Search
  • Follow NativePlanet
Share
» »அசாத்திய மன தைரியம் இருந்தால் மட்டுமே செல்ல முடிகிற இந்தியாவின் டாப் 10 பேய் நகரங்கள்

அசாத்திய மன தைரியம் இருந்தால் மட்டுமே செல்ல முடிகிற இந்தியாவின் டாப் 10 பேய் நகரங்கள்

நினைத்த உடன் அனைவராலும் சென்று விட முடியாத படு பயங்கரமான நகரங்களும் இந்தியாவில் இருக்கின்றன. அசாத்திய மனம் தைரியம் இல்லாதவர்கள் இங்கு சென்றால் நடக்கும் சம்பவங்களுக்கும், உயிருக்கம் உத்திரவாதம் கிடையாது என்னும் அளவிலான நகரங்கள் தான் இவைகள். பேய்கள் அதிகம் நிறைந்துள்ளதாக சொல்லப்படும் பயங்கரவாத நகரங்கள் இந்தியாவில் எங்கெல்லாம் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

haunted place

பங்கர் கோட்டை, ராஜஸ்தான்

பங்கர் கோட்டை ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.17ஆம் நூற்றாண்டில் மதிர்சிங் என்பவரால் கட்டப்பட்டது. இது தற்போது ஒரு வெறிச்சோடிய நகரமாக உள்ளது.ஒரு மந்திரவாதி அவரது மந்திரம் தோல்வியடைந்ததால், இந்த கோட்டையையும் நகரத்தையும் சபித்து விட்டதாக உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது. இந்தியாவில் பேய் பிடித்த இடமாக இது கருதப்படுகிறது.

குல்தாரா ,ராஜஸ்தான்

குல்தாரா, ராஜஸ்தானின் ஜெய்சல்மீர் அருகே அமைந்துள்ள, இந்தியாவின் பேய் நகரங்களில் ஒன்றாக கருதப்படும் இடமாகும். ராஜஸ்தானின் மர்ம நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இரவில் இங்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பகலில் சென்றால் கூட பகீர் என்று தான் இருக்கும்.

haunted place

ராஸ் தீவு,அந்தமான்

ராஸ் தீவு இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள, வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆனால் இன்று வெறிச்சோடிய ஒரு தீவு. இதை "அந்தமான் மற்றும் நிக்கோபாரின் பேய் நகரம்" என்றும் குறிப்பிடுவர்.தற்போது, நகரத்தின் பெரும்பகுதி இயற்கையால் அழிக்கப்பட்டு, மரங்கள் கட்டிடங்களை சூழ்ந்து விட்டன.

லக்பத், குஜராத்

குஜராத்தின் கச்ச் பகுதியில் அமைந்துள்ள ஒரு வெறிச்சோடிய, மர்மமுள்ள நகரமாகும். ஒரு காலத்தில் பெரிய வர்த்தக மையமாக இருந்தாலும், இன்று முற்றிலும் வெறிச்சோடி உள்ளது.பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தால் இந்த நகரம் ஒரு பாலைவனமாக மாறியது.இங்குள்ள பழமையான கோட்டையின் சுவர்கள், அழிந்த வீடுகள் மற்றும் காலியாகி விட்ட பகுதிகள், சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்க்கும் படியாக உள்ளது.

தனுஷ்கோடி, தமிழ்நாடு

தனுஷ்கோடி, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே அமைந்துள்ள, இந்தியாவின் மிகச்சிறிய நகரங்களில் ஒன்றாகும்.1964-ல் ஒரு பயங்கரமான புயல் இந்த நகரத்தை முற்றிலும் தாக்கி அழித்தது. அதன் பிறகு, இது மனித நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிய இடமாகவே உள்ளது. இங்கு சென்றால் புயலில் அழிந்த பழைய ரயில்வே நிலையம், தேவாலயம், வீடுகள் மற்றும் கடற்கரையை காணலாம். இதை பேய் நகரம் என்றே சொல்கிறார்கள்.

ஃபதேபூர் சிக்ரி, உத்திர பிரதேசம்

ஃபதேபூர் சிக்ரி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள, இந்தியாவின் மிகச் சிறப்பான வரலாற்று நகரங்களில் ஒன்றாகும். முகலாயப் பேரரசர் அக்பர் இந்த நகரத்தை 16ஆம் நூற்றாண்டில் தனது தலைநகரமாக அமைத்தார்.ஒரு காலத்தில் செழித்து விளங்கிய இந்த நகரம், இன்று ஒரு பாரம்பரிய நினைவுச் சின்னமாக மட்டுமே உள்ளது. இங்கு மக்கள் யாரும் வசிப்பது கிடையாது.

சாரெய்டியோ, அசாம்

அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆனால் மர்மமுள்ள இடமாக சாரெய்டியோ உள்ளது.இது ஆஹோம் அரசர்களின் சமாதி இடம் என அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பான சமாதிகள், எகிப்தின் பிரமிடுகளை ஒத்துள்ளதால், இது "அசாமின் பிரமிடுகள்" என்றும் அழைக்கப்படுகிறது.

ஷெட்டிஹள்ளி தேவாலயம், கர்நாடகா

ஷெட்டிஹள்ளி தேவாலயம், கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஒரு அரிய வரலாற்று நினைவுச்சின்னம் ஆகும். இது "மூழ்கிய தேவாலயம்" என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் மழைக்காலத்தில் இது முழுவதுமாக நீரில் மூழ்கி மறைந்து விடும்.மழைக்காலத்தில் படகு மூலம் சென்று தேவாலயத்தை காணலாம். இது புகைப்பட ஆர்வலர்களுக்கான சிறந்த இடம் ஆகும்.

மண்டு, மத்திய பிரதேசம்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள, இந்தியாவின் மிக அழகான மற்றும் மர்மமுள்ள பேய் நகரங்களில் ஒன்று மண்டு. இதன் கோட்டைகளும், அழகிய அரண்மனைகளும், மர்மமுள்ள கதைகளும் இதை சுற்றுலா பயணிகளுக்கான ஒரு சிறந்த இடமாக மாற்றியுள்ளது.

More News

    Read more about: tamil nadu haunted places
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+