Search
  • Follow NativePlanet
Share
» »என்னத்துக்கு இவ்ளோ நாள் நாம இந்தியாவுல இருக்கோம்?!

என்னத்துக்கு இவ்ளோ நாள் நாம இந்தியாவுல இருக்கோம்?!

By Super Admin

இவ்ளோ நாள் இந்தியாவுல இருந்து என்ன பிரயோசனம்?...இந்த மாதிரி இன்னும் எத்தனை இடங்கள் நம்ம நாட்டுல இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாம்?!

13500 அடி உயரத்தில் தொங்குபாலம், ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில் என்று நம்ம இந்தியாவிலேயே எத்தனையோ இடங்கள் அதிகம் அறியப்படாமல் இருக்கின்றன.

அந்த வகையில் ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாக 40 சுற்றுலாத் தலங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

நூப்ரா பள்ளத்தாக்கு

நூப்ரா பள்ளத்தாக்கு

கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில் அமைந்துள்ள நூப்ரா பள்ளத்தாக்கு, 'பூக்களின் பள்ளத்தாக்கு' என்று பொருள்படும் 'ல்டும்ரா' என்று அழைக்கப்படும் பெயருயுடையதாகும். கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண பூக்களின் அணிவகுப்பைக் காண முடியும். இந்தப் பள்ளத்தாக்கு பகுதி லடாக் தலைநகர் லேவிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ளது.

படம் : John Hill

3 லட்சம் ஆண்டுகள் பழமையான குகைகள்!!!

3 லட்சம் ஆண்டுகள் பழமையான குகைகள்!!!

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ராய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பீம்பேட்கா குகைகள் 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது ஆகும். ங்கு காணப்படும் 30, 000 ஆண்டுகள் பழமையான 'பாலியோலித்திக்' வகை ஓவியங்கள் அக்கால மக்களின் வேட்டை, நடனம் மற்றும் அவர்களின் பல்வேறு வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் விதமாக இன்றும் நம்மிடையே இருக்கன்றன.

மேலும்...

படம் : Rakesh.roushan

ஆலி

ஆலி

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஆலியில் ஆசியாவிலேயே மிகவும் நீளமான மற்றும் உயரமான கேபிள் கார் வசதி சுமார் 5 கிலோமீட்டர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. கோண்டோலா என்று அழைக்கப்படும் இந்த கேபிள் கார்களில் 13500 அடி உயரத்தில் உங்கள் காதலரோடு செல்லும் திரில்லிங் பயணத்தை உங்களால் மறக்கவே முடியாது.

உங்கள் கணவன் (அ) மனைவியோடு செல்லவேண்டிய இடங்கள்!

படம் : Mandeep Thander

காரகோரம்

காரகோரம்

லடாக் பகுதியின் கம்பீரக் கவர்ச்சிக்கு காரகோரம் மலைத்தொடர் முக்கிய காரணமாகும். பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மலைத்தொடர் காரகோரம். உலகிலேயே எவரெஸ்டுக்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள 'கே2' சிகரம் இம்மலைத் தொடரில் தான் அமையப்பெற்றுள்ளது.

படம் : Libor uher

த்ராஸ் பள்ளத்தாக்கு

த்ராஸ் பள்ளத்தாக்கு

ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் த்ராஸ் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.

மேலும்...

முன்ஷியாரியின் பனிமூடிய சிகரங்கள்

முன்ஷியாரியின் பனிமூடிய சிகரங்கள்

முன்ஷ்யாரி எனும் இந்த பனிமலை பிரதேசம் உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் நகரிலிருந்து 127 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மஹேஷ்வர் குண்ட் மற்றும் தம்ரி குண்ட் ஆகிய ஏரிகள் இந்த இடத்தை சூழ்ந்துள்ளன. கோரி கங்கா எனும் ஆறும் இப்பகுதியில் உற்பத்தியாகிறது. இங்கு அமையப்பெற்றுள்ள முன்ஷ்யாலி புக்யால் என்று அழைக்கப்படும் காட்டு மலர்கள் நிரம்பிய பரந்த புல்வெளிப்பிரதேசம் பயணிகளை வெகுவாக கவர்கிறது.

படம்

கிரேம் லியாத் ப்ராஹ்

கிரேம் லியாத் ப்ராஹ்

மேகாலயா மாநிலத்தின் ஜெயின்டியா மலைப்பகுதியில் கிரேம் லியாத் ப்ராஹ் குகை அமைந்துள்ளது. 31 கி.மீ நீளம் கொண்ட இந்தக் குகை இந்தியாவின் நீளமான குகையாக கருதப்படுகிறது. இதேபோல அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் எண்ணற்ற குகைகள் மேகாலயா மாநிலத்தில் நிறைய காணப்படுகின்றன. அவற்றில் சில குகைகள் உலகின் மிக நீளமான மற்றும் மிக ஆழமான குகைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றன.

படம் : Biospeleologist

அந்தமானின் பவழப்பாறைகள்

அந்தமானின் பவழப்பாறைகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பவழப்பாறைகளை ரசிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் போவதுகூட தெரியாது. அதிலும் குறிப்பாக ஜாலி பாய் தீவில் சிறிய படகுகளில் பயணம் செய்து இந்தப் பவழப்பாறைகள் கண்டு ரசிக்க முடியும். இந்த சிறு படகுகளின் அடிப்பாகம் ஃபைபர் கண்ணாடியால் ஆனவை என்பதால் நீருக்கு அடியில் காணப்படும் பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் தெளிவாக பார்க்கலாம்.

படம் : Ritiks

ஷான்ஸ்கர் பள்ளத்தாக்கு

ஷான்ஸ்கர் பள்ளத்தாக்கு

ஜம்மு & காஷ்மீர் மநிலத்தின் வடக்கு பகுதியில் கார்கில் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷான்ஸ்கர் கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டு தோறும் சுமார் 8 மாதங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு உலகின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு விடும். 4.401 மீ மற்றும் 4.450 மீ வரையிலான உயரத்தில் அமைந்துள்ள இரண்டு சிறிய ஏரிகள் இப்பகுதியில் உள்ளன. சுற்றுலாப் பயணிகளை அதிக அளவிள் கவரும் டிராங் - டரங் பனியாறு ஷான்ஸ்கர் செல்லும் வழியில் காணப்படுகின்றது. சுரு பள்ளத்தாக்கின் மத்தியில் உள்ள இந்த இடம், கார்கில் மற்றும் கம்பீரமான இமயமலையின் அழகான காட்சியை நமக்கு அளிக்கின்றது.

படம் : Corto Maltese 1999

மாஜூலி தீவு

மாஜூலி தீவு

அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த தீவுப்பகுதி உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவு எனும் பெருமையை பெற்றிருக்கிறது. இந்தத் தீவு முற்காலத்தில் 1250 ச.கி.மீ பரப்பளவில் இருந்திருக்கிறது. இருப்பினும் நீர் அரிப்பின் காரணமாக இதன் பரப்பளவு கணிசமாக குறைந்து தற்போது 421.65 ச.கி.மீ பரப்பளவில் மட்டுமே காணப்படுகிறது. ஜோர்ஹாட் எனும் இடத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள இந்த மாஜூலி தீவிற்கு ஃபெர்ரி போக்குவரத்து படகுகள் மூலம் சென்றடையலாம்.

படம் : Kalai Sukanta

சங் லா கணவாய்

சங் லா கணவாய்

லடாக்கின் தலைநகர் லேவிலிருந்து பாங்காங் செல்லும் பாதையில் சங் லா கணவாய் அமைந்துள்ளது. இது உலகிலேயே 3-வது உயரமான வாகனப் போக்குவரத்து சாலையாக அறியப்படுகிறது.

படம் : SlartibErtfass der bertige

ஹல்தியாவின் கங்கா கழிமுகப் பகுதி

ஹல்தியாவின் கங்கா கழிமுகப் பகுதி

சுந்தர்வன கழிமுகப் பகுதி அல்லது கங்கா-பிரம்மபுத்திரா கழிமுகப் பகுதி என்று அழைக்கப்படும் இந்த கழிமுகப் பகுதி (டெல்டா பகுதி) உலகின் மிகப்பெரிய கழிமுகப் பகுதியாக அறியப்படுகிறது. இந்த கழிமுகப் பகுதி கங்கா, பிரம்மபுத்திரா, பத்மா, ஹூக்ளி, யமுனா ஆகிய ஐந்து மிகப்பெரிய நதிகளால் உருவானது ஆகும்.

படம்

ஜெய்சல்மேரின் சாம் மணற்குன்றுகள்

ஜெய்சல்மேரின் சாம் மணற்குன்றுகள்

சாம் மணற்குன்றுகள் ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 42 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த குன்றுகளின் நிழல் தோற்றத்தை பார்த்து ரசிப்பதற்கு சூரியன் மறையும் மாலை நேரம் மிகப்பொருத்தமானதாகும். மணற்குன்றுகளின் மத்தியில் ஜீப் மற்றும் ஒட்டக சவாரி, சொக்கப்பனை நிகழ்ச்சிகள் போன்றவை இங்கு பயணிகளுக்காய் காத்திருக்கும் புதுமையான அனுபவங்கள். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இப்பகுதியில் பாலைவனத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அச்சமயம் இந்தப் பகுதியே ஒரு பாரம்பரிய பண்பாட்டு மையமாய் உருமாற்றம் பெறுகிறது. பொம்மலாட்ட நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடனங்கள், ஒட்டகப்பந்தயங்கள் மற்றும் திறந்தவெளி நிகழ்த்துகலை வடிவங்கள் யாவும் பாலைவனத் திருவிழாவின் முக்கியமான சிறப்பம்சங்களாகும்.

படம் : sushmita balasubramani

புஷி அணை

புஷி அணை

மகாராஷ்டிராவின் பிரபலமான மலைவாசஸ்தலமான லோனாவலாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் புஷி அணை, பிரசித்தி பெற்ற மழைக் கால சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

மேலும்...

பேலம் குகைகள்

பேலம் குகைகள்

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பேலம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது இந்த திகிலூட்டும் பேலம் குகைகள். நீங்கள் இங்கு முதல்முறையாக செல்கிறீர்கள் என்றால் தனியாக எங்காவது சுற்றித் திரிந்து மாட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில் 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகையில் உங்களை எங்கென்று தேடுவது?!

மேலும்...

விசாகப்பட்டணம் பீச் லைன்

விசாகப்பட்டணம் பீச் லைன்

வங்காள விரிகுடாவின் நீண்ட பீச் லைனுடன் 40 கி.மீ நீளத்துக்கு நீண்டு கிடக்கிறது விசாகப்பட்டணத்தின் மரைன் டிரைவ். கைலாசகிரியிலிருந்து, விசாகப்பட்டணம் செல்லும் கடற்கரைச் சாலை கவின் கொஞ்சும் அழகுடன் காட்சியளிக்கிறது. ஒரு பக்கம் பசுமையான கிழக்கு தொடர்ச்சி மலைகள், மறுபக்கம் வங்காள விரிகுடா என்று இந்த கடற்கரைச் சாலையில் பயணிப்பது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.

இந்தியாவின் அட்டகாசமான 8 கடற்கரை சாலைகள்!

பளிங்குக்கல் பாறைகள், ஜபல்பூர்

பளிங்குக்கல் பாறைகள், ஜபல்பூர்

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரின் பேடகாட் எனும் பகுதியில் இந்த பளிங்குக்கல் பாறைகள் காணப்படுகின்றன. இப்பளிங்குக்கல் பாறைகள், நர்மதா நதியின் இருமருங்கிலும் சுமார் 100 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கின்றன. சூரியனின் மின்னும் பொற்கதிர்கள் இந்த வெள்ளை மற்றும் பழுப்பு நிறப் பாறைகளின் மீது படும்போது இவை நதி நீரில் ஒரு நிழலுருவைப் படரச்செய்கின்றன. இக்காட்சி காணத் தெவிட்டாத எழில்மிகு காட்சியாகும். தண்ணென்ற நிலவொளி பாறைகள் மேல் விழும் அதே சமயத்தில் நதியிலும் பட்டு ஜொலிக்கும் போது பேடகாட் மற்றும் அதன் பளிங்குப் பாறைகள், பல மடங்கு அழகுடன் காணப்படுகின்றன.

அச்சமயத்தில் இங்கு படகுச் சவாரி செய்வது வாழ்வின் பொற்கணமாகும்.

படம் : Sandyadav080

கார்டுங் லா கணவாய்

கார்டுங் லா கணவாய்

18380 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கணவாய் தான் உலகத்திலேயே மிகவும் உயரமான வாகனப் போக்குவரத்து சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணவாய், லடாக் மற்றும் காரகோரம் மலைத்தொடருக்கு மத்தியில் அமைந்துள்ளது.

படம் : Michael Day

ஹாசனாம்பா கோயில்

ஹாசனாம்பா கோயில்

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரத்தில் அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்துவிடப்படுகிறது. புராணக் கூற்றின் படி சப்த (ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலிருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் 3 கன்னியர் புத்து வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் மூன்று கிணறுகளாக 3 கன்னியர்களும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.

மேலும்...

வரந்தா மலைத்தொடர்கள்

வரந்தா மலைத்தொடர்கள்

புனேவிலிருந்து 108 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்திருக்கிறது வரந்தா மலைத்தொடர்கள். இந்த பகுதி முழுக்க அடர்த்தியும் பசுமையான காடுகள், உயரச் சிகரங்கள், விலங்குகள், அருவிகள் என்று தாராளமாக இயற்கை அன்னை எல்லையில்லா வளங்களை அள்ளித் தெளித்திருக்கிறது.

மேலும்...

உலகின் 2-வது மிகப்பெரிய வில்லணை

உலகின் 2-வது மிகப்பெரிய வில்லணை

உலகிலேயே 2-வது மிகப்பெரிய வில்லணையாக அறியப்படும் 'இடுக்கி வில்லணை', பெரியார் ஆற்றின் குறுக்கே, குருவமலை மற்றும் குறத்திமலை என்ற இரு மலைகளை இணைத்து அதி பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

மேலும்...

மாமல்லபுரம் சமநிலை பாறை

மாமல்லபுரம் சமநிலை பாறை

மாமல்லபுரத்தில் காணப்படும் இந்த சமநிலை பாறை 'கிருஷ்ணாவின் வெண்ணைப்பந்து' என்று அழைக்கப்படுகிறது. பைசாவின் சாய்ந்த கோபுரம் போலவே எப்படா விழப்போகுது என்பது போன்றே தோற்றமளித்து கொண்டிருக்கிறது இந்தப் பாறை. இதே போன்ற பாறைகள் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரிலும், கன்ஹா தேசிய பூங்காவிலும் காணப்படுகின்றன.

படம் : Procsilas Moscas

மணாலி-லே பாதை

மணாலி-லே பாதை

மணாலி-லே பாதையை 'ஆஃப் ரோடு' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அதாவது இந்தச் சாலை குண்டும் குழியுமாக ஒழுங்கற்றதாக ஒரே ஒரு லாரி மட்டுமே போகக்கூடியதான அளவில் இருக்கிறது. இதில் ஒரு பக்கம் வானுயர மலைகள், மறுபக்கம் அதல பாதாளம். எனவே கீழே விழுந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது என்தால் இந்தப் பாதை மரணப் பாதை என்றே வர்ணிக்கப்படுகிறது.

படம் : Woudloper

ரிஷிகேஷ் கங்கா!

ரிஷிகேஷ் கங்கா!

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கை நதியில் வெள்ளை நீர் சவாரி செய்வது சாகசத்தின் உச்சம் என்று சொல்லலாம். இங்கு 5 நிலைகளில் பயணிகள் வெள்ளை நீர் சவாரியில் ஈடுபடுகின்றனர். அதாவது சிறிய அலைகளில் சவாரி, மிதமான அலைகள், கடினமான அலைகளில் சவாரி, கடினமான அலைகள் மற்றும் நெருக்கடியான பாதை, மிகக்கடுமையான அலைகள் என்று படிப்படியாக 5 நிலைகளில் இந்த வெள்ளை நீர் சவாரியில் நீங்கள் ஈடுபடலாம்.

படம் : AbinoamJr

நீம்ரானா கோட்டை

நீம்ரானா கோட்டை

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள நீம்ரானா கோட்டையில் ஜிப்லைனிங் செய்வது சிலிர்ப்பூட்டும் சாகசம். அதாவது மொத்தம் 2 கி.மீ நீளம் போடப்பட்டிருக்கும் ஜிப்லைனில் நீங்கள் செல்லுபோது உங்களுக்கே கீழே ராஜஸ்தானின் கோட்டைகளும், கொத்தளங்களும் மிகச் சிறியதாக தெரியும். இவ்வளவு உயரத்தில் ஜிப்லைன் செய்வது ஆபத்தானது என்றாலும் உலகத் தரமான உபகரணங்களும், நன்கு பயிற்சி பெற்ற உதவியாளர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இந்த ஜிப்லைன் பயணத்தை முடிப்பதற்கு நீங்கள் 2 மணி நேரம் ஆகாயத்தில் மிதக்க வேண்டும்.

படம் : Zooz gunner

லோனாவலா

லோனாவலா

மஹாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து 89 கி.மீ தூரத்திலும், புனேயிலிருந்து 64 கி.மீ தொலைவிலும் லோனாவலா மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. இந்த கவின் கொஞ்சும் மலைவாசஸ்தலம் சந்தடி மிகுந்த நகரச் சூழலிலிருந்து முற்றிலும் விலகி, வருடம் முழுவதுமே மாசற்ற சுற்றுப்புறச்சூழல், தூய்மையான காற்று, இனிமையான பருவநிலை ஆகியவற்றை தன்னுள் கொண்டுள்ளதால் ஒரு பிணிதீர்க்கும் ஓய்வுஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. இதன் காரணமாக இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை ஆண்டுதோறும் அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

படம் : Ravinder Singh Gill

ட்சோமோரிரி ஏரி

ட்சோமோரிரி ஏரி

லடாக்கின் வடக்கே ஜம்மு காஷ்மீரின் சங்தாங் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 4,595 மீட்டர் உயரத்தில் ட்சோமோரிரி ஏரி எழிலுடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஏரியைச் கோடை காலத்தில் சுற்றிப் பார்ப்பதே சிறந்தது.

படம் : Jochen Westermann

ஜோஜி லா கணவாய்

ஜோஜி லா கணவாய்

தேசிய நெடுஞ்சாலை 1D அல்லது ஸ்ரீநகர்-லே ஹைவேயில் ஜோஜி லா கணவாய் அமைந்துள்ளது.

படம் : Yogeshgupta26

சிரபுஞ்சி வேர்ப்பாலம்

சிரபுஞ்சி வேர்ப்பாலம்

மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் காணப்படும் இந்த வேர்ப்பாலம் ரப்பர் மரத்தின் வேர்களால் உருவானது. மேகாலயாவின் பழங்குடியினரான 'வார்-காசிஸ்' மக்கள்தான் முதன் முதலில் இந்த வேர்ப்பாலத்தின் மூலம் ஆற்றை கடக்க ஆரம்பித்தனர். இதன் பின்னர் இப்பகுதி மக்கள் ரப்பர் மரங்களில் செயற்கையாக வேர்ப்பாலங்களை உருவாக்க தொடங்கினர். அதாவது பாக்கு மரத்தின் தடித்த பாகத்தை துளையிட்டு அதில் ரப்பர் மர வேர்களை நுழையச்செய்து அது அப்பக்கம் வளர்ந்து சென்ற பிறகு மண்ணுக்குள் செல்கிறது. இதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு பயணிக்க தகுதியான, உறுதியான வேர்ப்பாலமாக இது மாறிவிடும்.

சிரபுஞ்சியின் சுற்றுலாத் தலங்கள்

லொனார் விண்கல் பள்ளம்

லொனார் விண்கல் பள்ளம்

லொனாரின் விண்கல் பள்ளம் தான் உலகிலேயே தீக்கல் பாறை வகைகளில் அமைந்த ஒரே உப்பு நீர் ஏரி ஆகும். அதோடு இந்த விண்கல் பள்ளம் 52,000 அண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டது என்பது இதன் கூடுதல் சிறப்பு. இங்கு மயில், வாத்து, ஆந்தை, சிவப்பு மூக்கு ஆள்காட்டி போன்ற பறவைகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் லொனார் ஏரியே கவின் கொஞ்சும் காட்சிக்கு சொந்தமானது. நமது பிரபஞ்சத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் குறித்து அறிய விரும்புபவர்களும், புவியியல் மற்றும் அறிவியல் மீது நாட்டம் கொண்ட பயணிகளும் வாழ்கையில் ஒருமுறையாவது கண்டிப்பாக லொனார் ஏரிக்கு வர வேண்டும்.

மேக்னடிக் ஹில்

மேக்னடிக் ஹில்

உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம். ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம். இந்த மேக்னடிக் ஹில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

மணிகரன் வெந்நீர் ஊற்றுகள்

மணிகரன் வெந்நீர் ஊற்றுகள்

மணிகரன் நகரில் உள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக திகழும் இந்த வெந்நீர் ஊற்றுகளில் ஒன்று ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாராவிலும் மற்றொன்று பார்வதி ஆற்றுப்பகுதியிலும் அமைந்துள்ளது. பார்வதி ஆற்றின் கரையிலுள்ள வெந்நீர் ஊற்று சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த ஊற்று நீரில் பல கதிரியக்க கனிமங்களும் இயற்கையான யுரேனியத் தாதும் கலந்திருப்பது பல ஆராய்ச்சிகளுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரே மலையில் 900 கோயில்கள்!!!

ஒரே மலையில் 900 கோயில்கள்!!!

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷத்ருஞ்சயா எனும் மலைகளில்தான் பாலிதானா கோயில்கள் என்று அறியப்படும் 900 ஜைனக் கோயில்கள் அமைந்துள்ளன. உலகிலேயே 900 கோயில்கள் உள்ள ஒரே மலையாக ஷத்ருஞ்சயா விளங்குகிறது.

மேலும்...

டைகர் ஹில், டார்ஜீலிங்

டைகர் ஹில், டார்ஜீலிங்

2600 மீட்டர் உயரத்தில் இருக்கும் டைகர் ஹில்லிருந்து சூரிய உதயத்தை கண்டு ரசிக்கும் அனுபவம் உன்னதமானது. தொடுவானத்திலிருந்து சூரியன் மெல்லக்கிளம்பி இளஞ்சிவப்பு நிறத்தை வானமெங்கும் பூசியவாறு கஞ்சன்ஜங்கா மலைப்பகுதியை முத்தமிட்டு அதை ஜொலிக்க வைக்கும் அழகு விவரிக்க முடியாதது. அதுமட்டுமல்லாமல் அதிகாலை குளிரை விரட்டி அடித்து உங்களை தீண்டும் தங்க நிற சூரிய ஒளி தரும் உணர்வு அற்புதமானது!

டார்ஜீலிங்கின் சுற்றுலாத் தலங்கள்

கேதாரேஷ்வர் குகை

கேதாரேஷ்வர் குகை

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டையிலுள்ள கேதாரேஷ்வர் குகையில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது. முழுவதுமாக நீரால் சூழப்பட்ட 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

மேலும்...

ரூப்குந்த் லேக்

ரூப்குந்த் லேக்

1942-ஆம் ஆண்டு உத்தரகண்ட்டின் உறைந்த ஏரியான ரூப்குந்த் லேக்கில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் காட்டிலாக்க அதிகாரி ஏரி முழுக்க எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். அதோடு அந்த ஆண்டு கோடை காலத்தில் உருகிய ஏரி இன்னுமின்னும் மனித எலும்புக்கூடுகளை கக்கிக்கொண்டிருந்தது. முதலில் இரண்டாம் உலகப்போரில் இந்தியா நோக்கி வந்த ஜப்பானிய சிப்பாய்களின் எலும்புக்கூடுகள் இவையென்று சொல்லப்பட்டன. ஆனால் அறிவியல் அறிஞர்கள் இந்த எலும்புக்கூடுகள் 9-ஆம் நூற்றாண்டில் இறந்த இந்திய பழங்குடியினரின் கூடுகள் என்று தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

மரவந்தே தேசிய நெடுஞ்சாலை 17

மரவந்தே தேசிய நெடுஞ்சாலை 17

இந்தியாவின் மிக அழகிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக மரவந்தே தேசிய நெடுஞ்சாலை 17 கருதப்படுகிறது. இதன் சிறப்பம்சம் ஒரு பக்கம் சௌபர்னிகா நதியும், மறுபக்கம் மரவந்தே கடர்கரையும் அமைந்திருக்க அவற்றின் இடையே நீண்டு செல்கிறது இந்த நெடுஞ்சாலை. இதே போன்றதொரு சாலையை நீங்கள் இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாது.

இந்தியாவின் அட்டகாசமான 8 கடற்கரை சாலைகள்!

கர்ணி மாதா கோயில்

கர்ணி மாதா கோயில்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஒரு எலிக்கோயிலில்தான் ராக்கெட்டை கடத்தி வைத்திருப்பார்கள். அதேபோல ராஜஸ்தானின் தேஷ்நோக் கிராமத்தில் அமைந்திருக்கும் கர்ணி மாதா கோயிலும் எலிக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் கபாஸ் என்று அழைக்கப்படும் 20,000-க்கும் மேற்பட்ட எலிகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது. இங்குள்ள எலிகள் அனைத்தும் 'சரண்ஸ்' எனும் பெயர்கொண்ட கர்ணி மாதாவின் எதிர்கால குழந்தைகளின் ஆன்மாக்களை சுமந்து கொண்டு திரிவதாக தேஷ்நோக் கிராமத்தை சேர்ந்த மக்கள் நம்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் பக்தர்களின் கால் பாதங்களில் இந்த எலிகளின் ஸ்பரிசம் படுவது நற்பேற்றின் அடையாளமாக நம்பப்படுகிறது.

மேலும்...

பாந்த்ரா-வோர்லி சீ லிங்க்

பாந்த்ரா-வோர்லி சீ லிங்க்

இந்தியாவின் மிக நீண்ட பாலமான பாந்த்ரா-வோர்லி சீ லிங்க் ரூபாய் 1600 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி சீ லிங்க் என்றும் அழைக்கப்படும் இந்தப் பாலம் பாந்த்ரா மற்றும் வோர்லி பகுதிகளுக்கு இடையே கடல் நீருக்கு மேலே 5600 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பு 1 மணிநேரமாக இருந்த பாந்த்ரா-வோர்லி இடையேயான பயண நேரம் தற்போது 20 நிமிடங்களாக குறைந்துள்ளது. 2009-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தப் பாலத்தை தினமும் 37,500 வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்தப் பாலத்தில் மொத்தம் 8 இடைவழிகள் இருக்கின்றன. இதுபோல இடைவழிகள் கொண்ட பாலங்கள் கட்டுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்தியாவில் அதிகமாக இதுபோன்ற பாலங்கள் கட்டப்படுவதில்லை. அப்படியிருந்தும் 8 இடைவழிகளுடன் உருவாக்க்கப்பட்டிருக்கும் மும்பை ஸீ லிங்க் ஒரு கட்டிடக் கலை அதிசயம்!

நோகலிகை நீர்வீழ்ச்சி

நோகலிகை நீர்வீழ்ச்சி

ஒவ்வொரு வருடமும் பெய்யும் அபரிமிதமான மழைப்பொழிவுக்கு பெயர் போன சிரபுஞ்சியில் அமைந்துள்ள நோகலிகை நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த அருவி டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான வறண்ட காலத்தின் போது குறிப்பிடத்தக்க அளவு வறண்டு போய் காணப்படும். எனவே மழைக்காலங்களில் இந்த அருவிக்கு சுற்றுலா வருவதே சிறப்பானதாகும்.

சிரபுஞ்சியின் சுற்றுலாத் தலங்கள்

மனதை கொள்ளைகொள்ளும் 50 அரண்மனைகள்!!!மனதை கொள்ளைகொள்ளும் 50 அரண்மனைகள்!!!

பாம்பே படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?பாம்பே படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?

நம்ம தமிழ்நாடு எவ்வளவு அழகானது தெரியுமா?நம்ம தமிழ்நாடு எவ்வளவு அழகானது தெரியுமா?

தேக்கடி அருகேயிருக்கும் சூப்பர் இடங்கள்!!தேக்கடி அருகேயிருக்கும் சூப்பர் இடங்கள்!!

செஞ்சி கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்செஞ்சி கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

கூர்க் சுற்றுலாவின் போது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள்கூர்க் சுற்றுலாவின் போது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள்

குதுப்மினார் - கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் சுற்றுலாகுதுப்மினார் - கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் சுற்றுலா

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X