பேருந்துகள் மூலமாகவும் ராம்கர் வந்து சேரலாம். கோடைக்காலம் மற்றும் பருவக்காலங்களில் ராம்கர் வருவதே உகுந்த நேரமாகும்.

Kuarun

 பீம்தால்

பீம்தால்

பீம்தால் அதன் அண்டை நகரமான நைனிடாலை விட மிகவும் பழமையானது. பீம்தாலிலிருநது `காத்கோடாம்',` குமோன்' மலைகள், நேபாள், மற்றும் திபெத்தை இணைக்கும் ஒரு பழைய பாதசாரிகளுக்கான சாலை உள்ளது. இது இன்றும் பயன்படுகிறது. இப்பாதை பீம்தால், பண்டய காலத்தில், புகழ்பெற்ற பட்டு பாதையின் ஒர் அங்கமாக இருந்தது என்பதை நிருபிக்கின்றது..

Krishna singh 2516

 பாண்டவர்கள் கட்டிய கோயில்

பாண்டவர்கள் கட்டிய கோயில்

தற்போது பீம்தால், நைனிடால் மாவட்டத்தின் ஒரு மினி தலைமையகமாக செயல்படுகிறது. இந்த நகரம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனின் பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கே உள்ள பீமேஸ்வரர் ஆலயம், பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது கட்டப்பட்டது, என்று நம்பப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பீம்தால் ஏரியின் இறுதியில் அமைந்துள்ள விக்டோரியா அணையை, பார்வையிடலாம். அணையின் இயற்கைக்காட்சியானது, நம்மை மெய்மறக்கச்செய்யும் அளவிற்கு உள்ளது.

Prateik Kulkarni

பீம்தால் ஏரி

பீம்தால் ஏரி


இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பீம்தால் ஏரியின் இறுதியில் அமைந்துள்ள விக்டோரியா அணையை, பார்வையிடலாம். அணையின் இயற்கைக்காட்சியானது, நம்மை மெய்மறக்கச்செய்யும் அளவிற்கு உள்ளது. சுற்றுலா பயணிகள், பீம்தால் ஏரியின் நடுவே உள்ள தீவில் அமைந்துள்ள அக்வேரியத்தை பார்க்க முடியும். இந்த ஏரி, இமயத்தை தாண்டி இடம் பெயரும் பல பறவைகளை தன்னுள் ஈர்கிறது.

Anonymous

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


பீம்தாலுக்கு அருகில், ` காத்கோடம்' ரயில் நிலையம் உள்ளது. இது, பீம்தாலில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சாலை மூலம் பீம்தாலை அடைவது மிகவும் சுலபம். நைனிடால், டேராடூன், ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் போன்ற புகழ்பெற்ற சுற்றுலா பகுதிகளிலிருந்து பீம்தாலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகள், முசோரி, ருத்ரபிராயக், கவ்சனி, ரானிஹெட், மற்றும் உத்தரகாசிலிருந்தும் பீம்தாலுக்கு பேருந்துதில் செல்ல முடியும். தில்லிருந்து ஏராளமான ஆடம்பர சுற்றுலா பேருந்துகள் பீம்தாலுக்கு இயக்கப்படுகின்றன.

Ishti Agarwa

Read more about: travel, himalayas, uttarakhand