Search
  • Follow NativePlanet
Share
» »ஹெலிகாப்டர்ல மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்...!

ஹெலிகாப்டர்ல மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்...!

இயற்கை அழித்த அருட்கொடைகளில் ஒன்று கடல். அவை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை கொடுக்கும். இத்தகைய கடலழகை வானில் வட்டமடித்து கொண்டே ரசித்தால் எப்படி இருக்கும். நினைத்தாலே உங்கள் உடம்பில் உள்ள மயிர்கால்கள் ஒரு கணம் துள்ளி எழுகிறதா? எனக்கும் தான்...

அப்படினா... இந்த கோடை விடுமுறைக்கு உங்க கிட்ஸ் கூட, சென்னையின் இதய பகுதி என கருதப்படும் ஈ.சி.ஆர்., அழகை, ஹெலிகாப்டர்ல ஒரு ரவுண்ட் அடிக்கலாம்... வாங்க நாங்க ரெடி போலாம்னும் நீங்க கேட்டுகிறது காதில விழுது ... எங்கிருந்து, எங்கு வரை ஹெலிகாப்ட்ல போலாம் என்ற விபரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தமிழகத்தின் தலைநகராக மட்டுமில்லாமல் தென்னிந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தளமாக சென்னை மாநகரம் இருக்கிறது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்னையை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்த்து வருகின்றனர்.

chennaihelicaptorride

இந்த சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

ஈ.சி.ஆர்., தான் டார்கெட்:

பெரும்பாலும் சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கோவளம் கடற்கரை, மகாபலிபுரம் ஆகிய பகுதிகளை தான் அதிகம் சுற்றி பார்க்கின்றனர். இந்த சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சென்னையில் 'ஹெலிகாப்டர் ஜாய்ரைடு' சேவை எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற ஆவல் அனைவரிடமும் இருந்து வந்தது. பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகளும் வந்த வண்ணம் இருந்தது.

ஈ.சி.ஆர்., ஹெலிகாப்டர் சேவை:

சென்னை-ஈ.சி.ஆர்., மகாபலிபுரம், கோவளம் பகுதியில், ஹெலிகாப்டர் (Chennai ECR Helicopter Service) சேவையை, தனியார் நிறுவனம் துவங்கியுள்ளது. மக்கள் மத்தியில், நீண்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இந்த சேவையை தமிழக அரசு உதவியுடன் துவங்கப்பட்டு உள்ளது.

helicaptorride1

கட்டணம் தெரியும்?

சென்னை கோவளம் திருவிடந்தை பகுதியில், ஹெலிகாப்டர் மூலம் பயணிக்க சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டரில் பயணிக்க, ஒரு நபருக்கு 10 நிமிடத்துக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

10 நிமிடத்தில் ஹெலிகாப்டர் பயணம் முடிந்து விடுமா? என கேட்கிறீங்க தானே, ஆனால் இந்த 10 நிமிடமும் சூப்பரான, த்ரில்லான அனுபவம் கிடைக்கும். ஹெலிகாப்டரில் பறக்கும் போது, ஏரியல், பேர்டு ஐ வியூவில், சென்னை சிட்டியை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு பக்கம் சென்னை சிட்டி, மறுபக்கம் கடல். இவை நமக்கு வானில் பறக்கும் 10 நிமிடமும் ஒவ்வொரு விதமான அழகை நம் கண்களுக்கு வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கண்கொள்ளா காட்சி ரசிப்பதற்கு, ஆயிரம் கண்கள் இருந்தாலும் போது என்பது போல், இந்த சேவை அனுபவிக்க தான் துவங்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் முதல் இந்த சேவையை, தனியார் நிறுவனம் வழங்குகிறது. ஒரே நாளில் 20 முறை ஹெலிகாப்டர்கள் பறக்கப்பட்டு, மக்களும், சுற்றுலா பயணிகளும் பறக்கின்றனர். உங்கள் குடும்பத்தின் நான்கு பேர் இருந்தால், தலா ரூபாய் 5,000 விதம் ரூபாய் 20,000 கட்டணம் செலுத்தி, ஹெலிகாப்டர் ஜாய் ரைடு சேவையை நீங்களே அனுபவிக்க முடியும்.

கோடை, பண்டிகை விடுமுறை தினங்களில், உங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசம், குதுாகலமாக அனுபவத்தை வழங்க விரும்பினால், இந்த சேவையை ஒரு முறை பயன்படுத்தி பாருங்களேன்.

இனி வார விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் ஹெலிகாப்டர் சேவைக்கு டிமாண்ட் அதிகம் இருக்கும் என்பதை மறக்காதீங்க... முடிவு பண்ணிட்டீங்களா பறக்க.. அப்ப உடனே புக் செய்யுங்க... 'மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்' என, பாடிக்கிட்டே என்ஜாய் பண்ணுங்க .

ஹலோ ஹலோ இன்னும் பறக்கல.. வெயிட் பண்ணுங்க... புக் பண்ணி, அதுக்கு ஒரு நாளை தேர்வு செய்யனும்ல.. ஒகே ஹேப்பி சம்மர் ஹாலிடேஸ்...

எங்கு எல்லாம் பார்க்கலாம்:

v சென்னை ஈ.சி.ஆர்.,- கோவளம்

v சென்னை சிட்டி ரைடு

v மகாபலிபுரம் ரைடு

v பாண்டிச்சேரி ரைடு

சேவையின் தேவைக்கேற்ப கட்டணங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.

ஹெலிகாப்டர் புக்கிங் உள்பட இதர தகவல்களுக்கு...

Aero Don Heli Station

Aerodon Chopper Pvt., Ltd. (India)

ECR-Kovalam-Chennai

+919003033325

[email protected]

More News

    Read more about: chennai tamilnadu india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+