Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவை பற்றி எவ்வளவு தெரியும் உங்களுக்கு ?

இந்தியாவை பற்றி எவ்வளவு தெரியும் உங்களுக்கு ?

உலகத்திலேயே வைத்து ஒரு நாட்டு மக்கள் அவர்களின் நாட்டுக்குள்ளேயே ஒரு வெளிநாட்டவர் போல இருக்க முடியும் என்றால் அது இந்தியாவில் மட்டும் தான். 1600க்கும் மேற்பட்ட மொழிகள், சுட்டெரிக்கும் பாலைவனமும், உறையவைக்கும் குளிர் நிலவும் மலைப்பிரதேசங்கள், பலதரப்பட்ட மதங்கள், 10,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை என வேற்றுமைகளின் கூட்டு ஆன்மா தான் இந்தியா என்னும் தேசம்.

நீங்கள் இந்தியாவில் இருப்பவரோ, வெளிநாட்டில் இருப்பவரோ வர்ணிக்க முடியாத வாழ்வியல் அனுபவங்களை பெற ஆசையிருந்தால், வாழ்க்கையையே மாற்றிப்போடும் பயணம் செல்ல வேண்டும் என உந்துதல் இருந்தால் தன்னை நோக்கிய உங்களின் முதல் அடிக்காக இந்திய பெருங்கண்டம் எப்போதும் காத்திருக்கிறது. வாருங்கள், இந்தியாவினுள் நாம் ஏன் பயணிக்க வேண்டும் என்பதற்கான சுவாரஸ்யமான காரணங்களை அறிந்து கொள்வோம்.

goibibo தளத்தில் ஹோட்டல்கள் மற்றும் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து 65% தள்ளுபடி பெற்றிடுங்கள்

இந்தியாவின் பழமை:

இந்தியாவின் பழமை:

நவீன உலகம் நாகரீகம் மற்றும் அறிவியல் ரீதியாக மனிதகுலம் வேறெப்போதும் அடைந்திராத வளர்ச்சியை அடைந்து விட்டதாக நாம் நினைக்கலாம். ஆனால் இன்றைய நவீன அறிவியலால் இன்னமும் புரிந்து கொள்ள முடியாத புதினமாகவே இந்திய தேசம் விளங்குகிறது.

Photo:Vinoth Chandar

இந்தியாவின் பழமை:

இந்தியாவின் பழமை:

ஒரு பயணியாக நீங்கள் இந்தியாவின் ஊடாக பயணிக்கையில் அங்குள்ள மக்களின் சில நம்பிக்கைகளின் வேர்கள் எங்கே தோன்றின என்பதையே கண்டுபிடிக்க முடியாத அளவு பழமையானவை அவை.

photo:Vinoth Chandar

இந்தியாவின் பழமை:

இந்தியாவின் பழமை:

வரலாற்று காலம் முழுவதும் எப்போதும் வேற்று நாட்டு மன்னர்களின் படையெடுப்புகள், போர்கள் போன்றவை இருந்து கொண்டே இருந்தாலும் அவைகளையும் மீறி தென் இந்தியாவில் சில கோயில்களில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இடைவிடாது சில பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

Photo:Vinoth Chandar

இந்தியாவின் பழமை:

இந்தியாவின் பழமை:

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் ராமேஸ்வரம் ராமலிங்கேஸ்வரர் சுவாமி கோயில்களில் அப்படிப்பட்ட தொன்மையான பூஜை முறைகளையும், சடங்குகள் செய்யப்படுவதையும் காண முடியும்.

Photo:Prabhu B Doss

இந்தியாவின் பழமை:

இந்தியாவின் பழமை:

வரலாற்று அறிஞர்கள் இந்தியாவின் பழமையை பற்றி இப்படி குறிப்பிடுவதுண்டு "ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மனிதர்கள் விலங்குகளுக்கு இணையாக காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் போது இங்கே சான்றோர் சங்கம் வைத்து தன் மொழி வளர்த்திருக்கின்றனர்". இந்தியர் அனைவரும் நினைத்து பெருமையும், செருக்கும் கொள்ள வேண்டிய விஷயம் அதன் பழமையாகும்.

Photo:Vinoth Chandar

இந்திய உணவுகள்:

இந்திய உணவுகள்:

இந்தியாவில் நீங்கள் பயணம் செய்கையில் உங்கள் வாழ்கையில் இதுவரை சாப்பிட்டிருக்காத அதிசுவையான உணவுகளை சாப்பிடலாம். விதவிதமான மசாலாக்கள், நெய், பன்னீர், வெண்ணை போன்ற பால் பொருட்களை கொண்டு செய்யப்பட்ட விதவிதமான உணவுகள் தெரு ஓரக்கடைகளிலும் கிடைக்கும். பட்டர் சிக்கன் மற்றும் மசாலா தோசை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளால் மிகவும் விரும்பப்படும் உணவுகள் ஆகும்.

Photo:bour3

இந்திய உணவுகள்:

இந்திய உணவுகள்:

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த இடத்திற்குரிய பிரத்யேக உணவு வகைகள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் செட்டிநாடு மற்றும் மதுரை உணவுகள், கேரளாவில் கோழிக்கோடு மலபார் உணவுகள், கர்நாடகாவில் உடுப்பி உணவுகள், பஞ்சாபி தாபாக்கள், தில்லியில் சாந்தினி சவுக் வீதி உணவுகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்திய உணவுகள்:

இந்திய உணவுகள்:

எனவே இந்தியாவில் ஏதேனும் ஒரு இடத்திற்கு சுற்றுலா சென்றால் அங்கு கிடைக்கும் அந்த இடத்திற்கே உரிய பிரத்யேக உணவை சுவைக்க மறந்து விடாதீர்கள்.

இந்திய விருந்தோம்பல்:

இந்திய விருந்தோம்பல்:

இந்தியாவில் நாம் எங்கு பயணித்தாலும் அன்பாக உபசரிக்கும் மக்கள் நமது பயணத்தை மேலும் இனிமையாக்குகின்றனர். உணவருந்த போகும் ஹோட்டல்களிலும் சரி அல்லது இந்திய கிராமம் ஒன்றிற்கு சென்றாலும் சரி தங்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளியை போல கவனித்து கொள்வார்கள். இம்மாதிரியான மக்களின் அன்பை மேம்பட்ட ஐரோப்பாவிலும் நாம் காண முடியாது.

இந்திய திருவிழாக்கள்:

இந்திய திருவிழாக்கள்:

இந்திய திருவிழாக்களை விட வண்ணமயமான வேறு விஷயம் இருக்க முடியாது. அதிலும் ஜனவரி மாதத்தில் இந்தியா முழுக்கவும் அறுவடை திருவிழாக்கள் பொங்கலிட்டும், பட்டம் விட்டும், பலகாரம் செய்தும் கொண்டாடுகின்றனர். நாம் இந்தியாவிலேயே வாழ்ந்தாலும் அண்டை மாநிலங்களில் இது போன்ற விழாக்கள் நடைபெறும் போது அதில் கலந்துகொள்வது பரவசமான ஒரு அனுபவமாக இருக்கும்.

யோகா & தியானம் :

யோகா & தியானம் :

இன்று உலகம் முழுக்க கலாசார எல்லைகளை கடந்து பலதரப்பட்ட மக்களும் யோகாவை தங்கள் அன்றாட வாழ்வின் அங்கமாக்கி வருகின்றனர். இந்தியாவின் ஆன்மீக தலைநகரமான வாரணாசிக்கு சென்றால் அங்கு சாதுக்கள் உடலை வில்லாக வளைத்து யோகாசனங்கள் செய்வதை பார்க்கலாம். அதேபோல இயற்கை சூழ் ஹிமாலைய மலைக்கு யாத்திரை சென்று ஏகாந்தமாக தனிமையில் தியானம் செய்யலாம். இதனால் மனதும் உடலும் புத்துணர்வு பெரும்.

Photo:Jean Henrique Wichinoski

தாஜ்மஹால்:

தாஜ்மஹால்:

நீங்கள் இந்தியாவிலோ அல்லது உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி தாஜ்மஹாலை வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று பார்த்திட வேண்டும். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக ஆக்ராவில் அமைந்திருக்கும் தாஜ் மஹால் காதல் ஒருவனை எந்த எல்லைக்கும் அழைத்துச்செல்லும் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு.

Photo:Koshy Koshy

சினிமா:

சினிமா:

'சினிமா' இந்த மந்திர சொல் இந்தியாவை கட்டி ஆள்கிறது. பாலிவூட், கோலிவூட், டோலிவூட் என ஹாலிவூட்டுக்கு சவால் விடும் வகையில் வருடம் முழுக்க ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தங்கள் ஆதர்ச நடிகரை கடவுளுக்கு இணையாக வைத்து கொண்டாடும் ரசிகர்கள் ஏராளமானவர்களை நாம் அந்த பிரபலமான நடிகரின் புதிய படத்தின் முதல் நாள் முதல் ஷோவின் போது பார்க்கலாம்.

இந்தியா!!

இந்தியா!!

புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளவும், அனுபவப்படவும் ஒருவர் உண்மையாக விரும்பினால் அவருக்கு இந்தியா ஒரு புதையல். நீங்கள் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அதன் ஊடாக பயணிக்கையில் நாம் இதுவரை அறிந்திராத இந்தியாவை காணலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X