Search
  • Follow NativePlanet
Share
» »யோகங்கள் அருளும் யோக ராமர்- எந்த இராசிக்கு தெரியுமா ?

யோகங்கள் அருளும் யோக ராமர்- எந்த இராசிக்கு தெரியுமா ?

பூமியில் இவருக்கு நிகர் எவருமில்லை என அருளும் ராமரின் யோகத் திருநாமத்தை வழிவடுவதால் எந்த ராசிக் காரர்களுக்கு யோகம் ஜொலிக்கும் தெரியுமா ?

By Sabarish

மகாவிஷ்ணு அவதாரங்களில் ராம அவதாரம் பரிபூரணமிக்கதாகும். மனிதர்களிடையே மறைந்துள்ள ஆன்மீகத்தை வெளிப்படுத்துவதற்காக ஸ்ரீமன் நாராயணன் ராமராக அவதரித்ததாக
இலக்கிய வாயிலாக அறியமுடிகிறது. ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்தவராக ராமர் பாவிக்கப்படுகிறார். ராமன் அழகும், நல்ல தோற்றமும் அரச அம்சங்களுடனும் பிறந்தார்.
பூமியில் அவருக்கு நிகர் எவருமில்லை. இத்தகைய இராமரின் யோகத் திருநாமத்தை வழிவடுவதால் எந்த ராசிக் காரர்களுக்கு யோகம் ஜொலிக்கும் தெரியுமா ?

 யோக ராமர்

யோக ராமர்

இவ்வுலகின் தோற்றம் மற்றும் அதன் இயக்கத்திற்கு மூலகாரணமாக திகழ்வது வேதங்களாகும். இத்தகைய வேதத்தை உருவாக்கியது யார் என்ற சந்தேகம் ஒருமுறை அனுமனுக்கு
உண்டானது. இச்சந்தேகத்தை தீர்க்கும் படி ராமனிடம் வேண்டினார் அனுமன். அப்போது, ராமரோ தனது சின்முத்திரை வலது கையை மார்பில் வைத்து அனைத்து உயிர்களுக்குள்ளும்
பரமாத்மா எனும் இறைவன் இருப்பதைப் போல நானே வேதமாகவும், வேதத்திற்குள் அதன் தத்துவமாகவும் இருக்கிறேன் என்றார். இந்த அமைப்பில் அமைந்துள்ள ஒரே தலம்
தென்னிந்தியாவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.

Ms Sarah Welch

 யோகராமர் திருக்கோவில்

யோகராமர் திருக்கோவில்

திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 52 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீ யோக ராமர் திருக்கோவில். இத்தல ராமர் புஷ்பக விமானத்தின் கீழ் அமர்ந்து சின்முத்திரை காட்டிய
வலது கையை மார்பில் வைத்துள்ளார். இதுபோன்ற காட்சி தென்னிந்தியாவில் வேறெங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும்.

Dineshkannambadi

 தல அமைப்பு

தல அமைப்பு


யோக ராமர் திருக்கோவிலின் நேர் எதிரே அனுமன் சன்னதி உள்ளது. முன் மண்பத்தில் விஷ்வக்ஷேனர், நம்மாழ்வார், ஆளவந்தார் உள்ளிட்டோருக்கு திருவுருவம் பிரதிஸ்ட்டை
செய்யப்பட்டுள்ளது. பிரகாரத்தில் வேணுகோபால், அனுமன், பரசுராமர் வீற்றுள்ளனர். கோவிலின் பின் புறத்தில் உள்ள கோட்டை மலையின் மேலே வேணுகோபாலர் கோவில்
அமைந்துள்ளது.

Vassil

 கடல் தீர்த்தவாரி

கடல் தீர்த்தவாரி

இத்தலத்தில் பவுர்ணமி, அமாவாசை மற்றும் புனர்பூச தினங்களில் மூலவருக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். ஆவணி இரண்டாம் வெள்ளிக் கிழமையில் ராமர், சீதை, லட்சுமணணுக்கு
கருட சேவை காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் வழிபட்டு விட்டு மகாபலிபுரம் சென்று கடலில் தீர்த்தவாரி வழிபட்டால் வாழ்நாளில் தீங்கில் இருந்து மோட்சம் உண்டாகும் என பக்தர்களால்
நம்பப்படுகிறது.

KARTY JazZ

 தனித்தன்மைவாய்ந்த தலம்

தனித்தன்மைவாய்ந்த தலம்

அருள்மிகு யோக ராமர் கோயில், நாட்டிலேயே தனிச்சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். வேறெந்த கோவிலுக்கும் இத்தலத்திற்கான சிறப்பு இல்லை. அதாவது அமர்ந்திருக்கும்
நிலையில் அற்புதமான கலையில் கட்டப்பட்ட கோவிலாக இது உள்ளது. குறிப்பாக, இக்கோவிலை விஜயநகர பேரரசர்கள் கட்டியுள்ளதாக கூறப்படுவதால் வரலாற்று சிறப்பு வாய்ந்த
தலமாகவும் இக்கோவில் உள்ளது.

Marcin Konsek

 எந்த ராசிக்கு யோகம்

எந்த ராசிக்கு யோகம்

ஆவணியில் வரும் வளர்பிறை தினத்தன்று திருவண்ணாமலையில் வீற்றுள்ள இத்த ராமரை மிதுனம், சிம்மம், விருச்சிகம் ராசிக்காரர்கள் வழிபடுவதன் மூலம் யோகம் உண்டாகும் என்பது
தல நம்பிக்கை. அன்றைய தினம் மூலவருக்கு நெய் தீபம் ஏற்றி, பாசிப்பயறு, பொங்கல் படைத்து வழிபட்டால் தொழிலில் செழிப்பு உண்டாகும், செல்வம் பெருகும் என்பது தொன்நம்பிக்கை.

Vibhijain

 எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னை, திருச்சி, கோவை, மதுரை என மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும், பெங்களூர் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் திருவண்ணாமலை மாவட்டம் போக்குவரத்தில் நல்ல
முறையில் இணைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரில் இருந்து காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் சேத்துப்பட்டு அடுத்துள்ளது ஸ்ரீ யோப
ராமர் திருக்கோவில்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+