Search
  • Follow NativePlanet
Share
» »ஹம்பி இந்தியாவின் பெருமைமிகு சின்னமான ஹம்பியில் நடைபெறும் உத்சவில் கலந்துக் கொள்ள மறக்காதீர்கள்!

ஹம்பி இந்தியாவின் பெருமைமிகு சின்னமான ஹம்பியில் நடைபெறும் உத்சவில் கலந்துக் கொள்ள மறக்காதீர்கள்!

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்களில் ஒன்றான, இந்தியாவின் பழமையான பெருமைமிகு நினைவுச்சின்னங்களில் ஒன்றான ஹம்பியை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அப்படி இல்லை என்றாலும் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் 50 ரூபாய் நோட்டுக்களின் பின்பக்கத்தை பார்த்தால் ஒரு நினைவுச் சின்னத்தை நீங்களே பார்க்கலாம்! அதுதான் ஹம்பி - கர்நாடாகாவில் அமைந்துள்ள இந்த சுற்றுலாத் தலம் உலகப்புகழ் பெற்றது என்றே சொல்லலாம். இந்த பாரம்பரிய நினைவுச்சின்னத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஹம்பி உத்சவ் 2023 இப்பொழுது நடைபெறவிருக்கிறது. இந்த வண்ணமயமான திருவிழாவில் கலந்துக் கொள்ள உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது! மிஸ் பண்ணி விடாதீர்கள்!

திருவிழாக்களிலேயே மிகப்பெரிய திருவிழா

திருவிழாக்களிலேயே மிகப்பெரிய திருவிழா

ஹம்பி உத்சவ் என்பது மக்கள் தங்கள் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீது வைத்திருக்கும் அன்பை அதன் பிரகாசமான வடிவங்களில் வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும். பண்பாட்டுச் செழுமையான வரலாற்றைக் கொண்ட இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஹம்பி ஆண்டு முழுவதும் பல விழாக்களைக் காண்கிறது. ஹம்பி திருவிழா அல்லது ஹம்பி உத்சவ் ஹம்பியில் கொண்டாடப்படும் அனைத்து திருவிழாக்களிலும் மிகப்பெரியது.

விஜயநகரப் பேரரசின் காலத்தில் இருந்தே நடைபெறும் திருவிழா

விஜயநகரப் பேரரசின் காலத்தில் இருந்தே நடைபெறும் திருவிழா

நீங்கள் ஹம்பிக்குச் செல்ல ஒரு சுவாரஸ்யமான காரணத்தைத் தேடுகிறீர்களானால், இந்த உத்சவில் கலந்துக்கொள்ள நீங்கள் ஹம்பி செல்லலாம். ஹம்பி உத்சவ், வரலாற்று பதிவுகளின்படி, இந்தியாவின் பழமையான கலாச்சார விழாக்களில் ஒன்றாகும், இது விஜயநகரப் பேரரசின் காலத்திலிருந்து நடந்து வருகிறது.

விஜயநகர பேரரசின் சிறப்பையும் பெருமையையும் சிறப்பாகக் கொண்ட ஹம்பியில் தற்பொழுதும் இந்த திருவிழா பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கலாச்சாரமிக்க திருவிழா பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாக இருக்கும்.

உலகெங்கிலும் இருந்து ரசிகர்களை ஈர்க்கும் ஹம்பி திருவிழா

உலகெங்கிலும் இருந்து ரசிகர்களை ஈர்க்கும் ஹம்பி திருவிழா

இந்த பழமையான விஜயநகர சாம்ராஜ்யத்தின் பெருமையை காண பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகிறார்கள். இந்த திருவிழா பண்டைய இராச்சியத்தின் அனைத்து மகத்துவத்தையும் காட்டுகிறது.

மேலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் மற்றும் கலைஞர்கள் ஹம்பியின் அழகிய சிற்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் கலையை வழங்குகிறார்கள். வான வேடிக்கைகள், வண்ண விளக்குகள், அலங்காரங்கள் என ஹம்பி நகரமே விழாக் கோலம் கொள்வதை காண கண் கோடி வேண்டும்.

நிகழ்ச்சியில் காண வேண்டியவை

நிகழ்ச்சியில் காண வேண்டியவை

நகரின் பாதைகளில் குதிரைகள் மற்றும் யானைகளால் நடைபெறும் அணிவகுப்பு மிக பிரமாண்டமாக இருக்கிறது. இதேபோல், இராணுவ உடை அணிந்த ஆண்கள் வெள்ளை, மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு துணியின் கீழ் நிற்கிறார்கள். இது தவிர, இசைக்கலைஞர்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசிக்கிறார்கள், கைவினைஞர்கள் தங்கள் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்துகிறார்கள்.

பொம்மலாட்டங்கள், ஜனபத கலாவாஹினி, நாட்டுப்புற பாடல்களின் கச்சேரி மற்றும் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சிகள் நீங்கள் தவறவிட முடியாத தனித்துவமான ஈர்ப்புகளாகும். மேலும், கர்நாடகாவின் உள்ளூர் உணவுகள் மிகவும் ஆராய வேண்டிய ஒன்றாகும். இந்த சுவையான உணவுகளை ருசிக்க ஹம்பி உத்சவ்வை விட சிறந்த சந்தர்ப்பம் இல்லை.

எப்பொழுது நடைபெறுகிறது?

எப்பொழுது நடைபெறுகிறது?

நாம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஹம்பி உத்சவ் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் திருவிழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது, ஆனால் மாநில அரசு தேதியை (தற்காலிகமாக) ஜனவரி 27-29 என்று மாற்றியுள்ளது. இந்த தேதி மீண்டும் மாற்றினாலும் மாற்றப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

இது துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது மற்றும் பெங்களூரு நகரத்திலிருந்து 373 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, இது ஒரு தொழில்நுட்ப மையமாகவும் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஹோஸ்பேட் ரயில் நிலையம் ஹம்பிக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாகும். பார்வையாளர்கள் ஹம்பியை அடைய ஹோஸ்பேட்டிலிருந்து பேருந்தில் செல்லலாம்.

இந்த வண்ணமயமான கலாச்சார திருவிழாவில் நீங்களும் பங்கேற்கலாம். இப்பொழுதே பிளான் பண்ணுங்கள். பசவண்ணா கோயில், காயத்ரி பீடம், விருபக்ஷேஸ்வரா கோயில் என மூன்று இடங்களையும் கட்டாயம் பார்க்க தவறாதீர்கள்!

More News

    Read more about: hampi utsave
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+