Search
  • Follow NativePlanet
Share
» » வாட்ஸ் அப் செய்தால் போதும் – பிடித்த உணவை ரயில் பயணத்தில் சுவைத்து மகிழலாம்!

வாட்ஸ் அப் செய்தால் போதும் – பிடித்த உணவை ரயில் பயணத்தில் சுவைத்து மகிழலாம்!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குவதில் பல முயற்சிகள் எடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக IRCTC திங்களன்று வாட்ஸ்அப் மூலம் பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகளை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவுகளை வாட்ஸ் அப் மூலம் தெரிவித்தால் போதும், அவர்களுக்கு ரயில் பயணத்திலேயே உணவு வழங்கப்படும். இந்த சேவையை ரயில் பயணிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்!

மேம்பட்ட வசதிகளை வழங்கும் IRCTC

மேம்பட்ட வசதிகளை வழங்கும் IRCTC

நாட்டில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வகையான வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய ரயில்வேயின் PSU, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் ஆன்லைன் முறையில் உணவு வினியோகம் செய்வதற்கு முயற்சிகள் எடுத்து வந்தது.

இந்த வாட்ஸ் அப் எண்ணைத் தொடர்புக் கொள்ளுங்கள்

இந்த வாட்ஸ் அப் எண்ணைத் தொடர்புக் கொள்ளுங்கள்

இந்த சேவையை www.catering.irctc.co.in மற்றும் Food on Track என்ற செயலி மூலம் பெற முடியும். மேலும் இந்த நோக்கத்திற்காக ரயில்வே வணிக வாட்ஸ்அப் எண்ணை +91-8750001323 தொடங்கியுள்ளது. இந்த எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்புக் கொண்டு உங்களுக்கு பிடித்த உணவை நீங்கள் ஆர்டர் செய்யலாம். உங்கள் ரயில் பயணத்தில் நீங்கள் ஆர்டர் செய்த உணவு IRCTC மூலம் உங்களிடம் வழங்கப்படும்.

PNR மூலம் உணவு ஆர்டர்

PNR மூலம் உணவு ஆர்டர்

ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 50,000 உணவுகள் வழங்கப்படுவதாக ரயில்வே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய இரயில்வேயில் பயணிக்கும் நீங்களும், உங்களுடைய PNR எண்ணைப் பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்ளும்போது WhatsApp மூலம் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யலாம்.

எப்படி ஆர்டர் செய்வது?

எப்படி ஆர்டர் செய்வது?

பயணிகள் பயணம் செய்யும் போது வாட்ஸ்அப் மூலம் உணவை எவ்வாறு ஆர்டர் செய்யலாம் என்பது குறித்த செயல்முறையை விளக்கியது. அதன் செயல்முறை மற்றும் அதைப்பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை

o டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, www.ecatering.irctc.co.in என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இ-கேட்டரிங் சேவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வணிக வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வாடிக்கையாளருக்கு ஒரு செய்தி அனுப்பப்படும்.

o வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் இருந்து நேரடியாக ரயில் நிலையங்களில் உள்ள தங்களுக்கு விருப்பமான உணவகங்களில் இருந்து உணவை முன்பதிவு செய்யலாம்.

o இதற்குப் பிறகு, வாட்ஸ்அப் எண் இரு வழி தொடர்பு தளமாக இயக்கப்படும். AI பவர் சாட்போட் பயணிகளுக்கான இ-கேட்டரிங் சேவைகளின் அனைத்து வினவல்களையும் கையாளும்.

o மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்கள் மட்டுமே இது பொருந்தும் மற்றும் வாடிக்கையாளர் கருத்து மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், ரயில்வே மற்ற ரயில்களிலும் இதை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் அடுத்த முறை ரயிலில் செல்லும் போது, இப்படி வாட்ஸ் அப் மூலமாக உணவு ஆர்டர் செய்த சுவைத்துப் பாருங்கள்!

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+