Search
  • Follow NativePlanet
Share
» »ரயில் டிக்கெட் எடுக்க மணிக்கணக்கில் கவுண்டரில் நிற்க வேண்டாம் – UTS செயலி உபயோகப்படுத்தினால் போதும்!

ரயில் டிக்கெட் எடுக்க மணிக்கணக்கில் கவுண்டரில் நிற்க வேண்டாம் – UTS செயலி உபயோகப்படுத்தினால் போதும்!

தினசரி ரயிலில் பயணிப்பவர்களுக்கு, அடிக்கடி தொலைதூரம் ரயிலில் சென்று வருபவர்களுக்கும் மட்டுமே தெரியும், ரயில் டிக்கெட் புக் செய்வது சாமானிய காரியம் இல்லை என்று! அதுவும் சீசன் நேரங்களிலும், பண்டிகை காலங்களிலும் டிக்கெட் முன்பதிவு என்பது அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது. ரயில்வே கவுண்டரில் மணிக்கணக்கில் நின்று இனி டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. UTS செயலியை உபயோகப்படுத்தினால் போதும். சட்டென்று டிக்கெட் புக் ஆகி விடும் மக்களே! இந்த செயலியை உபயோகப்படுத்தி டிக்கெட் புக் செய்வது மிகவும் ஈசி, எப்படி என்று இங்கே பார்ப்போம்!

UTS என்றால் என்ன?

UTS என்றால் என்ன?

முன்பதிவு செய்யாமல் பயணிக்கக் கூடிய ரயில்களில் பயணிப்பதற்கான பயணச் சீட்டு, மாதாந்திர பயணச் சீட்டு, ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் சீட்டு ஆகியவற்றை மொபைல் மூலம் புக் செய்ய இந்தியன் ரயில்வே UTS எனும் செயலியை செயல்படுத்தி வருகிறது. இந்த செயலியை இலவசமாக தரவிறக்கம் செய்து ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி ரயில் பயணச் சீட்டுக்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு டிக்கெட் கவுன்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் தடுக்கிறது.

UTS இன் நன்மைகள்

UTS இன் நன்மைகள்

இந்த மொபைல் செயலியானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட எல்லாவகையான ஸ்மார்ட்போன்களிலும் இயங்குகிறது, இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். R- Wallet, PayTM, Mobikwik போன்ற பேமெண்ட் ஆப் மூலமாகவோ அல்லது இண்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ டிக்கெட்டுகளுக்கான பணத்தை செலுத்தி நீங்கள் டிக்கெட்டுகள் புக் செய்து கொள்ளலாம்.

பயன்பெறும் பயணிகள்

பயன்பெறும் பயணிகள்

அதாவது பயணிகள், UTS எனும் மொபைல் செயலியை கொண்டு முன்பதிவில்லா டிக்கெட்டை தங்கள் செல்போனில் பெறும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலம், முன்பதிவில்லா டிக்கெட் மட்டுமல்லாமல் சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். காகிதமில்லா டிக்கெட் வசதியை அறிமுகப்படுத்துவதற்காக, ரயில்வே நிர்வாகம் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

UTS செயலி மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி

UTS செயலி மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி

1. உங்கள் மொபைல் போனில் UTS செயலியைப் பதிவிறக்கவும்

2. முன்பதிவு டிக்கெட் மெனுவைக் கிளிக் செய்து, நார்மல் புக்கிங்கை தேர்ந்தெடுக்கவும்

3. புறப்படும் நிலையத்தின் பெயர் மற்றும் சேருமிடத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்

4. டிக்கெட் வகையைத் தேர்ந்தெடுக்கவும்

5.இறுதி கட்டணம் செலுத்தவும்

அவ்வளவு தான், உங்களுடைய UTS செயலியில் உங்கள் டிக்கெட்டை நீங்கள் பார்க்கலாம்!

மக்கள் வரவேற்பு

மக்கள் வரவேற்பு

இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை நாடு முழுவதும், கடந்த 10 மாதங்களில் 50.75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாகவும், ரூ. 24.82 கோடி வசூல் ஆகி உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில்வேயின் இந்த புதிய வசதியால், பயணிகள் டிக்கெட்டுக்காக மணி கணக்கில் நிற்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நீங்களும் அடுத்த முறை ரயிலில் பயணிக்கும் முன் UTS செயலியை உபயோகப்படுத்தி டிக்கெட் புக் செய்து பாருங்கள்!

More News

    Read more about: uts app in tamil irctc
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+