Search
  • Follow NativePlanet
Share
» »வாங்க போலாம் மான்சூன் உலா?

வாங்க போலாம் மான்சூன் உலா?

அவள் கவர்ச்சியான இடங்களை மட்டும் தன்னுள் புதைத்து வைக்கவில்லை; பழமையான நாகரீகத்தையும் கொண்டிருக்கிறார்கள். வாவ்... சூப்பர் ஏதோ கிளு கிளுப்பாக பேச போறான் என, நீங்கள் நினைச்சுட்டீங்க போல...

இந்தியாவின் கலாசார தலைநகர் என அழைக்கப்படும் 'தமிழ்நாடு' என்ற அந்த பெண்ணை பற்றி உலக நாடுகள் வியந்தும், அவள் அழகில் மயங்கியும் தான் போய் உள்ளனர். சரி விஷயத்துக்கு வருகிறேன்.

கட்டுரை எது குறித்து விவரிக்கப்போகிறது என,'இன்ட்ரோ' பார்த்து இருந்தால் நிச்சயம் கண்டு பிடித்து இருப்பீர்கள். 'ஆட்டுமந்தை' என, ஏன் சொன்னேன் என்று கொஞ்சமாக தெரிந்து, புரிந்து இருக்கும். ஆனால், நேரடியாக இந்த கட்டுரையை படிக்க துவங்கி இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான்; ஆகையால் கொஞ்சம் கீழே படிங்க பாஸ்.

ஆண்டில் ஏதோ ஏப்ரல், மே மாதம் மட்டும் தான் ஓட்டு மொத்த சந்தோஷத்தை வழங்கும் என நினைத்து, குளு குளு இடங்களில் போய் நிற்பீங்க தான். இயற்கையையும், அதன் அழகியலையும் ரசிக்க நினைப்பவர்கள், மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு மாதங்களை நிச்சயமாக தேர்வு செய்ய மாட்டீங்க தானே...!

நீங்களும் அவர்களின் பட்டியலில் சேர விருப்பம் என்றால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், அழகையும், பழமையான நாகரீகத்தையும் புதைத்து வைத்திருக்கும் தமிழ்நாட்டில் இந்த ஐந்து இடங்களுக்கும் ஒரு முறை இப்ப போயிட்டு வாங்க...! அப்ப தெரியும் நான் உங்களை ஏன் திட்டினேன் என்று. அந்த ஐந்து இடங்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்கள் இடம்பெறாமல் இருக்குமா என்ன...

ooty dolphin nose

ஊட்டி

"மலைகளின் ராணி" என்றழைக்கப்படும் இந்த அற்புதமான இடம், 'இயற்கை' என்ற ஆடையை அழகுடன் அணிந்து இருக்கும். நீலகிரி மலையில் அமைந்துள்ள இந்த அழகான இடம், ஆண்டு முழுவதும் பசுமையான சூழலைக் கொண்டுள்ளது.

ஆனால், நான் குறிப்பிட்டிருக்கும் மாதங்களை தவிர்த்து, நான் கூறிய மாதங்களில் போய் தான் பாருங்கள். அப்போது தெரியும் எல்லையற்ற வயல்களில் தேயிலை செடிகளுக்கு இடையில் குளிர்ந்த காற்று உங்கள் மீது மெதுவாக வீசும்.

கொடைக்கானல்

பழனி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல், பனிமூட்டம், தெளிவான ஏரிகள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட குளிர்ந்த பள்ளத்தாக்குகளை தன்னுள் புதைத்து இருக்கிறது. கொடைக்கானல் ஏரியின் வடிவம் ஒரு நட்சத்திர மீனைப் போல இருப்பதால், அருகிலுள்ள பல்வேறு மலைகளை (டெக்கான் ஒடிஸி) கண்டும் காணாத வகையில் அமைந்திருப்பதால், படகு சவாரி மற்றும் சுற்றுலாவிற்கு இது ஒரு பொதுவான இடமாகும். பிரையன்ட் பூங்காவில், அங்கு மட்டும் காணப்படும் பல விசித்திரமான தாவரங்கள் உட்பட பலவிதமான பூக்களைக் காணும்போது, சொர்க்கத்தை அனுபவிக்காமல் இருப்பீர்களா என்ன?

kodaikanal1

குன்னூர்

பழங்கால தோற்றம், அமைதியை தன்னுள் போர்த்தி இருக்கும் பகுதி குன்னுார். நீலகிரி மலையில் அமைந்துள்ள பகுதியை பார்வையிடும் எவரையும் தன் அழகால் ஈர்க்கும். இந்த அழகிய மலைத்தொடரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்கா பல மலைச் சரிவுகளையும், நீரோடைகளையும் உள்ளடக்கியது.

'டால்பின் நோஸ்', கேத்தரின் நீர்வீழ்ச்சி ஊட்டியின் அடர்த்தியான பசுமையை வாரி கொட்டும். நீலகிரி மலை ரயில் வழியாக குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் பயணம், நீலகிரி மலைகளின் அற்புதமான அழகை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, நீங்கள் மறக்க விரும்பாத பயணமாகவும் அமையும்.

yercud

ஏற்காடு

ஏற்காடு என்பது சேவராய் மலையின் உச்சியில் உள்ள ஒரு சிறிய இடமாகும். இங்கு பசுமையான தோட்டங்கள், ஓடும் நீர்நிலைகள் மற்றும் மழை நீர்வீழ்ச்சிகளையும், அவ்வவ்போது காட்டும். ஏற்காடு ஏரியானது படகு சவாரி செய்வதற்கும், நீச்சல் அடிப்பதற்கும் அல்லது அமைதியாக அமர்ந்து இயற்கையின் அழகை ரசிக்கும் இடம்.

அண்ணா பூங்கா, ஒரு பிரபலமான இடம் இல்லை என்றே கூறலாம். இருப்பினும், அழகாக அலங்கரிக்கப்பட்ட மைதானங்கள், ஒவ்வொரு அங்குலத்தைச் சுற்றி வண்ணமயமான மலர்கள், அதற்குள் குழந்தைகள் விளையாடும் சிறிய மைதானம் போல் வீற்றிருக்கிறது.

முறுக்கு பாதையில் நீண்ட தூரம் நடந்து செல்லலாம். இது அருகிலுள்ள பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகளின் அற்புதமான காட்சிகளை தடையின்றி வழங்கும்.

coorg trekking

வால்பாறை

வால்பாறை வணிகமயமாக்கலில் இருந்து இன்னும் வெகு தொலைவில் உள்ளது. ஏனெனில் தமிழ்நாட்டின் ஆனைமலை மலைகளுக்கு மத்தியில் அதன் இருப்பிடம் இப்போது வரை தீண்டப்படாமல் உள்ளது.

வால்பாறை நன்கு அறியப்படாமல் இருக்கலாம்; இருப்பினும் இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அதன் தேயிலை தோட்டங்கள், அருவிகள் மற்றும் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் ஈர்க்கப்படுகின்றனர்.

வால்பாறை வியூபாயின்ட், மலைகள் மீது பனி மேகங்கள் சூழப்பட்ட சிறந்த காட்சிகளை வழங்குகிறது. அலியார் அணை நீர்த்தேக்கம், பிக்னிக் அல்லது இயற்கை நடைப்பயணங்களுக்கு அமைதியான இடமாக விளங்கும் அதே வேளையில், சோலையார் அணை யானது அழகிய சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் பொறியியலின் அழகிய தலைசிறந்த படைப்பாகும். அதை எவராலும் மறக்க, மறைக்க முடியாது.

இந்த ஐந்து இடங்களை, இப்போது போயிட்டு வாங்க வாழ்வில் ஆட்டு மந்தை என்ற பெயரை, ஒரு போதும் எடுக்கவும் மாட்டீர்கள், இருக்கவும் மாட்டீர்கள் என, மார்தட்டி சொல்வீர்கள் ஆட்டு மந்தைகளாக உழலும் மற்ற நபர்களிடம்.... வாங்க போலாம் மான்சூன் அழகை ரசிக்க...!

More News

    Read more about: ooty kodaikanal yercaud
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+